ஞாயிறு, 1 மார்ச், 2015

போகும் வழி எங்கேப்பா.....?

பட்ஜெட்டைப் பற்றி கருத்துச் சொல்லும் அளவிற்கு பொருளாதார நிபுணன் அல்லன் நான்.. இருந்தாலும் பட்ஜெட்டின் சில விஷயங்கள் நம்மை பாதிக்கும் எனும் போது,  நமது கானா பாலா  பாடுவது போல் “இன்பம் வரும் துன்பம் வரும் காதல் வரும் கானா வரும் வாழுகின்ற வாழ்க்கையிலே....“ என்பதைப் போல இருக்கிறது நமது பட்ஜெட்...

ரயில் பட்ஜெட் வந்தவுடனே சற்று சந்தேகம் இருந்தது... எந்தவித புதிய வழித்தடங்கள் இல்லாத பட்ஜெட் என்ற போதே சற்று விசித்திரமாக இருந்தது...

(1) வருமானவரியில் மாற்றமில்லை... இது பெரும் ஏமாற்றம்...
(2) கார்ப்பரேட் வரி 30 லிருந்து 25 ஆக குறைத்திருக்கிறார்கள்.
(3) எல்லாவற்றுக்கும் மேலாக சேவை வரி 2 சதம் அதிகமாகியிருப்பதுதான் பெரும் சுமையை மக்கள் மீது ஏற்றிவிடும்.....

நமது மத்திய வர்க்கம் என்பதே இந்தியாவில் பெரும் பகுதியினர்.. கார்ப்பரேட்காரர்களுக்கு சலுகை தருவதைக் காட்டிலும் மத்யமர்களுக்கு சலுகை தருவதால் வருமானத்தை சேமிப்பார்கள் அல்லது செலவழிப்பார்கள்.. நிச்சயமாக பணப் புழக்கம் அதிகமாகும் (ஏதோ எனக்குத் தெரிந்த பொருளாதாரம்).. 

இது ஆள்பவர்களுக்குத் தெரியாதா...? தெரியும்தான்... ஆனால் கார்ப்பரேட்டுக்ளுக்காக காதலாகி கசிந்துருகுகிறார்கள்... 

பிஜேபி ஆதரவாளர்கள் இந்த பட்ஜெட்  செல்வந்தர்களுக்கு என்கறீர்களே.. வருவாய் 1 கோடிக்கு  மேல் உள்ளவர்களுக்கு செல்வ வரி 2 சதம் போட்டிருக்கிறார்களே அதைப் பாருங்கள் என்று வாதம் செய்கிறார்கள்...

கூட்டிக் கழித்துப் பார்த்தால் ஆட்டை தூக்கி மாட்டில் போட்டு என்கிற கதைதான் என்றாலும், மேலே சொன்ன ஒன்றும் மூன்றும்  என்னைப் போன்ற மத்யமர்களுக்குப்  பெரும் சுமையாகிப் போகுமோ என்று கவலையடையச் செய்கிறது...

2 கருத்துகள் :

taruada சொன்னது…

Not surprised. People defeated jaitley in loksaba. Corporates helped him to get into cabinet via backdoor. He has rewarded the right masters and avenged people

silanerangalil sila karuththukkal சொன்னது…

I don't think so.. it is a collective decision of top bjp ruling leaders.. jaitly projecting it... they did consciously...