செவ்வாய், 13 ஆகஸ்ட், 2019

காஷ்மீரம் -இரு வேறு கருத்துக்களும் - சில உண்மைகளும்

காஷ்மீரத்திற்கான 370 பிரிவு நீக்கம் பற்றி இரு வேறு கருத்துகள். ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

எதிர்ப்பவர்கள் தரப்பு :
1)இது சுயநிர்ணய உரிமைக்கு எதிரானது
2)காஷ்மீரம் மற்ற மாநிலம் போல இல்லை . . அது 1949 சுதந்திரத்திற்கு பிறகு இணைக்கப் பட்டது. நேருவால் தற்காலிமாக இணைக்கப் பட்டு தேவையானால் மக்கள் வாக்கெடுப்புடன் இந்தியாவுடன் சேருவதா வேண்டாமா என பின்புதான் முடிவு செய்ய வேண்டும்
3) இது ஜனநாயக விரோதமான தீர்மானம். உண்மையில் இணைக்க வேண்டும் என்றால் அந்த மாநில சட்டசபை தீர்மானம் போட வேண்டும். சட்டசபை கலைக்கப் பட்டு அரசாங்கம் இல்லாமல் வெறும் கவர்னரிடம் பெற்ற (அல்லது பெறப்பட்ட) ஒரு தீர்மானத்தை ஏற்று இவ்வாறு செய்வது சட்டவிரோதம்
4) அம்பேத்கார் 370 பிரிவை எதிர்த்தார் என்பதற்காக நாமும் எதிர்க்கக் கூடாது, அம்பேத்கார் சொன்ன அனைவற்றையும் இந்த அரசு ஏற்குமா? மேலும் அம்பேத்கர் அப்படி சொல்லவில்லை. அதை சங்கிகள் திரிக்கிறார்கள் .
5) கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு காஷ்மீரத்தை திறந்து விட வே இதை பாஜக செய்கிறது

பெரும்பாலும் இந்த மாதிரி வாதத்தை தான் வைக்கிறார்கள். 
சரி. .

இப்போது 370 ஆதரிக்கும் BJP கூறுவது:-
1) தீவிரவாதிகள் 370 சட்டம் துணை கொண்டுதான் பல்கி பெருகிவிட்டார்கள். இனி இப்படி நடக்காது
2 ) 370 என்ற தனி ஆவர்த்தனத்தால் மத்திய அரசு எத்தனை கோடி கொட்டி அழுதாலும் விழலுக்கு இரைத்த நீராகிவிட்டது
3 ) இந்த 370 இருப்பதால் காஷ்மிரத்தில் எந்த ஒரு டெவலப்மென்ட் நடவடிக்கைகள் எடுக்க இயலவில்லை
4) பல இடங்களில் சாலைகள் மருத்துவமனைகள் பள்ளிகள் இல்லை - இதற்கு மத்திய அரசின் நிதிகள் எங்கு சென்றது என்று தெரியவில்லை
5) எந்த நிறுவனமும் காஷ்மீரத்தில் முதலீடுகள் செய்ய இயலவில்லை, காரணம் இரு வேறு சட்டப் பிரிவுகள் காரணம்

