ஞாயிறு, 3 ஜூலை, 2016

பொறுக்கிகள் கலாச்சாரத்தைத் தடுக்க வேண்டும்….

இந்தப் பிரச்சனையில் யாரும் சாதி மதச்சாயம் பூசாதீர்கள் என்று வேண்டிக் கொண்டார்கள் சுவாதியின் பெற்றோர்..

ஓ.. எத்தனை பெரிய மனம்… உங்களை கைகூப்பி வணங்குகிறோம்… ஒரு சராசரி இந்திய மனம் இத்தகையதுதான் என்று நினைக்கும் போது கண்ணீர் வருகிறது… இந்தியா அமைதிப் பூங்காவாக இருக்கிறது என்றால் உங்களைப் போன்ற நல்லிதயங்களால்தான் என்று தோன்றுகிறது..

ஆனால் இந்தத் தங்க மனத்திற்குத்தான் இப்படிப்பட்ட சோதனையா..? என்று நினைக்கும் போது விரக்தி மேலிடுகிறது…

LET GOD GIVE THEM PEACE OF MIND என்று சொல்வதைத் தவிர வேறு என்ன சொல்ல…?

பொறுக்கிகள் உருவாக என்ன காரணம்… ஒரு சமயம் எழுத்தாளர் பிரபஞ்சன் சொன்னார்.. தமிழ்ச் சினிமாவைப் பார்த்தால் வேறு நாட்டினார் என்ன நினைப்பார்கள்.. தமிழ் இளைஞர்கள் காதலித்தார்கள் காதலித்துக் கொண்டிருக்கிறார் மேலும் காதலித்துக் கொண்டிருப்பார்கள் என்றுதான்.. அவர்களுக்க வேறு வேலை இல்லை என்றுதான் நினைப்பார்கள் என்பார்… எத்தனை சரியானது..

சம்பந்தமில்லாத ஒரு ரவுடிப் பயல் இருப்பான் அவனை ஒரு வடநாட்டு வெள்ளைத் தோல்காரி உருகி உருகி காதலிப்பாள் என்ற உலக மகா அபத்தத்தை எத்தனை படங்கள் பேசப் போகிறது…

ஆண் பசங்கள் பிறக்கும் போதே BORN WILD ஆகப் பிறக்கக் காரணம் என்ன.. பெண் என்றால்  இவர்களின் போகப் பொருள் என்றா  நினைக்கிறார்களா..?

அண்ணா காலத்திலேயே சொல்லியிருக்கிறார்… சாலையோரத்தில் வேலையற்றதுகள்… வேலையற்றோர் மனதில் விபரீத எண்ணங்கள் என்று.. இந்தக் கால வேலையற்றோர் மனிதில் விபரீத எண்ணங்கள் எப்படிப் போக்குவது…

சுதந்திரப் போராட்டக் காலகட்டத்திலோ இல்லை திராவிட இயக்கக் காலகட்டத்திலோ இப்படி எண்ணங்கள் தோன்றியிருக்காது… தற்போது திராவிட இயக்கங்கள் நீர்த்துப் போய்விட்டது.. வெறும் துவேஷத்தை ஏற்படுத்தும் விஷயங்கள் மட்டுமே இருக்கிறது…. ஒரு புறம் மதவெறி தலைவிரித்தாடுகிறது

..திரையுலகில் சிறப்பான படைப்புகள் வருவது குறைந்துவிட்டது... வருவது  வெறும் வெற்றுக் கூச்சல்கள் மட்டுமே நிறைந்திருக்கிறது..


சமூக ஆர்வலர்கள் சற்றே களம் புக வேண்டிய கால கட்டமிது…

5 கருத்துகள் :

வேகநரி சொன்னது…

//தமிழ்ச் சினிமாவைப் பார்த்தால் வேறு நாட்டினார் என்ன நினைப்பார்கள்.. தமிழ் இளைஞர்கள் காதலித்தார்கள் காதலித்துக் கொண்டிருக்கிறார் மேலும் காதலித்துக் கொண்டிருப்பார்கள் என்றுதான்.. அவர்களுக்க வேறு வேலை இல்லை என்றுதான் நினைப்பார்கள் //

அப்படி இல்லை.
டஸ்மாக்கும் வேறு குடித்து கொண்டு இருப்பார்கள் என்று தான் நினைப்பார்கள்.

syedabthayar721 சொன்னது…

கொடூர கொலையிலும் மதச்சாயம் பேசி மத கலவரத்தை உருவாக்க நினைத்த மூன்று கழிசடைகளை பற்றி தங்கள் ஒன்றுமே சொல்லவில்லையே. தங்கள் கருத்தை பதிவு செய்யதால் நன்றாக இருக்கும்.

M. செய்யது
Dubai

Badri Nath சொன்னது…

வருகைக்குக்கும் கருத்துக்கும் நன்றி திரு வேகநரி.

சரியாகச் சொன்னீர்கள்

Badri Nath சொன்னது…

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி திரு செய்யது அவர்களே....
நான் அந்தக் காமெடி நடிகர் பற்றி கருத்துக் கூற விரும்பவில்லை காரணம் குறிப்பாக Y G மகேந்திரன் அந்தக் காலத்திலும் இந்தக் காலத்திலும் ஒரு மூன்றாம் நிலை நடிகர் மட்டுமே...முன்னணி நடிகர் அன்று.. அவர் சகலை ரஜினி ஏதாவது சொன்னால் மட்டுமே சிறிது தாக்கம் தமிழகத்தில் இருக்கும்... சாதாரண Y G மகேந்திரனை ஊதி ஊதி நாம் ஏன் பெரிய ஆள் ஆக்க வேண்டும்...?

Badri Nath சொன்னது…

///முன்னணி நடிகர் அன்று//
மன்னிக்கவும் முன்னணி நடிகர் அல்ல என்று திருத்தி வாசிக்கவும்