சனி, 27 ஜூன், 2015

மனிதாபிமானத்தின் விலை 30 கோடி....

முதல்வர் வசுந்துரா ராஜே அவர்கள் ல்லித் மோடி குடியேற்றப் பத்திரத்தில் கையெழுத்திட்ட விவகாரத்தில் முதலில் தான் கையெழுத்திடவில்லை என்றார்.. பிறகு ஆமாம் அந்த ஆவணத்தில் கையெழுத்திட்டேன்... ஒரு மனிதாபிமான முறையில் என்றார்... தற்போது ராஜேயின் மகன் துஷ்யந்திற்கு கிட்டத்தட்ட 31 கோடி  அளவிற்காக ஷேர்கள் வழங்கப் பட்டிருக்கின்றன.. கேட்டால் அது ஒரு கிப்ஃட் போலவாம்......


மனிதாபிமானத்தின் விலை 30 கோடி போலும்....(டெல்லி வந்த வசுந்துரா அவர்களை பிரதமர் சந்திக்க மறுத்து விட்டாராம்...)

====================
எமர்ஜென்சி

 ஜூன் மாதம் என்றால் எம்ர்ஜென்சியைப் பற்றி சொல்லாமல் இருக்க முடியாது.... இந்திராகாந்தி அவர்களால் நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்lடது.25 ஜூன் 1975…  நள்ளிரவில் அன்றைய ஜனாதிபதி பக்ரூதின் அலி அகமத் இதற்கான ஒப்புதலை அளித்தார். விடிவதற்குள் நாட்டிலுள்ள அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்கள் மொராஜி தேசாய் ஜெயபிரகாஷ்நாராயணன் ஜார்ஜ் பெர்னாண்டஸ் போன்றோர் கைது செய்யப்பட்டனர். பத்திரிகைகள் அனைத்திற்கும் மின்சார சப்ளை நிறுத்தப்பட்டது.   அவசரநிலை காலத்தில் கடுமையான அடக்குமுறைகளும்
சொல்லி மளாதவை,,, மக்களின் அனைத்து ஜனநாயக உரிமைகளும் பறிக்கப்பட்டன......சஞ்ஜய் காந்தியின் அதிகார ஆட்டம் மிகப் பிரசித்தம்... மத்திய அரசாங்க அலுவலகங்களில் கெடுபிடி பற்றி இன்னமும் பலர் கூற கேட்டிருக்கிறேன்...

கலைஞர்  துணிந்து (அன்றய கலைஞர்நெருக்கடிநிலையை எதிர்த்து தீர்மானம் போட ஆட்சியதிகாரத்தை இழந்தார்...  26.6.15 அன்று டிவியில் ஸ்டாலின் எமர்ஜென்சி கொடுமைகளைப் பற்றிப் பேசினார்... சிட்டிபாபுவுக்கு ஏற்பட்ட கொடுமை அனைத்தையும் சொன்னார்... மனம் பதைபதைத்தது.. 

அன்றய திமுகவை உருவாக்கியது அதை வளர்த்த்த பல தலைவர்களில் கலைஞர் ஒருவர்... ஆனால் திமுகவிற்காக கொட்ட்டியில் அடிபட்டவர் ஸ்டாலின் என்று தோன்றியது....

கருத்துகள் இல்லை :