ஞாயிறு, 28 செப்டம்பர், 2014

ஒரே ஒரு கேள்வி........

தாமதமான தீர்ப்புதான்... ஆனால் எந்தவித நெருக்கடிகளுக்கும் அச்சுறுத்தலுக்கும் ஆளாகாமல் தீர்பபளித்த நீதியரசர் டிகுன்ஹா பெரும் ஜனநாயகவாதிதான் ... உண்மையில் வணங்கத்தக்கவர்..  


 ஜெ யின் 91-' 96 ஆட்சிகாலத்தைப் பற்றி  எல்லாருக்கும் தெரியும்... தன் திரைப்பட விஷயங்கள் தவிர வேறு எதைப் பற்றியும் பேசாத ரஜினி, ’எனக்கு கட்சியும் வேணாம் கொடியும் வேணாம்...’ என்று பாட்டு பாடிய ரஜினி ”வாய்ஸ்”  கொடுக்கக் கூடிய சூழல்  நிலவியதைப் பார்க்கலாம்... அது மட்டுமே ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு... ஜெ தற்போதய காலகட்டத்தில் சற்றே mend ஆகி வந்திருக்கிறார் என்றே பார்க்க வேண்டும..(ஒரேயடியாக இல்லை என்றாலும்).. 

ஜெ பற்றியும் அதிமுக பற்றியும் பல விஷயங்கள் தொலைக்காட்சியில் விவாதம் செய்து கொண்டேயிருக்கிறார்.. ஜெ கட்சியில் தனக்கு அடுத்து யாரையும் வளர்க்க வில்லை என்றெல்லாம் சொல்லப்படுகிறது..

அதற்கு காரணம் அவர் மட்டுமல்ல.. அதிமுகவே அப்படித்தான்.. அதன் தலைவர் எம்ஜியார்.. அவரே கிட்டத்தட்ட அப்படித்தான் இருந்தார்.. தான்தான் ஒன்று என் மந்திரிகள் பூஜ்யம் என்றார்... அப்படி நிருபித்தும் காட்டினார்.. அவர் ஜெயை கூட கட்சியில் சேர்த்தாரே தவிர அவர்தான் தனக்கு பின் என்று கூறியாதாகத் தெரியவில்லை... அதே வழியில் வந்த ஜெ அப்படித்தானே இருப்பார்...

எல்லாம் சரிதான்....
ஒரே ஒரு கேள்விதான்.. இத்தனை சொல்கிறோம்... பின்னடைவு ஊழல் எதேச்சிகாரம் என்றேல்லாம் சொல்கிறோம்... ஆனால் எல்லாம் தெரிந்து  அதிமுகவிற்கும் ஜெ விற்கும் தமிழக மக்கள் ஏன் இத்தனை ஆதரவை தருகிறார் என்பதுதான்..... எனக்குத் தெரிந்து தொலைக்காட்சியிலோ வேறு எந்த ஊடகத்திலோ இதற்கான சரியான பதிலை நான் பார்க்கவில்லை என்பதுதான்..

அந்த சைக்காலஜி எப்படி என்று யாராவது சொல்லுங்களேன்....

4 கருத்துகள் :

Bagawanjee KA சொன்னது…

இதில் ஆராய்ச்சி பண்ண என்ன இருக்கிறது ?எல்லாமே ஊழலில் சேர்த்த பணத்தை வாரி இறைத்து வாங்கிய ஓட்டுக்கள்தானே?
?த ம 1

bandhu சொன்னது…

எனக்குத் தெரிந்தது.. வெளிப்படையான கருணாநிதி குடும்பத்தினரின் obscene display of wealth! அவர் குடும்பத்தினரின் சொத்து பட்டியல் வெளியே வந்தாலும்... கண் எதிரே தெரியும், தொலைக் காட்சி சேனல்கள் .. அவர் பேரன்கள் தயாரித்து வெளியிடும் படங்கள்.. ஸ்டாலினின் மால்.. 2G யின் நிழல்... மேலும் இந்த முறை ஆட்சியில் தவறுகள் எதுவும் பெரியதாக வெளியில் தெரியாதது.. அம்மா ப்ராண்ட் உணவகம்.. நீர்.. போன்றவை
ஜே மீது ஆதரவு மிக அதிகமாக காரணமாகத் தெரிகிறது..

Badri Nath சொன்னது…

வருகைக்கு நன்றி பகவான்ஜி.. உங்கள் கருத்தை நான் ஏற்கவில்லை.. காரணம் மக்களில் 1 சதவிகிதம் அப்படி இப்படி இருப்பார்கள்தான்.. ஆனால் 99 சதவிகிதம் நேர்மையாக உழைத்து வாழ்பவர்கள் என்பது எனது கருத்து.. அந்த பெரும்பான்மையில் ஒரு பெரும்பான்மை ஜெ க்கு உள்ளது.. அதற்கு உதாரணம் சமீபத்திய சட்டமன்ற தேர்தல் அதன் பிறகு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் அதில் அவர் வாக்கு சதவிகிதம் கூடியிருப்பது மிகப் பெரிய ஆச்சரியம்.. அதைத்தான் நான் சொல்ல வந்தேன்...

Badri Nath சொன்னது…

வருகைக்கு நன்றி பந்து அவர்களே... ஆனால் இதிலும் உடன்பாடில்லை.. காரணம் கலைஞர் மீது சர்க்காரியா கமிசன் இருந்தாலும், அதை வெற்றிகரமாக வெளிவந்தவர்.. மேலும் அவர் குடும்பம் பெரிது.. மேலும் அவர்கள் வெற்றிகரமாக பல தொழில்கள் செய்வதால் நீங்கள் சொல்லும் குற்றச்சாட்டு எடுபடாது.. அதே போல் நீங்கள் கூறிய அம்மா உணவகம் குடிநீர் போன்றவை மக்களை கவரும் நல்ல திட்டங்களே...