திங்கள், 29 மே, 2017

ரஜினி அரசியல் ....

ரஜினியை பற்றி ஏன் எழுதவில்லை என்று சிலர் கேட்டு விட்டார்கள் .. எல்லோரும் எழுதி விட்ட பிறகு நான் சொல்ல விரும்புவது இதுதான்..
Image result for rajini stills


 ரஜினி அரசியலுக்கு வருவாரா?  அல்லது  வெறும் ஸ்டண்ட்டா …?
1   (1) போர் வரும்போது என்றது..
 (2) ஸ்டாலின் இருக்கும்போது இன்னபிற அரசியல் தலைவர் இருக்கும்போது சிஸ்டம் சரியில்லை என்றது…
3  (3)   நான் நல்லா இருக்கேன் என் ரசிகர்  நல்லா  இருக்கணும் என்றது…
4      (4)   நான் பச்சை தமிழன் என்றது …

ஆகியவை  ரஜினி அரசியலுக்கு வருகிறார்  என்பதையே காட்டுகிறது…. 

அவர் போணி ஆவாரா என்பது அடுத்த விஷயம்… ஆனால் பணம் சம்பாதிக்க நினைக்கிறவர்கள் என்னுடன் வரவேண்டாம் என்பது நல்ல நகைச் சுவை….. ரஜினியின் ரசிகர்கள் என்ன மஹாத்மா காந்தியா..? விவேகானந்தரா? பதவி அதிகாரம் பணம் சம்பாதிக்க நினைக்கும் வேலையற்றோர்  சாதாரண உதிரி பாட்டாளிகள் மிக அதிகம்…. அவர்கள் வருவதே பணம், செல்வாக்கு, பதவி ஆகியவற்றை அனுபவிக்கவே…. அப்படி இருக்கும்போது எதை வைத்து ரஜினி அப்படி கூறுகிறார் என்பது தெரியவில்லை …மேலும் “என் ரசிகர்கள் நன்றாக இருக்க வேண்டாமா…”  என்பதும் பெரும் முரண்பாடு…. ஆக ஆரம்பமே பெரும் முரணாக தொடங்குகிறது ரஜினியின் அரசியல் பயணம்…..2 கருத்துகள் :

வேகநரி சொன்னது…

மிகவும் நல்லதொரு அலசல்.
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதற்கு எதிராக சீமான் போன்ற இனவாதிகள் தெரிவித்த கருத்துகளை நிராகரிப்போம்.
ரஜினியின் ரசிகர்கள் என்ன மஹாத்மா காந்தியா..? விவேகானந்தரா?
மிகவும் அர்த்தம் நிறைந்த கேள்வி. ரஜினிகாந்த்தின் துணைவியார் நடத்தும் கல்வி நிலையத்தில் பல ஊழியர்களுக்கு மாதாந்த ஊதியம் கூட வழங்கபடவில்லையாம், கல்வி கட்டணங்களோ மிக அதிகமாம் என்று அறிந்தேன்.
இலங்கை எல்டிடிஈ தலைவர் பிரபாகரனே எங்கள் ரஜினியைப் பாராட்டியிருக்கிறார், இதை விட அவர் தன்னை தமிழ் உணர்வுள்ளவராக அறிவித்துக் கொள்ளவும் தமிழகத்தில் அரசியலுக்கு வரவும் வேறு சிறப்பு தகுதி என்ன வேண்டும் என்று ரஜினியின் ரசிகர்கள் சிலர் கேட்பது மகா மட்டமான காமெடி.
எல்டிடிஈ,பிரபாகரன்,அங்கே வாழ்பவர்கள் என்றால் ஏதோ கடவுளின் தூதுவர்கள் போலவும், இங்கே வாழ்பவர்கள் எல்லாம் தீயவர்கள் போலவும் ஒரு முற்றிலும் போலிதனமாக ஒரு இமேஜை கட்டமைப்பது மிகப்பெரிய மோசடி.

Badri Nath சொன்னது…

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வேகநரி