திங்கள், 4 செப்டம்பர், 2017

NEET என்பது NEAT ஆக இருந்திருக்கலாமே ...

 NEET பற்றி நான் தான் தாமதமாக எழுதுகிறேன் என நினைக்கிறேன் இந்த விஷயம் ஒரே களேபரமாக சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது..

இதுவரை படித்த விஷயங்களிலிருந்து நாம் இப்படி தொகுத்துக்கொள்ளலாம்…
NEET தமிழ் நாட்டில் மட்டும் எதிர்க்கப்படுகிறது ஏன்??

அணு உலையை தன் மாநிலத்தில் நிறுவ விடாத கேரளாவும் பினராயி விஜயனும் நீட்டை ஏற்பது ஏன்??

ஏற்கனவே தமிழக அரசு மசோதாவில் தனியார் மருத்துவ கல்லூரியில் மட்டும் NEETடை அமல் படுத்தலாம் என சொல்லப்பட்டுள்ளதாம்அதை செய்யாமல்  விட்டது ஏன்??

அனிதா படித்த தனியார் பள்ளியில் 11 வகுப்பு பாடம் சொல்லியே தரப்படவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது NEETல் அதிலிருந்துதான் கேள்விகள் வந்திருப்பதாக சொல்லப்படுகிறது CBSE  சிலபஸ் மட்டும் இல்லை என்றும் சொல்லப்படுகிறது  என்பது உண்மையா...

தமிழ்நாட்டு கல்வித்திட்டமே சரியானது என்றால் இதுவரை BITS பிலானியில் ஒருவர் கூட சேர முடியவில்லை என்பது உண்மையா..

தமிழ்நாட்டு கல்வித்திட்டம் பல பத்து ஆண்டுகளை மாற்றப்படவே இல்லை என்பது உண்மையா..

கர்நாடக மாநிலத்தில் மருத்துவ கட்டண கொள்ளை நீட்டிற்கு பிறகு குறைந்திருக்கிறது என்று பத்திரிக்கை செய்தி கூறுகிறது… ஆகவே இந்த போராட்டத்திற்கு ஆதரவு தனியார் கல்வி வள்ளல்கள் பின்னணியில் இருக்கலாம் என்பது சரிதானே…

அனிதா டெல்லி சென்று வர விமான கட்டணம் தாங்கும் இடம் எல்லாம் கொடுத்து பின் அவர் சார்பாக உச்சநீதிமன்றத்தில்  வழக்கு தொடுக்கவில்லை என்ற செய்தி உண்மையா..

கல்வியாளர்கள் என்ற பெயரில் பல NGO-க்கள் இதன் பின்னல் இருக்கிறார்கள் என்பது உண்மையா..

இந்த கேள்விகளை தெரிந்து கொண்ட பிறகு நீட் தேவையா இல்லையா என்பதை முடிவுசெய்யலாம் 

5 கருத்துகள் :

பெயரில்லா சொன்னது…

நீங்கள் கூறிய சில விஷயங்கள் உண்மையே . NEET தேர்வில் பாதக அம்சங்கள் இருக்கலாம். அதை எதிர்ப்பதட்கான காரணங்களும் சரியானவையே. நானும் கூட கொள்கை அளவில் நுழைவு தேர்வு என்ற விஷயத்தை ஆதரிக்க வில்லை . ஆனால் சமூக பொதுவெளியில் பெரும்பாலான அரசியல் வாதிகள் NEET எதிர்ப்பது வியாபார அடிப்படையில் தான். கல்வி வியாபாரத்தில் பின்னணியில் அவர்கள் தான் உள்ளனர். வெறும் டொனேஷன் மூலம் கிடைக்கும் லாபம் மட்டும் இழப்பு அல்ல . நீட் தேர்வினால் கல்வி முதலாளிகளுக்கும் அவர்களுடைய பினாமிகளுக்கும் சமமூக அந்தஸ்து, ஆளுமை போன்ற விஷயங்களிலும் இழப்புகள் உள்ளன. யாரும் சீட் கேட்டு அரசியல் வாதிகளை அணுக மாட்டார்கள் . ஆசிரியர்களையும் அடிமைகளை போல் வைத்திருக்கும் சூழ்நிலையும் மாறலாம். எனவே தான் நீட் தேர்வை எதிர்ப்பதில் அரசியல்வாதிகள் மூர்க்கமாக இருக்கிறார்கள்.

மத்திய பாடத்திட்டத்திட்கும், மாநில பாடத்திட்டத்திட்கும் வேறு பாடு உண்டு தான். ஆனால் அதுவே முழு காரணம் என்பதுபோல் மிகைப்படுத்துகின்றனர். கிராமப்புற மாணவர்களும் பாடங்களை சிறப்பாக படிக்க முடியும். Coaching இன்ஸ்டிடியூட் காரர்களுக்கு சமமான பயிட்சியினை அரசு நினைத்தால் எங்கு வேண்டுமானாலும் தரமுடியும். சில காலங்கள் பிடிக்கலாம் அவ்வளவுதான்.

ஏன் கல்வியின் எல்லை நீட் வரைக்கும் தானா?.......கற்றல் -கற்பித்தல் , புதிய அறிவு வாசல்களை திறப்பது , பல் திறன் வளர்ப்பது போன்றவற்றை எல்லாம் யாரும் பேசுவதே இல்லை. ஒரு ஆசிரியன் என்ற முறையில் நான் எந்த நுழைவு தேர்வையும் கொள்கை ரீதியாக ஆதரிக்க வில்லை. ஆனால் தற்போது நிலவும் மோசமான கல் வி சூழலில் மாணவர்களை ஓரளவாவது சிந்திக்க வைக்கிறதே என்று ஆதரிக்க வேண்டிய அவலம் என்னை போன்ற ஆசிரியர்களுக்கு உள்ளது .

சிவா

silanerangalil sila karuththukkal சொன்னது…

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சிவா சார்

வேகநரி சொன்னது…

//NEET தமிழ் நாட்டில் மட்டும் எதிர்க்கப்படுகிறது ஏன்??//

அதைபற்றியெல்லாம் எதற்காக சிந்திக்க வேண்டும்?
எங்கேயாவது ஒரு குடும்பத்தில் தன்னம்பிக்கை இல்லாத ஒருவர் ஏமாற்றத்தில் தற்கொலை செய்து கொள்ள மாட்டாரா, அவரை வைத்தே தாங்களது அரசியலை செய்யலாம் என்றே அரசியல் கட்சிகளும், புரச்சி போராட்டகாரர்களும் காத்திருப்பது போலவே தெரிகிறது.
வெளிநாடு சென்று அந்த நாட்டின் கல்வி முறையை எதுவானாலும் தங்கள் தலையில் வைத்து போற்றி, தங்க குழந்தைகளை பின்பற்ற வைத்து இன்புறுபவர்கள். ஆனால் இந்தியா, இந்திய நீட் தேர்வு என்றவுடன் அமெரிக்காவிலிருந்து இந்திய நீட் தேர்விற்கான எதிர்ப்புக்கு குரல் கொடுக்கிறாராம் 9 வயது அமெரிக்க வாழ் தமிழ் சிறுமி ஒருவர்.அதை இங்கே தமிழ் செய்திகளில் தருவாங்களாம்.

silanerangalil sila karuththukkal சொன்னது…

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பிளாகர் வேகநரி