செவ்வாய், 9 மே, 2017

நீட் தேர்வு - சில பொய்களும் உண்மைகளும் ....

நீட் (NEET) தேர்வும் தமிழகமும் என்கிற விவாதம் நேற்று புதிய தலைமுறை தொலைக்காட்சியில் நடைபெற்றது.  உண்மையில் அற்புதமான நிகழ்ச்சி .. அறிவார்ந்த விவாதம் .. குறிப்பாக நீட் ஆதரவாக பேசிய ஒரு கல்வியாளர் பெயர் தெரியவில்லை… மிகவும் தெளிவாக பொறுமையாக பதிலளித்தார்…

நீட் எதிர்ப்பாளர்கள் கூறும் முக்கிய குற்றச்சாட்டு இவைதான்
1.    தமிழக பாடத்திட்டம் CBSE விட குறைவானது
2.   தீடிரென்று தேர்வு என்றால் எப்படி எதிர்கொள்வது
3.   CBSE சமமான தேர்வை எப்படி கிராமிய மாணவர்கள் எதிர்கொள்வார்கள்
4.   இது வடவர்கள் பார்ப்பனர்கள் அரசு கல்லூரியில் நுழைய ஒரு யுக்தி
5.   நுழைவு தேர்வே மேல் சாதியினர் சதி

இது அத்தனையும் தவறானவை என்று அவர் நேற்று நிரூபித்தார்

முதல் கேள்வி நம் மாணவர்கள் குறைவானவர்கள் என்பதே, நம்மை நாமே தாழ்த்திக் கொள்வதை போன்றது….. நீதிபதி கிருபாகரன் வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால், இப்படி சொல்வதே தமிழக மாணவர்களை கீழ்மை படுத்துவதை போல என்கிறார்…

இது திடீரென்று வந்தது கிடையாது.. 2010 ஆண்டிலிருந்து வந்ததை சிலர் வழக்கு போட்டு நிறுத்தியிருந்தார்கள்.. மேலும் சில மாதங்கள் முன்னர் வந்த கல்வி துறை தலைவர் நட்டா, இந்த ஆண்டு நீட் தேர்வு உண்டு என்றே பத்திரிகையாளர் சந்திப்பின்போது சொன்னார்…

CBSE நிகரானது என்பது உண்மை இல்லை மாறாக நம் பாடத்திட்டத்தை உயர்த்த வேண்டியது அரசின் கடமை தானே

எப்போதும் எதை செய்தாலும் வடவர் பார்ப்பனர் சதி என்பது சௌகரியமானது… ஆனால் உண்மையில் தமிழக அரசு கல்லூரியில், ALL INDIA 15% போக 85 சதம் நமக்குள்ளது… தான் அதை யாரும் பறிக்க முடியாது…. மேலும் அப்படி சுட் ஆப் குறைவானாலும், அதற்கு தக்கவாறு நாம் PASSING PERCENTAGE மாற்றிக்கொள்ள முடியும் என்றபொது,  இந்த குற்றச்சட்டு எதனை பெரிய பொய் என்பது விளங்கும்..

காமராஜ் சொன்னது, பெரியார் சொன்னது, மார்ஸ் சொன்னது அத்தனையும் வெறும் வறட்டு சூத்திரமல்ல… காலத்திற்கு ஏற்ற மாறிவரும் விஷயம் என்று வசனம் பேசிவிட்டு, இது மட்டும் மாறாது… என்றால் சிரிப்பதை தவிர என்ன செய்வது…. உண்மையில் இதற்கு பின்னல் கல்வி கொள்ளையர்கள் உள்ளனர் என்பதே நிதர்சனம்..

உண்மையில் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் மருத்துவ MINIMUM CUT OFF மதிப்பெண் 97%வும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் MINIMUM CUT OFF மதிப்பெண் 98.5% ஆகவும் பொதுப்பிரிவு 99 ஆகவும் சில வருடம் முன்பே சென்று விட்டது (இந்த பிரிவு மாணவர்களிடம் வித்தியாயாசமே இல்லை) அப்படி இருக்க 60 சதம் என்று எப்படி பேச முடியும்

அதிலும் மேலாக அரசு மருத்துவ கல்லூரியில் உள்ள 30000 இடத்திற்கு போட்டி போட்ட கிராமிய மாணவர்கள் வெறும் 297 பேர் மட்டுமே …

அதுமட்டுமில்லாது 50 மார்க்கும் 60 மார்க்கும் வாங்கும் ஒரு பணக்கார மேல் சாதி மாணவன் ஒரு கோடி கொடுத்தால், சீட் அவர் வீட்டை தேடி வரும் எதை நாமே அன்றாடம் பார்க்கிறோம்… அப்படி படித்த ஒரு மேல் சாதி மாணவன் வைத்தியம் பார்க்கும் லக்ஷணம் ஒரு புறம் இருக்கட்டும் அவன் எத்தனை CONSULTATION FEES வாங்குவான் வெறும் 100/- ரூபாயா அல்லது 1000/- ரூபாயா..?

இந்த பணம் வாங்கி படிக்கும் முறையை குறைத்து, நீட் எழுதி தகுதி பெற்றால்தான் உள்ளே செல்ல முடியும் என்பது சரிதானே

11 வகுப்பு பாடம் படிக்காமல் நேராக 12 வகுப்பு சொல்லித்தரும் நாமக்கல் போன்று பிராய்லர் கல்வி கூடத்தை குறைந்த பட்சம் நீட் மாற்றும் 

3 கருத்துகள் :

வேகநரி சொன்னது…

தகவல்களுக்கு நன்றி.

வேகநரி சொன்னது…

//எப்போதும் எதை செய்தாலும் வடவர் பார்ப்பனர் சதி என்பது சௌகரியமானது…//
முற்றிலும் உண்மை. அது தான் இங்கே நடை பெற்று கொண்டிருக்கிறது. பார்ப்பன ஜாதி வேற்றுமை தேடிபார்த்து, வெறுப்பை கக்கி கொண்டு எப்படி ஜாதி வேற்றுமைகளை தமிழகத்தில் ஒழிக்க போகிறார்கள்?

silanerangalil sila karuththukkal சொன்னது…

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வேக நரி..