ஞாயிறு, 17 ஜூலை, 2016

மீண்டும் கடவுளை கண்டேன்.....

சுவாதியின் படுகொலையின் தாக்கம் இன்னமும் தீரவில்லை… நானும் ஒரு தகப்பன் என்பதால் இருக்கும்.. இந்தச் சோகம் முழுமையாக மறைய எத்தனை ஆண்டுகள் எனக்குப் பிடிக்குமோ தெரியவில்லை….  ஆனால் நடுநடுவே சிலவற்றை பார்க்கவும் பேசவும் எழுதவும் தோன்றுகிறது…

உலகம் எத்தனை கொடுமையானதோ அதே சமயம் சில நல்ல பக்கங்களை காண்பித்தும் செல்கிறது… நம்பிக்கையை இழக்காதே என்றும் சொல்கிறது…. உலகம் என்னும் குப்பை மேட்டில் கோமேதகங்களை நாம் தேடித்தேடித்தான் பிடிக்க வேண்டியிருக்கிறது..

இதோ ஒரு இந்திய மகா ரத்தினத்தின் படம்

 Image result for sanjay kishan kaul

சஞ்சய் கிஷன் கவுல் என்கிற தெய்வம்… மனித உருவில் நடமாடும் கோவில் என்று எப்படி வேண்டுமானாலும் கூறலாம்….. தமிழ்நாட்டின் உயர்நீதி மன்றத் தலைமை நீதியரசர்…

மாதொருபாகன் நாவலின் வழக்கிற்கு சமீபத்தில் ஒரு தீர்ப்பு தந்திருக்கிறார்.. அதன் பிடிஎஃப் கோப்பு  ஒன்றை  வலை தளத்தில் படிக்க நேர்ந்தது… முழுவதும் படிக்க முடியாமல் கண்களில் நீர் முட்டியது… அப்படியும் விடாமல் படித்தும் விட்டேன்..

அய்யா.. நீதிமானே… எங்களைச் சுற்றிலும் நடக்கும் விஷயங்களால் வெதும்பிப் போயிருக்கிறோம் ஆனால் உங்களைப் போன்றவர்கள் இருப்பதால்தான் இந்த நாட்டில் நாம் பயமின்றி வாழலாம் என்ற நம்பிக்கை பிறக்கிறது… நாட்டின் எந்த அநீதியும் உங்கள் பார்வைக்கு வந்தால்  தீர்வு காண முடியும்…

இவரைப் போன்ற மனித உருவில் நடமாடும் கடவுள் நாம் நாட்டில் இருக்கிறார்கள்தான்…ஆனால் இந்தவிதக் கடவுளை நாம் எப்படி கண்டடைவது…?   அந்த வழியை நாம் கண்டு கொண்டால், நம்மிடம் எந்தப் பிரச்சனைகளும் இல்லை….

(பெருமாள் முருகன் சிறந்த எழுத்தாளர் ஒரிரு முறை நான் நேரில் சந்தித்துப் பேசியும் இருக்கிறேன்… நீதியரசர் தீர்ப்புக்கு தலை வணங்குகிறேன்.. இருந்தாலும்….இருந்தாலும்… ஒரு சமூகத்தைப் பற்றி எழுதும் போது சில கடப்பாடுகள் நமக்கு உள்ளது என்பதே என் தனிப்பட்ட கருத்து)கருத்துகள் இல்லை :