திங்கள், 29 ஜூன், 2015

வந்துவிட்டான் எமது ஆபத்பாந்தவன்.....

மெட்ரோ ரயில்கள் ஒரு வழியாக (?), பல்வேறு அரசியல் மாச்சரியங்களைத் தாண்டி, ஓடத் தொடங்கிவிட்டன... சந்தோஷம்....அதை  ஓட்டும் முதல் டிரைவர்கள் இரண்டு பெண்கள் என்பது இரண்டாவது மகிழ்ச்சியான செய்தி..... தில்லியில் மெட்ரோவைப் பார்த்திருக்கிறேன்... குளிருட்டப்பட்ட வசதியுடன் விமானத்தைப் போல சீறிப் பாயும் வேகம் த்ரில்லானதுதான்... வெகு தூரத்தை அனாயச வேகத்துடன் செல்வதால் பயண நேரம் வெகுவாகக் குறையும்... குறிப்பாக வெளியூர்களுக்குச் செல்லும் கோயம்பேடு போன்ற இடத்தில் முதன் முதலாக ஆரம்பித்திருப்பது பலருக்கு மிக வசதியானது.. பொதுவாக வாகன நெரிசலில் அவதியுடன் கோயம்பேடு நிலையத்தை பேருந்தில் அடைவது பெரும் பிரச்சனையாக  இருந்தது... இரவு 10 மணி வண்டி என்றால் மடிப்பாக்கத்திலிருந்து 7.30 மணிக்கே புறப்பட்டால்தான் நேரத்திற்குச் செல்லமுடியும்... இதனாலே கோயம்பேடு என்றால் அலர்ஜியாக இருந்தது... தற்போது வந்திருக்கும் மெட்ரோ ஆபத்பாந்தவன்தான்....

அதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும்... விலையைப் பார்த்தால் மயக்கமே வருகிறது... ஆலந்தூரிலிருந்து கோயம்பேடு வருவதற்கு 40 ரூபாய் தர வேண்டுமாம்... அட தேவுடா.... கோயம்பேடு செல்பவர்கள் யார் என்று நினைத்துக் கொண்டார்கள்..டாடா பிர்லாவா  அல்லது  லலித் மோடி என்று நினைத்துக் கொண்டார்களா...? சாதாரண சாமானிய உழைக்கும் மக்கள் அரசு தனியார் ஊழியர்கள் பற்றியே சிந்தனையே வராதா...?.... 

மெட்ரோவின் அட்டவணை
நான் தில்லியில் மெட்ரோ ரயிலில் கடந்த வாரம்தான் பயணித்தேன்... நான் என் குடும்பம் ஆக மொத்தம் 4 நபர்கள் வைஷாலி (  VAISHALI  ) யிலிருந்து  வேறு ஒரு மெட்ரோவிற்கு மாறி இறுதி ஸ்டேஷனான ஹீடா சிட்டி சென்ட்ர்   ( HUDA CITY CENTRE ) விற்குச் சென்றேன்... இரண்டு இடங்களும் கிட்டத்தட்ட செங்கல்பட்டு பீச் அளவிற்கு இருக்கும்... எங்கள் நான்கு பேருக்கும் தில்லி மெட்ரோக்காரர்கள் வசூலித்தது ரூ 120./ தான்...

சம்பந்தப்பட்டவர்கள் மறுபரிசீலனை செய்வார்களா......?

4 கருத்துகள் :

பெயரில்லா சொன்னது…

அம்மா மோனேர ரயில் திட்டம் விரைவில் வர உள்ளது

Tamizhan சொன்னது…

Cost seems high, but probably the chennai metro cost a lot more than delhi, considering the period of construction.

Badri Nath சொன்னது…

thanks for your views.... what ever comes for the use of general public, we welcome wholeheartedly....

Badri Nath சொன்னது…

வருகைக்கு நன்றி தமிழன்... தில்லி விலைவாசியும் சென்னையும் ஒன்றல்லவே... தில்லிக்காரர்கள் high income group சென்னையைக் காட்டிலும் அதிகம் என்பது என் எண்ணம்.. .. கட்டுமானச் செலவு நிபுணர்கள் சமாச்சாரம்..நான் மக்கள் பார்வையை வைத்துச் சொன்னேன்..