சனி, 21 பிப்ரவரி, 2015

குழம்பிய குட்டையில்......

கடந்த வருடம் டிசம்பர் 31 அன்று ஒரு சந்தேகத்திற்கிடமான படகு ஒன்று
பாகிஸ்தான் கடல் எல்லையிலிருந்து இந்திய எல்லையை கடந்து வந்தது,, குஜராத்தை நெருங்குவதைப் போலத் தோன்றிய அந்தப் படகு நடக்கடலில் எரிந்து போய் மூழ்கியது..


அந்தப் படகில் வந்தது பாக் ஐஎஸ் அமைப்பு தீவிரவாதிகள் என்றும் இந்திய கப்பல் படை அவர்களை கண்டுபிடித்து விட்டதால் அவர்களே தங்கள் படகிற்கு தீ வைத்துத் தப்பித்துவிடடார்கள் என்றும் சொல்லப் பட்டது

ஆனால் கடந்த வாரம் கப்பல்படையை சேர்ந்த ஒரு டிஐஜி ” நான்தான் அந்தப் படகை சுட்டு வீழ்த்தச்  சொன்னேன்... பின்னர் அவர்களை சிறையில அடைத்து பிரியாணி போட வேண்டாம் என்பதால்...” என்று ஒரு கூட்டத்தில் பேசப் போக,  பெரும் சர்ச்சை வெடித்தது..

காங்கிரஸ் இதுதான் சாக்கு என்று ” படகை சுட்டு வீழ்த்திய கப்பல் படையை பாராட்டுகிறோம்.. பிரதமர்  இது பற்றி விளக்கம் அளிக்க வேண்டும்...” என்றது

ஆனால் தற்போது அந்த டிஐஜி வெறும் விளம்பரத்திற்காக அப்படி கூறுகிறார்.. அந்தப் படகை இந்தியா சுட்டு வீழ்த்தவில்லை.. அந்தப் படகில் இருந்தவர்களே தீயிட்டுக் கொண்டர்ர்கள் என்று இந்தியத் தரப்பு விளக்கமளித்தது..

அந்த வீடியோவை தொலைக் காட்சியில பார்க்க நேர்ந்த போது, உண்மையில் அந்தப் படகை யாரும் சுட வில்லை மாறாக படகில வந்தவர்களே எரித்ததைப் போன்றுதான் தோன்றுகிறது...காரணம் அப்படி கப்பல் படை சுட்டிருந்தால் அந்தப் படகு சுக்குநூறாக சிதறியிருக்கும் என்பது குழந்தைகூட சொல்லிவிடும்

உண்மை இப்படியிருக்க, பாகிஸ்தான் தரப்பு நமது கப்பல்படை  டிஐஜி சொன்னதையே சொல்லிக் கொண்டிருக்கிறது.. இது ஒரு புறம் இருக்க, காங்கிரசை சேர்ந்த மணீஷ் தீவாரி ” பற்றி எரியும் ஒரு படகை தொலைக் காட்சியில் பார்த்தேன், அது எப்படி எரிந்தது என்று தெரிய வேண்டும்.. ஒரு வேளை நமது கப்பல் படை சுட்டதால் அப்படி ஆனாதா என்பது தெரியப் படுத்த வேண்டும்..” என்கிற ரீதியில் பேட்டியளித்துளளார்...

காங்கிரஸ் தொடர் தோல்விகளால் துவண்டு போயிருப்பது உண்மைதான்.. அதறகாக இப்படியா குழம்பிய குட்டையில் போய்.....

====

கருத்துகள் இல்லை :