திங்கள், 26 ஆகஸ்ட், 2019

சிதம்பர ரகசியம் -




சிதம்பரம் கைது செய்யப்பட்ட விதம் சற்று உறுத்தலாக இருந்தது என்பது உண்மை ...

அதேசமயம் எனக்கு உள்ள ஒரு சந்தேகம் , அவர் money லாண்டரிங் செய்திருப்பாரா என்பது ..

ஆனால் கார்த்தியை பற்றி தெரியாது ..

1996 -97 என்று நினைக்கிறேன் அப்போது சிதம்பரம் கேபினட் அமைச்சர் . பெரும் கம்யூனிஸ்ட் தலைவர் தலைவர் இந்திரஜித் குப்தா ஹோம் மினிஸ்டர்... அப்போது அந்த மந்திரிசபையில் ராம்விலாஸ் பாஸ்வானும் ஒரு மந்திரி என்று நினைக்கிறேன் ...

மத்திய அரசு ஊழியர்களுக்கு 40% சதம் உயர்வளிக்கச் சொல்லி நீதியரசர் ரத்தினவேல் பாண்டியன் ஊதியக் குழு பரிந்துரை இருந்தது ..

அப்போது அந்த கேபினட் குழுவில் இது விவாதத்திற்கு வந்த போது சிதம்பரம் அவர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததாக ஒரு தகவல் வந்தது.. அது என்ன 40% ஐந்துக்கு மேல் தரமுடியாது என்று சொன்னதாக ஒரு தகவல்..

இது எங்கள் தொழிற்சங்கக் கூட்டத்தில் சொல்லப்பட்டபோது பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது . ஆனால் இந்திரஜித் குப்தா என்ற மாபெரும் தலைவன் 40% உயர்வு கொடுத்தே ஆக வேண்டும் என்று பிடிவாதமாக அந்த 40 சதவீதத்தை உயர்த்தி கொடுத்தார் ...

அதனாலோ என்னவோ என் போன்ற மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த கைது அனுதாபம் அவர் மேல் ஏற்படவில்லை ...

மேலும் அவர் மக்கள் தலைவராக அறியப்பட்டவர் அல்லர் . மக்கள் இருந்து விலகியே இருப்பார் .. ஆனால் நிச்சயமாக பொருளாதார அறிஞர் சட்ட நிபுணர்தான் ..

ஆனால் மக்களிடமிருந்து விலகியிருந்தால், நிச்சயமாக அனுதாபமும் வருவதில்லை... 

தமிழகம் அமைதியாக இருப்பது அப்படித்தான்.

கருத்துகள் இல்லை :