ஞாயிறு, 11 நவம்பர், 2018

பரியேறும் பெருமாள்...

பொதுவாகவே     Off-beat படங்கள் என்றாலே , ஒன்று பிரச்சார நெடியுடன் எடுப்பார்கள் அல்லது அழகுணர்ச்சியில்லாமல் சொதப்பலாக இருக்கும்...

Image result for pariyerum perumal

சமீபத்தில் வந்திருக்கும் காதல், காக்காமுட்டை போன்ற படவரிசையில் பரியேறும் பெருமாள் BABL மிக முக்கியமான படைப்பு.. அழகுணர்ச்சி ததும்ப (aesthetic) யதார்த்தமாக poetic  முடிவுடன் எடுக்கப்பட்டுள்ளது.  இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்களின் முதல் படம் என்றால் நம்பவே முடியவில்லை. 


காக்கா முட்டை வர்க்கக் கண்ணோட்டத்தைப் பற்றி பேசினால்          ப.பெருமாள் தீவிர சாதி ஓடுக்குமுறை பற்றி கதறுகிறது..  இத்தனை உக்கிரத்துடன் ஒரு படம் தமிழில் வந்ததில்லை.  

தமிழகத்தில் குறிப்பாக தென்மாவட்டங்களில் காணப்படும் சாதீய ஒடுக்குமுறைகளால் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களை நினைக்கவே பதறுகிறது.   அந்தக் கொலைகார கிழவன் வரும் காட்சியிலும் ப.பெருமாளுக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்கிற படபடப்பை பார்ப்பவர் மனத்தில் ஆழமாக தைத்துவிடுகிறார் இயக்குனர். 

காதல் படத்தில் அந்த மெக்கானிக் இளைஞன் மனநோயாளியாக பெரியார் சிலை முன்பாக கிடப்பதை சிம்பாலிக்காக காட்டியிருப்பார்கள்.. எத்தனை பெரியார் வந்தாலும் இந்நிலை மாறவில்லை என்பது சோகத்தில் பெரிய சோகம்...

மாரி செல்வராஜ்கள் இவ்வாறு கலைகளில் பதிவு செய்தாலாவது இந்நிலை மாறும் என்று எதிர்பார்ப்போம்..

வாழ்க மாரி செல்வராஜ்...


கருத்துகள் இல்லை :