ஞாயிறு, 11 டிசம்பர், 2016

ஜெ ஜெ சில குறிப்புகள்.....


Image result for jayalalitha pictures
சற்று காலதாமதமாக எழுதுவதால் இந்தத் தலைப்பு உட்பட அனைத்தும் எழுதப்பட்டுவிட்டது..  ஜெ யைப் பற்றி பல பேட்டிகள் கட்டுரைகள் காட்சி ஊடகங்கள் சமூக வலைத் தளங்கள் என்று எழுதிக் குவிக்கப்பட்டுள்ளது..  அதில் முற்போக்கு பிற்போக்கு சாதியவாதம் மதவாதக் கருத்துக்கள் இடது சாரி பார்வை என்று கொட்டிக் கிடக்கிறது

இவற்றில் எது உண்மை ... வழக்கப்படி காலம் பதில் கூறும்...

என்னைப் பொருத்தவரை முதலில் ஜெ இறந்தார் என்பதையே நம்ப முடியவில்லை.. கடந்த ஆகஸ்ட் மாதம்கூட அவர் பேட்டியை பார்க்க நேர்ந்தது...  உடல் ரீதியாக எந்த வித கோளாறு இருந்ததாக தெரியவில்லை.. அப்படி ஒரு தகவலும் இருப்பதாகவும் தெரியவில்லை....

பொதுவாகவே பெண் என்பதாலும் அவர் சுபாவத்தாலும் அவரைப் பற்றிய எந்த வித செய்திகள் வருவதை விரும்பதாக நபர் தான் அவர்   என்பது தற்போது புரிகிறது..  75 நாட்கள் சிகிச்சை பெற என்ன காரணம் என்பது பற்றி கௌதமி கூட கேள்விகள் எழுப்பும் அலங்கோலம் நடைபெறுகிறது..

உண்மையில் அப்போலோ நிர்வாகம் ரிச்சர்ட் பேலே போன்றவர்கள் பொய்கள் கூற என்ன அவசியம் .. அவர்களை நம்ப மாட்டேன் என்பதும் ஏற்றக்  கொள்ள மாட்டேன் என்பதும் புரியவில்லை..     சி ஆர் சரஸ்வதி கூறியபடி ஜெயலலிதா   தன்னைப் பற்றியோ தன் உடல்நிலை பற்றியோ     பிறர் தெரிந்து கொள்ள விருப்பப்பட்டிருக்க மாட்டார்.. சி ஆர் சரஸ்வதி சொல்வதில் நியாயம் இருப்பதைப் போலவே தோன்றுகிறது... ஆனால் அரசியல் என்று வந்துவிட்டால் எதில் வேண்டுமானாலும் அரசியல் செய்யலாம்தானே..

மற்றபடி ஜெ என்றதும் நினைவுக்கு வருவது... அதிகாரம்.. போலீஸ் ... இதுதான் அவர் ஆட்சி முறை...

ஆனால் பெண்கள் மத்தியில் அவருக்கு செல்வாக்கு கணிசமாக உள்ளது என்பதை மறுக்க முடியாது.. அதன் காரணம் என்ன உளவியல் என்பது ஆராயப்பட வேண்டும்..  சாதாரண சாமானிய மக்கள் ஜெ மேல் அதீத பாசம் வைத்திருப்பதும் என்ன வித உளவியல் என்பது புரியவில்லை... இத்தனைக்கும் அவர் ஏழைகளின் தலைவர் என்பதை அதிமுக வேண்டுமானாலும் சொல்லலாம்... அவற்றில் சற்றும் உண்மையில்லை..

ஜெ யின் வாழ்க்கை என்பது BORN WITH SILVER SPOON  OR EVEN GOLDEN SPOON என்றுதான் சொல்ல வேண்டும்.. அவரே சட்டசபையில் அப்படி சொன்னதாக நினைவு ... ஏழைப் பங்காளன் ஏழைகளின் ராபின்வுட் என்பதெல்லாம் தேவைக்கேற்ப சேர்த்துக் கொள்வதுதான்.  சற்று நகைச்சுவையாக வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்..

