வெள்ளி, 18 நவம்பர், 2016

அறுவை சிகிச்சை வெற்றிதான்.. ஆனால்...

சில  வாரங்களுக்கு முன்பு ஒரு வங்கிப் பெண் ஊழியர் மெதுவாக வேலை செய்யும் காட்சியை தனது தளத்தில் போட்ட ஜெயமோகன் அதை உடனடியாக எடுத்துவிட்டார்.. 

காரணம் அது தவறான புரிதலைத் தந்துவிடும் என்பதால்.  அதைப் போல நான் 13ந் தேதி வெளியிட்ட ரூ 500 மற்றும் 1000 கட்டுரையை எடுத்துவிடலாமா என்று நினைக்கும் அளவிற்கு நாட்டு நடப்புகள் சென்று கொண்டிருக்கின்றன.  நாம் ஒரு விஷயத்தை    முதலில்  சரி என்று நினைக்கிறோம். அதன் பிறகு சந்தேகம் வருவதில் தவறொன்றும் இல்லைதானே.. 

2004 ஜெயேந்திரர் கைதை ஒட்டி உடனடியாக பேட்டி கொடுத்த கலைஞர் சரியான நடவடிக்கை என்றார்.. சில தினங்களில் அதை மாற்றி இதில் ஏதோ சந்தேகம் இருக்கிறது என்றார்.. அதை கேலி செய்து தினமணியில் மதி வரைந்த கார்ட்டூன் பிரபலமாகப் பேசப்பட்டது... கலைஞருக்கே அப்படி என்றால் .... 

சரி தற்போது இந்த 500/1000 விவகாரத்தைப் பார்ப்போம்....

1)நமது அண்டை நாடுகள் வழியாக கள்ளப்பணம் சுற்றுக்கு வருவது உண்மையா இல்லையா.... உண்மைதான்... ஆனால் அவை ஒட்டுமொத்த பணப் புழக்கத்தில் 1 சதம்தான் என்கிறது புள்ளி விவரம்...  1 சதத்திற்கு இப்படியொரு அறுவை சிகிச்சை தேவையா என்கிறார்கள்... உடனே இதனால் தற்போது காஷ்மீர் மாநிலத்தில் 9ந் தேதி முதல் முழு அமைதி வந்துவிட்டது என்கிறது அரசு... 
2)கருப்புப் பணம் அல்லது கணக்கில் காட்டாத பணம் இதனால் 8ந் தேதி இரவு முழுவதும் ஒழிந்துவிட்டதே என்கிறார்கள் அரசு ஆதரவாளர்கள்.. ஆனால் அவையும் ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது 6 சதம்தான் என்கிறது புள்ளி விவரம்.. வெறும் 6 சதத்திற்காக இத்தனை வேதனை  தேவைதானா என்று கேட்கத் தோன்றுகிறது.. அதே சமயம் அவை சொத்தாக மாறியிருந்தாலும் அந்தக் கருப்புப் பணம் வேறு ஒரு வடிவமாக வேறு ஒருவர் கையில் இருக்குமே என்கிறார் பாஜக ராகவன்.. அதே சமயம் 6 சதம் கருப்புப் பணம்  நாட்டில் தேர்தல் சமயத்திலும் தீவிரவாத நடவடிக்கைகள் நடக்கும் சமயத்திலும் அதிகமாகிறது என்கிறார்கள்...  ஆனாலும் அதற்காக  இப்படிப்பட்ட சோதனையை மக்கள் தலையில் ஏற்றுவதா என்றும் தோன்றுகிறது..
3) மொத்த பணப்புழக்கத்தில் 86 சதம் ரூ 500 மற்றும் ரூ 1000 நோட்டுகள் உள்ள நேரத்தில் அதை ஒழித்தால்அதற்குண்டான 100 நோட்டுகள் புழக்கதிற்கு வந்திருக்க வேண்டும் அப்படி வரவில்லை என்பது நாட்டு மக்களின் அவதியிலிருந்து தெரிகிறது... ஆக  இந்தத் திட்டம்  பெரும் தோல்விதான்
4) சாதாரண உழைக்கும் மக்கள் காய்கறி விற்பவர் முதல் கட்டிடத் தொழிலாளர்கள் வரை தினக்கூலி பெறுபவர்கள் ரூ 500 நோட்டைத்தான் வைத்திருப்பார்கள்.. அவர்கள் கடும் அவதிக்குள்ளாயிருக்கிறார்கள்
5)டெபிட் கார்ட் போன்ற கடன் அட்டைகள் வைத்திருப்பவர்கள் அமெரிக்காவில் 50 சதத்திற்கு மேல் ஆனால் நம் நாட்டில் வெறும் 2 சதம்தான்.. அப்படியுள்ள போது 80 சதம் மக்களை கடன் அட்டை பயன் படுத்துங்கள் என்பது விசித்திரமாக உள்ளது.. அதைப் போல BANK TRANSFER செய்பவர்களும் வெகு சொற்பமே..
6)நாளுக்கு நாள் ATM மையங்களில் அதிகரிக்கும் கூட்டம் பெருகித்தான் வருகிறது.. 
7) இதனால் 16 பேருக்கு மேல் மரணமுற்றிருக்கிறார்கள்.. எதில்தான் மரணமில்லை என்று  அதைப் பற்றி  கேலி பேசுவது மன்னிக்கவே முடியாத மிருக குணம் படைத்தோர் கூற்று.. 
8) ஒரு எழுத்தறிவில்லாத நாட்டில்  -பொது இடங்களில் சிறுநீர் கழிக்கவே ஆண் பெண் படங்களைப் போட்டு வைத்திருக்கும் நாட்டில் - இப்படி ஒரு திட்டம் - அது எத்தனை புரட்சிகரமான திட்டமாக இருந்தாலும் அவசர கோலத்தில் வந்திருக்கிறதோ என்றே தோன்றுகிறது..
9)   ஆகவே இந்தத் திட்டத்தை பற்றி  இறுதியில்  “பராசக்தி“ கலைஞர் வசனத்தைச் சொல்லித்தான் முடிக்க வேண்டும்...''இப்படி சட்டத்தை நீட்டுவோர் முதலில்  மக்களின் வாட்டத்தைப் போக்கியிருக்க வேண்டும்...''


