செவ்வாய், 15 மார்ச், 2016

விவசாயி விசய் மல்லையா….


ஒரு டிராக்டர் வாங்கியதற்கான மாதத் தவணை கட்டவில்லை அதுவும் இரு தவணைகள் என்பதற்காக தஞ்சை பாப்பாநாட்டில் பாலன் என்கிற விவசாயியை போலீஸ் போட்டு “புரட்டி“ எடுத்ததை டிவியில் போட்டுக் காட்டினார்கள்..


நமது பிசினஸ் டைக்கூன் மல்லையா 9000 கோடி வரை வங்கியில் கடன் வாங்கி கட்டவேயில்லை என்பதை பல ஊடகங்கள் அதிலும் குறிப்பாக வலைத்தளங்கள் ஃபேஸ்புக் என்று கழுவி ஊற்றிவிட்டார்கள்.. அடுத்த செய்தி வரும்வரை இது தொடரும்…

மல்லையாவின் புதிய அரிய பல வித கோணத்தில் எடுக்கப்பட்ட படங்கள் வலையுலகம் முழுவதும் கொட்டிக் கிடக்கிறது… பல அழகிகள் திரை நட்சத்திரங்களுடன் சற்று அந்தரங்கமாய்க் கூட எடுக்கப்பட்டிருந்த படங்கள் பார்க்க நேர்ந்தது…

அவர் என்ன மகாத்மாவா… ஒரு பெரிய தொழில் அதிபரின் வாரிசு… அதன் படி வழிவந்தவர்கள் எப்படி இருப்பார்களோ அப்படி இருக்கிறார்…

சரி.. இப்போது பிரச்சனையை சற்று நிதானமாகப் பார்ப்போம்…

விவசாயி பாலன் தன் சொந்த நிலத்தில் உழுது பயிரிட டிராக்டர் வாங்கியிருக்கிறார்… அதனால் ஏற்படும் பலன்களை அனுபவிப்பது அவரின் சொந்த விஷயமாகும்….  அவர் தவணைக் கட்டவில்லை என்றால் சிவில் சட்ட ரீதியாகத்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்… ஆனால் நமது காவல்துறையும் சரி அவர்கள் நடவடிக்கைகளை விமர்சிக்கும் நபர்களும் பிரச்சனையை உணர்வுப் பூர்வமாக பார்ப்பதால் விஷயம் சென்சிடிவ்வாக போய்விட்டது…
Image result for vijay mallya

மல்லையா கிங் பிஷர் என்கிற விமான நிறுவனத்தை நடத்தி வருகிறார்.. லாபத்திற்காக என்றாலும் பல தொழிலாளர்களை வைத்து நடத்தி வருகிறார்..  மல்லையா கடன் வாங்கியதன் நோக்கம் சொந்த விஷயம் என்று பார்க்க முடியாது… அவரின் தொழில் முன்னேற்றத்திற்கானது… அவர் நிறுவனத்தில் பணிபுரியும் பல தொழிலாளர்கள் நேரிடையாகவோ முறைமுகமாகவோ ஈட்டும்  வருமான பிரச்சனையாகும்…… தொழில் போட்டிகள், நிர்வாக சீர்கேடு மற்றும் தொழிலாளர்கள் ஊதிய பிரச்சனை  என்று  மலையை விழுங்கும் சமாச்சாரம் அது..   விமானம் ஓட்டுபவர்கள் என்ன சாதாரண   நூறு இருநூறு பேட்டா வாங்கி ஓட்டுவார்களா… பல தனியார் விமான நிறுவனங்கள் தனது பைலட்டாக வெளிநாட்டினரை  லட்சக்கணக்கான ஊதியத்தில் அமர்த்திக் கொள்வதும் சகஜமான ஒன்று..

இப்படி சூறைக்காற்றில் படகோட்டி தத்தளித்து முழ்கிவிட்டது அவர் படகு…

  ,இரண்டையும் ஒப்புமைப் படுத்தக் கூடாது என்பதே என் கருத்து…  அப்படிப் பார்த்தால் பல தொழில் நிறுவனங்கள்  அதிலும் குறிப்பாக பல அரசுத் தொழில் நிறுவனங்கள் பல கோடி அளவிற்கு நஷ்டத்தில் இயங்குகிறதே…  அதற்குப் பொறுப்பாளி யார்…

இப்படிக் கூறுவதால்  மல்லையாவிற்கு வக்காலத்து வாங்கவில்லை  ஆனால் அவர் தொழில் நஷ்டத்தைக் காட்டி அவரை முதலாளி என்பதால் கேவலப்படுத்தக் கூடாது என்பது எனது கருத்து…


ஒரு வகையில் அப்படிப் பேச நமக்கு ஜனநாயகம் இடமளிக்கிறதே என்பதைப் பார்த்து பெருமை பட்டுக் கொள்ளலாம்…  வட கொரியாவின் அதிபரை   அவர் நாட்டில் போய் எந்த விஷயத்தில் விமர்சிக்கவே முடியாதே … அதுவரை சந்தோஷம்தான்…

கருத்துகள் இல்லை :