வெள்ளி, 3 ஆகஸ்ட், 2018

கலைஞர் ....


Congress president Rahul Gandhi meets DMK supremo M Karunanidhi

கலைஞரின்  வயோதிகமும் நோயும் அவரை துவள வைத்திருப்பதை பார்க்க வேதனையாக இருக்கிறது 

கலைஞரின் உடல் நலிவு பற்றி பலரும் பல விமர்சனங்கள் கருத்துக்களை சமூக ஊடகங்களில் சொல்லி விட்டார்கள் ..   

முன்பு அசமத்துவத்திற்கு ஆதரவானவர்கள்  அவரை எதிர்த்துக்கொண்டிருந்தார்கள் .. இப்போதும் அவ்வாறே அந்த வகையில் எதிர்க்கிறார்கள்  

தற்போது முள்ளிவாய்க்கால் நிகழ்வுக்கு பிறகு என்று எதிர்ப்பவர்கள் சிலர்  உண்டு 

 
 தன் வாழ்நாள் முழுவதும் மனிதர்களிடம் பேதமில்லை என்கிற பார்வையே கொண்டிருந்தார்   என்னை பொறுத்த வரை அதுதான் என் மனதில் கோபுரமாக அவரை உயர்த்தி வைத்திருக்கிறது 

. தமிழகத்தில் எனக்கு தெரிந்த உயிருடன் இருக்கும் அரசியல்வாதிகளிடையே   இப்படிப்பட்ட சிந்தனை கொண்டவர்கள் விரல்விட்டு எண்ணிவிடலாம் (கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்கள் தவிர ..)

அவரிடம் உள்ள ஒரே குறை அவர் ஆட்சியில் இருந்த போது இந்த கொள்கையை அவரால் முழுமையாக நிறைவேற்ற முடியவில்லை என்பதுதான் அது அவரின் தவறல்ல என்றாலும்..... அதே சமயம் அவர் குடும்பத்தினரின் அலைக்கழிப்புக்கு ஆளானர் என்பதும் ஒரு சோகமே ..

எப்படி இருந்தும் கலைஞரின் இந்த நலிவு வேதனை அளிக்கிறது 

4 கருத்துகள் :

BADRINATH சொன்னது…

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி MR RAMESH RAMAR

சிகரம் பாரதி சொன்னது…

கலைஞர் அரசியல் வாதி மட்டுமல்ல, இலக்கிய வாதியும் கூட. தமிழகத்தின் தவறுகளுக்கு கருணாநிதியும் ஒரு காரணமே தவிர அவர் மட்டுமே காரணமல்ல. சுதந்திரத்திற்குப் பின் தமிழகத்தை ஆண்ட அனைத்துத் தலைவர்களும் தமிழகத்தின் இன்றைய நிலைக்குப் பொறுப்புக் கூற வேண்டும். கருணாநிதி இவ்வாறு நோய்வாய்ப்பட்டு தவிப்பது மனதுக்கு வேதனையளிக்கிறது. அவர் நலம் பெற பிரார்த்திப்போமாக.

நமது வலைத்தளம் : சிகரம்
இலக்கியம் | அரசியல் | விளையாட்டு | பல்சுவை | வெள்ளித்திரை | தொழிநுட்பம் -அனைத்துத் தகவல்களையும் அழகு தமிழில் தாங்கி வரும் உங்கள் இணையத்தளம் - #சிகரம்

https://newsigaram.blogspot.com/

BADRINATH சொன்னது…

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி SIGARAM BHARATHI

வேகநரி சொன்னது…

//தற்போது முள்ளிவாய்க்கால் நிகழ்வுக்கு பிறகு என்று எதிர்ப்பவர்கள் சிலர் உண்டு//
கலைஞர் கருணாநிதி மீதான தனிபட்ட காழ்ப்புணர்ச்சி, ஜாதி வெறுப்பு காழ்ப்புணர்ச்சி கொண்டவர்களே இப்படி அபந்தமா சொல்கிறார்கள்.