சனி, 28 செப்டம்பர், 2013

நான்சென்ஸ்

 தலைப்பின் வார்த்தையைச் சொன்னவர் திருவாளர் ராகுல் காந்தி அவர்கள்,  காரணம்.. ஊழல் அரசியல்வாதிகள்   தண்டனை பெற்றதும் பதவியிழக்க வேண்டும் என்கிற உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக அவசரமாக  அமைச்சரவைக் கூட்டத்தை கூட்டி அவசரச்சட்டத்தை நிறைவேற்றினார்கள். அதை குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்கும் அனுப்பிவைத்தார்கள்.

குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்குப்போன அவசரச்சட்டத்தை பா.ஜ.க உள்ளிட்ட ஒரு சில எதிர்க்கட்சிகளும், காங்கிரசிலேயே சிலரும் எதிர்த்து வந்த நிலையில் காங்கிரசின் அஜய் மக்கான் 27.9.13 அன்று செய்தியாளர் கூட்டத்தில் சட்டத்தை ஆதரித்துப் பேசினார்.. ராகுல் வந்து டமால் என்று சட்டத்தை கிழித்தெறி தூக்கிப் போடு என்று சண்டமாருதம் செய்ய அடுத்த நிமிடங்களில் அஜய் மக்கான் ”அதானே.. சட்டம் மோசம்..” என்று அந்தர்பல்டி அடிப்பதை டிவியில் மாற்றி மாற்றிக் காட்டினார்கள்.. பாவம்.. அவர் என்ன செய்வார்……

டிவி பத்திரிகை வலையுலகம் என்று அரசியல்வாதிகளை கிழிகிழி என்று கிழித்தாகிவிட்டது.. இங்குதான் எனக்கு ஒரு கருத்து வேறுபாடு உள்ளது..

அரசியல்வாதி என்றால் யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம்  காரணம் அரசியல்வாதிகள் ஓட்டுப் பிச்சை கேட்பவர்கள்.. பதவியிழக்கச் சொல்லலாம்.. திரைப்படத்தில் கேவலமாகக் காட்டலாம்… அப்படியிருந்தும் அவர்கள் நம் வீட்டுக்கு வந்து தலையை சொறிந்து ஓட்டுக் கேட்பார்கள்..

ஆனால் அக்கிரமம் செய்யும் அதிகாரிகள், பண முதலைகள் சட்டத்தை வளைக்கும் மாஃபியாக்கள் இவர்களை யார் என்ன செய்யமுடியும் என்கிற கேள்வி மட்டும் எப்போதும் தொக்கி நிற்கிறது..


இதற்கு என்ன அவசரச் சட்டம் கொண்டு வர வேண்டும்?

2 கருத்துகள் :

M.Mani சொன்னது…

அவர்களை வளர்த்து பாதுகாப்பவர்கள் இந்த அரசியல்வாதிகள் தானே?
எனவே இந்த வியாதிகளைக் களை எடுத்தால் நாடு உருப்படும்.

silanerangalil sila karuththukkal சொன்னது…

நண்பர் மணி... மேற்படி நபர்களை அரசியல்வாதிகள் மட்டுமா repeat மட்டுமா பாதுகாக்கிறார்கள்.. மேற்படி நபர்கள் காவல்துறையின் உயர் மட்ட நெருக்கம் உள்ளவர்கள் அதிகார வர்க உயர்மட்ட நெருக்கம் உள்ளவர்கள்.. அரசியல்வாதிக்கு accountability உண்டு.. அப்படியிருந்தும் தவறு செய்யும் போது மேற்படியார்கள் என்னவெல்லாம் செய்வார்கள்...?