போன்ற காரணங்களை அடுக்குகிறது -

எனக்குள்ள கேள்விகள் :-
1) 370 நீக்காமல் இருந்திருந்தால் காஷ்மீரத்தில் தேனாறு பாலாறு ஓடிக்கொண்டிருந்ததா? 
2) காஷ்மீரத்தில் பல இடங்களுக்கு சென்று பார்த்த பல சமூக ஆர்வலர்கள் மேத்யூ உட்பட பலர் கூறுவது அந்த மாநிலத்தின் பல பகுதிகளில் சாலை வசதிகளோ மருத்துவமனைகளோ இல்லை என்கிறார்கள் .
3) இப்போது 370 நீக்கம் மூலம் மற்ற மாநிலங்கள் போல் காஷ்மீரம் திகழட்டுமே.. CAG யின் ஆதிக்கத்தின் கீழ் அதன் வரவு செலவு வரட்டுமே
4) காஷ்மீரத்து சுயநிர்ணய Stuff போன்றவை ரஷ்யா போன்ற நாடுகளில் சின்னாபின்னாமானதைப் பார்த்தோம். மேலும் இவர்கள் சுய நிர்ணயம் மதரீதியாக இன்னொரு தாலிபான் நாடாக மாறும் . இதையா எதிர்ப்பாளர்கள் விரும்புகிறார்கள்?
5) காங்கிரசில் கூட இதைப் பற்றிய ஒத்த கருத்தில்லை
6) காங்கிரசின் முக்கிய தலைவர் கரன்சிங் இந்த சட்டப் பிரிவு நீக்கத்தை ஆதரிக்கிறார். இவர்தான் முன்னார் காஷ்மீர் அரசர் ஹரிசிங்கின் புதல்வர் ஆவார்.
7) BJP உறுப்பினர்களைத் தாண்டி இந்த சட்ட திருத்தம் ஆதரவு பெற்றதே எதிர்கட்சிகளிடத்தில் Vision இல்லை என தெரிகிறது
8 ) கார்ப்பரேட் கொள்ளையடிக்கிறான் என்று Sterotype குற்றச்சாட்டிலும் சாரமில்லை. கார்ப்பரேட்கள் தர்ம சத்திரம் நடத்த வருவதில்லை. அவர்கள் கொள்ளை லாபம் அடிக்கிறார்கள் எனலாம். ஆனால் அதனால்தான் வேலை வாய்ப்புகள் வருகின்றன. அம்மாநில இளைஞர்கள் தாலிபான்களாக மாறுவதைக் காட்டிலும் வேலை வாய்ப்பு கார்ப்பரேட்டுகளால் உருவானால் அது தவிர்க்கப்படுமல்லவா? காஷ்மீரம் முதலில் முதலாளித்துத்தைப் பார்க்கட்டும். இந்த Phaseல் காஷ்மீரம் மாற வாய்ப்புள்ளதல்லவா?
9) காஷ்மீர் காஷ்மீர் எனச் சொல்வது இருக்கட்டும். லடாக் முற்றிலுமாக இந்தப் பிரிவு நீக்கத்தை ஆதரிக்கிறதே. அவர்கள் மக்களில்லையா?
10) அந்த இளம் லடாக் எம்பி இந்த அரைவேக்காட்டு எதிர்ப்பாளர்களை பாராளுமன்றத்தில் கிழித்து தோரணம் கட்டினாேனே . நாடாளுமன்றத்தில் பழம் தின்று கொட்டை போட்ட வைகோ TR பாலு போன்றவர்கள் உரைகள் கேட்கவே சகிக்கவில்லை. காரணம் சாரமற்ற உரையாக இருந்தது. காஷ்மீர் பற்றி அம்பேத்கர் பேசும் போதும் பிஸ்மார்க் கூறுவதைத்தான் சொல்கிறார் . அதாவது "politics is not a game of realizing the ideal.  Politics is the game of the possible." இங்கே எது சாத்தியமோ அதைத்தானே பாஜக செய்துள்ளது.
11) இதுவரை காஷ்மீரத்துக்காக நாம் ராணுவத்திற்கு கொட்டியழுதது பல கோடிகள் இருக்கும்.
12) எல்லாவற்றையும் விட இது வரை காஷ்மிரத்துக்கு செலவிட்டது 2 லட்சம் கோடியாம் - யாருடைய வரிப் பணம் இது. என்ன மாறிப் போய் உள்ளது காஷ்மீரத்தில் - தினம் கல்வீச்சு போராட்டம் - நமது வீரர்கள் இழப்பு
- இனியாவது ஏதேனும் மாற்றம் வரட்டுமே. .
அப்படி வராமல் போன் பிறகு இந்த எதிர்ப்பாளர்கள் கம்பு சுற்றட்டும்,

கருத்துகள் இல்லை :