12 கருத்துகள் :

bandhu சொன்னது…

//நமது அண்டை நாடுகள் வழியாக கள்ளப்பணம் சுற்றுக்கு வருவது உண்மையா இல்லையா.... உண்மைதான்... ஆனால் அவை ஒட்டுமொத்த பணப் புழக்கத்தில் 1 சதம்தான் என்கிறது புள்ளி விவரம்.//
கள்ளப் பணம் எவ்வளவு இருக்கிறது என்பது ஒரு ஊகமாகத் தான் தெரியும். அதனால் 1% என்பது குத்து மதிப்பு மட்டுமே!
//ஆனால் அவையும் ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது 6 சதம்தான் என்கிறது புள்ளி விவரம்//
இதிலும் அதே கதை தான். உண்மையான கறுப்புப் பணம் எவ்வளவு என்பது யாருக்குமே தெளிவாகத் தெரியாது.

ரியல் எஸ்டேட் அசுர வளர்ச்சி. கண் முன் தெரியும் எங்கும் ஊழல் என்பதிலெல்லாம் கணக்கில் வராத பணம் எவ்வளவோ இருக்கும்!

Badri Nath சொன்னது…

வருகைக்கு நன்றி bandu அவர்களே... சதவிகிதக் கணக்கு புள்ளிவிவரங்களை காட்டிலும் மக்கள் வேதனையைப் பற்றித்தான் நான் கவலை கொள்கிறேன்.. நன்றி

Nat Chander சொன்னது…

not enough new currency has been madeavailable so cash machines are empty and banks are stetched beyond capacity
people have been wasting in ques to collect small amounts of cash that are insufficient for normal activivity
the new notes 2000 that is unhelpful for daily transactions since no one has enough change for this amount
the problems go beyond inconvenience
the lack of cash has reduced consumption and demand which had a knock on effect on sales traders incomes production and employment
traders are losing perishable stocks daily labourers cannot get working capital from the money lenders they rely on....

Nat Chander சொன்னது…

farmers are in dire straits some with frshly harvested crops that cannot be sold
others unable to purchase inputs for the next sowing season
they cannot afford to BEAR THE PAIN FOR FIFTY DAYS..as modi asked in his emotional appeal because they stand to lose everything for the last crop and for the coming one...

Nat Chander சொன்னது…

Ironically a flourishing black market has emerged for the old notes trading at twenty percent discount
big players can get away with a small loss and plan on restarting their illegal activities once the new notes are in full circulation.. since
nothing ias being done about that
but no one will compensate the millions of indians of indians who have lost income and employment in the intervening period ...

Nat Chander சொன்னது…

No wonder when the govt claimed that its latest SURGICAL STRIKE would involve some collateral damage
the indian supreme court said that this was more like a CARPET BOMBING..
MODIS PENCHANT FOR OPTICS THIS TIME HAS ACQUIRED TRULY
DAMAGING PROPORTIONS...

Badri Nath சொன்னது…

Thanks for views Mr Nat Chandra ....as u rightly said the sufferings of Indians could not be compensated

Badri Nath சொன்னது…

Thanks for views Mr Nat Chandra ....as u rightly said the sufferings of Indians could not be compensated

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

உண்மை

Badri Nath சொன்னது…

வருகைக்கு நன்றி முனைவர் இரா.குணசீலன்ன அவர்களே.

Palanivelu சொன்னது…

There is no black money as such. Only black market is there. As long as black market functions black money will be there in one form or the other. As such to destroy black money through devaluation is foolish and cruel joke played on the people by Mr. Modi. House sales are effected with heavy black money. Salary for cine actors paid by black in %. Elections are hugely conducted on black money only even today. Mode may change by this devaluation. Without black money, Modi could not have travelled 3 lack km, spoke over 250/300 places before he was elected. It should have costed him roughly not less than 3000 crores. Practically speaking no election is possible today without the use of black money. No govt contract is possible either. So to ban it, is impossible unless the rate of direct and indirect taxes are reduced, corruption is uprooted on a war footing. Only politicians, cine stars, transactions involving big amounts are the house of black money, not the comman man. Let this fact be made loud and clear for all to hear so that this cruel foolishness be stpped.

Badri Nath சொன்னது…

வருகைக்கு நன்றி Mr Palanivel அவர்களே.