வியாழன், 7 ஆகஸ்ட், 2014

நெஞ்சு பொறுக்குதில்லையே......

இன்று ஒரு மதிப்பிற்குரிய பாராளுமன்ற உறுப்பினர் திருவாய் மலர்ந்திருக்கிறார்... என்னவாம்...


" I ask my sisters daughters and girls to dress in dignified manner.." ( பெண்களே... பாரம்பரிய உடை உடுத்துங்கள்... அப்போதுதான் ஆண்கள் உங்களை கண்ணியமாக நடத்துவார்கள்....) என்று அவர் கூறியதை டிவியில் போட்டுக் காட்டிக் கொண்டிருந்தார்கள்.. முரளி மோகன் என்கிற எம்பியாம்... நான் ஏதோ பிஜேபிகாரர் போல என்று எண்ணியிருந்தேன்... அவர் தெலுகு தேச எம்பியாம்... 


அப்பப்பா.. என்னே கண்டுபிடிப்பு... என்ன அருமையான முத்து முத்தான வார்த்தைகள்... அட அட  அட....

ரொம்ப  சரிதான்... ஆனால் சில கேள்விகள்...

1) அப்படி உடுத்தாவிட்டால் இந்த ஆண் வர்கம் என்ன செய்துவிடப் போகிறார்களாம்.. முறைதவறி நடந்து கொள்வார்களா...? இது அப்பட்டமான மிரட்டல் இல்லையா...?
2) இதுவரை வரதட்சணைக் கொடுமைகள் மற்றும் இன்ன பிற அநியாயங்களுக்காகக்  கொல்லப் பட்ட அப்பாவி பெண்கள் அவர்கள் வீட்டில் என்ன நீச்சல் உடையிலா இருந்தார்கள்....?
3) டெல்லியில் படுபயங்கரமாக பாலியில் கொடுமையில் உயிரிழந்த அந்தச் சின்னப் பெண் மோசமான உடை உடுத்திக் கொண்டிருந்தார் என்கிறாரா..?
4) ஆண்கள் எல்லாம் ரொம்ப யோக்யவான்களா திகழ்க்கிறார்களா..? வேட்டி பஞ்ச கச்சம்  சகிதம் உலாவிவருகிறார்களா...?
5) upholding tradition என்கிற பாறாங்கல் என்னய்யா பெண்கள்தான் தலையில் சுமக்க வேண்டுமா...? ஆண்களுக்கு கிடையாதா...?
6) பாராளுமன்றத்தில் மோசமான வார்த்தைகள் பேசினால் அதை நீக்குகிறார்களே...? இந்த எம்பி பேசியபேச்சு ரொம்ப நியாமானது என்று அரசு நினைக்கிறதா...?

வேண்டாம் விபரீதம் நிறுத்திக் கொள்ளுங்கள்....கருத்துகள் இல்லை :