அவரின் முதல் ஐந்தாண்டு கால ஆட்சியில்தான் சிதம்பரம் பத்மினி பாலியில் கொடுமை வாச்சாத்தி கொடுமை போலீஸ் கெடுபிடி போன்றவை நடந்தன.. ஆனால் அவற்றை பற்றி அவர் ஏதும் கூறியதாகத் தெரியவில்லை.. மாறாக இவற்றையெல்லாம் கண்டு கொள்ளத் தேவையில்லை என்றே கூறியிருந்தார்..    நீதியரசர் லட்சுமணன் மகன் மேல் வழக்கு பதிவு செய்ய அவர்  ஜெக்கு எதிரான வழக்கை எடுக்கவே மறுத்தார்

 அவரின் அடுத்த ஐந்தாண்டு ஆட்சியில் 1 லட்சம் அரசு ஊழியர்கள் டிஸ்மிஸ் மற்றும் சாலைப் பணியாளர் வேலையிழப்பும் நடந்தன..   செரினா  என்கிற பெண்ணின் மேல் கஞ்சா வழக்கு போன்றவை    அவர் ஆட்சியில் இல்லாத போதும்   மனதை பதைபதைக்க வைக்கும்  தர்மபுரி பஸ் எரிப்புக் கொடுமை சகிக்க முடியாமல் நடந்தது

 மூன்றாவது முறை  ஆட்சியின் போது  கமலின் விஸ்வரூபம் படத்திற்கு தடை   விஜய்யின் தலைவா படத்திற்கும் பிரச்சனை போன்றவை நடந்தன
அதே சமயம் ஜெயந்திரன் வழக்கு கலைஞரே தயங்கும் ராஜீவ்  கொலைக் குற்றவாளிக்கு ஆதரவான விடுதலை  சட்டசபை தீர்மானம்போன்றவை கணக்கிலெடுக்க வேண்டியுள்ளது..

ஆகச் சிறந்த ஆட்சி என்று சொல்ல முடியவில்லை என்றாலும் அவரின் சமீப கால ஆட்சியில் சற்றே mend ஆகியிருந்ததாகவே தெரிந்தது.. அவரின் மரணம் எதிர்பாராதது தீடீரென்று நிகழ்ந்துள்ளது..

எம்ஜியாரால் அரசியலில்  அறிமுகப்படுத்தப்படும் முன்பு ஒருவட இந்திய பத்திரிகை ”சான்ஸ் இல்லாத நடிகை”  என்று கேலி பேசியிருந்தது.. அதைப் பற்றி அவரே கைப்பட எழுதியிருந்த கடிதத்தில் தான் ராணி போல் வாழ்ந்து வருவதாகத் தெரிவித்துள்ளார்...

ஆக அவர் கூற்றின்படி
அவர் ராணியாகவே வாழ்ந்தார் ராணியாகவே மறைந்தார்... 

2 கருத்துகள் :

வேகநரி சொன்னது…

நல்ல பதிவு.
//ஆனால் பெண்கள் மத்தியில் அவருக்கு செல்வாக்கு கணிசமாக உள்ளது என்பதை மறுக்க முடியாது.. அதன் காரணம் என்ன உளவியல் என்பது ஆராயப்பட வேண்டும்..//
முக்கியமான விஷயத்தை காட்டியுள்ளீர்கள்.
ஆண்களில் பலர் பெண்களை அடிமைபடுத்தி வைத்திருக்க வேண்டும் என்ற ஆணாதிக்க சிந்தனை கொண்டவர்கள் இருப்பதை கண்டிருப்பீர்கள். ஆண்களை ஒரு பெண் அடக்கி ஒடுக்கி அடிமைகளாக நடத்த வேண்டும், பெண் ஒருவர் அஜராகம் புரிய வேண்டும் என்ற பெண்ணாதிக்க சிந்தனை பல தமிழ் பெண்களிடம் உள்ளதையே ஜெயலலிதாவுக்கு அவர்கள் ஆதரவு தெளிவுபடுத்துகிறது.
//அதே சமயம் ஜெயந்திரன் வழக்கு கலைஞரே தயங்கும் ராஜீவ் கொலைக் குற்றவாளிக்கு ஆதரவான விடுதலை சட்டசபை தீர்மானம்போன்றவை கணக்கிலெடுக்க வேண்டியுள்ளது..//
தனது தேர்தல் வெற்றிக்காக நீதி நியாயங்களை கூட தூக்கி எறிந்து செயற்படுவார் ஜெயலலிதா என்பதையே இது தெளிவுபடுத்துகிறது.
எல்டிடிஈ பற்றி எப்படியான கருத்துகளை கலைஞரை எதிர்பதிற்காக முன்பு ஜெயலலிதா தெரிவித்தார் என்று அறிந்திருப்பீர்கள்.

silanerangalil sila karuththukkal சொன்னது…

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி வேகநரி...