புதன், 20 ஆகஸ்ட், 2014

முரண்...நகை....

நம்ப முடியாத சில விஷயங்கள் கொண்டதுதான் வாழ்க்கை என்பது இவர்கள் வாழ்வின் மூலம் தெரிந்து கொள்வதுதான் மிகப் பெரிய முரண்...


சமீபத்தில் ராபின் வில்லியம்ஸ் என்கிற பிரபல ஹாலிவுட் நடிகர் காலமான செய்தியைப் படித்ததும் அதிர்ச்சியாக இருந்தது.. தற்கொலை என்பதையும் நம்ப முடியவில்லை... அவர் நம் எல்லோருக்கும் பரிச்சயமானவர்தான்...
Image result for robin williams
அதாங்க.. ஆங்கில அவ்வை சண்முகியான Mrs Doubtfireல் கலக்கியவர்.. பை சென்டினல்மேன் என்கிற எந்திரன் பட மூலத்திலும் கலக்கிய அதே மனிதர்தான்... நம் எல்லோரையும் சிரிக்க வைத்த அந்த மனிதர் தனிப்பட்ட வாழ்க்கையில் மன நோய்க்கு ஆட்பட்டவராம்.. போதை மருந்துக்கும் அடிமையானவராம்...

புரிந்து கொள்ளவே முடியவில்லை...

நமக்குத் தெரிந்த நம்மை சிரிக்க சிந்திக்க வைத்த திரைப் பிரபலங்கள்
Image result for CHARLIE CHAPLIN
சார்லி சாப்ளின்... தனிப்பட்ட வாழ்வில் பெரும் போராட்டமாக வைத்துக் கொண்டவர்.. தொடர் காதல் தோல்விகள்.. தாயின்  பிரிவும் இளமை வறுமையும் அவரை மனதளவில் பாதிக்க வைத்திருந்தாலும், பிற மனிதர்களை சிரிக்க வைத்த மா மனிதன் வாழ்வில் சோகச் சூறாவளியில் வாழ்ந்தவர்...
Image result for N S KRISHNAN
என்எஸ் கிருஷ்ணன்.. சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த இவர்  மேல் ஒரு கொலை வழக்கு இருந்திருக்கிறது.. அதன் மூலம் திரைப்பட வாழ்க்கை சரியவே மதுவுக்கு ஆளானதாக (times of India 19.8.14) பத்திரிகை செய்தி கூறுகிறது.
Image result for NAGESH

நாகேஷ் கேட்கவே வேண்டாம்.. ஒரு காலத்தில் இவர் குடும்பத்தினர் மீதும் கொலைக் குற்றச்சாட்டு இருந்ததும் புகை மதுவுக்கு அடிமையானதும் பெரும் சோகம்...
Image result for J P CHANDRABABU
சந்திரபாபு.... இவரின் இறுதி வாழ்வில் சோற்றுக்குக் கூட அலைந்ததாக சொல்லப்படுகிறது.. எம்ஜியாருடன் பிணக்கில் இருந்தது அதன் மூலம் கையை சுட்டுக் கொண்டது மண முறிவு என்று கடும் பிரச்சனையுடன் வாழ்ந்தவர்...


நம்மை சந்தோஷப் படுத்திய இந்தக் கலைஞர்கள் தனிப்பட்ட வாழ்வில்  ஏன் இத்தனை சோகம்...

எத்தனை பெரிய முரண் இது.. 

கருத்துகள் இல்லை :