திங்கள், 6 ஆகஸ்ட், 2018

மாற்றும் ஏமாற்றும் ...

ஹீலர் பாஸ்கர் கைதை ஒட்டி  இந்த மாற்று மருத்துவ முறை விவாத பொருளாக பேசப்படுகிறது ..


நமது வழக்கத்தில் உள்ள அலோபதி மருத்துவ முறை பற்றி அதில் உள்ள குறைகளை பூதகரமாக்கித்தான் இவ்வித மாற்று மருத்துவமுறை பற்றி கதையாடல்     பின்னப்பட்டுள்ளது ..

 உண்மையில் அலோபதி மருத்துவ முறையில் குறைபாடுகள் இருக்கிறது அதை டாக்டர்களே மறுப்பதில்லை. ஆனால் அவற்றில் உள்ளவை குறைதான் தவிர அந்த மருத்துவ முறை தவறு என்று இந்த புதிய விஞ்ஞானிகள் கூறுவது சற்றும் ஏற்கமுடியாது...  அது ஒரு  சொத்தை வாதம் .. பெரும் கதை ..

காசு பார்ப்பது விளம்பரம் தேடுவது போன்றவையே இவர்களின் நோக்கமாக உள்ளது .. அலோபதி மருத்துவம் என்பது உலகலாவியது மேலும் மேலும் திருத்தப்படுவது - ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கு உட்பட்டது .. எல்லாவற்றும் மேலாக அலோபதி மருத்துவ முறை என்பது வெளிப்படையானது - மூடு மந்திரமில்லாதது என்பதை உணரவேண்டும் .. 

அதை விடுத்தது அதன் மேல் சேற்றை வாரி இறைத்து இந்த மாற்றுக்கள் சொல்பவர்கள் முதலில் தங்களை நிரூபிக்கட்டும் .. 

அதை விடுத்தது மனித உயிர்களுடன் விளையாடக்கூடாது ...

1 கருத்து :

வேகநரி சொன்னது…

அலோபதி மருத்துவ முறையில் குறைபாடுகளைவிட இந்தியாவில் உள்ள மோசடி செய்து, லஞ்சம் வாங்கி, ஏமாற்றி பணம் பறிக்கும் சிந்தனைகளே முறைகளே மனித உயிர்களுடன் விளையாடும் நிலையை உருவாகியுள்ளது.