ஞாயிறு, 5 பிப்ரவரி, 2017

டிரைலாஜி (TRILOGY)...

பணியிடம் மாற்றத்தால் எதையும் எழுத முடியவில்லை.. ஆனால் பார்க்க முடிந்தது..  குறிப்பாக புரட்சி என்றால் என்ன  போராட்டம் என்றால் எப்படி இருக்கும் ....?  ஜல்லிக்கட்டுக்காக   மாணவர்கள் இளைஞர்கள் நடத்திய போராட்டம் ஒரு மிகப் பெரிய படிப்பினை...

எத்தனை பெரிய போராட்டத்திலும் இப்படிப்பட்ட ஒழுங்கு இருந்திருக்குமா என்பது தெரியவில்லை.. கடந்த வருடம் மத்திய அரசு வெறும் அனுமதி வழங்கிய போதே நான் இப்படி எழுதியிருந்தேன்::-
ஆனால் அந்தப் பதிவு காய்வதற்குள் மீண்டும் தடை வந்தது.. தற்போது அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுத்திருக்கிறது.., மக்களின் கோபம் ஏன் என்பதைற்கு பல காரணங்கள் இருக்கிறது

1) கர்நாடகாவின் தண்ணீர் திறப்புக்கு முட்டுக்கட்டை மற்றும் தமிழர்கள் மீதான் தாக்குதல்
2) அரசியல் வாதிகள் சூது, ஊழல், மக்களின் பிரச்சனை மீதான்  மெத்தனம்
3) தமிழக மக்களின்  உண்மையான அபிலாஷைகளை பிரதிபலிக்காமல் வெற்றுக் கூச்சலிடும் சுயநலம் பிடித்த அனைத்து அரசியல் கட்சிகள்
4) நமது அமைப்புகளின் தடித்தனங்கள்

போன்றவை மக்களை கொதிப்படைய செய்திருக்கின்றன என்பது தெளிவாகப் புரிகிறது..

ஆனால் மத்திய அரசு அரசாணையை ஏற்றுக் கொண்டவுடன் அப்போதே போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்திருக்கலாம்.. வழமையான நம்பிக்கையின்மை தலைமையின்மை ஆகிவற்றாலும் போராட்டத்தில் கலந்து கொண்டு அதிருப்தி கொண்ட ‘சிறு குழுக்கள்’ உட்புகுந்து தங்களின் அஜெண்டாவை உட்புகுத்தியதாலும் போலீஸ் தங்கள் வழக்கமான முகத்தைக் காட்டியது... அது ஒரு சோக முடிவு எனலாம்
                                                    +++++++
நான் சமீபத்தில் படித்த ஒரு அற்புதப் படைப்பு பின் தொடரும் நிழலின் குரல்.. அப்பப்பா... இத்தனை நாட்கள் இதை வாசிக்காமல் இருந்திருக்கிறேனே என்கிற குற்றவுணர்வுதான் மேலோங்கியது.. பொதுவாக ஜெமோவின் பெரும்பான்மை  படைப்புகள் படித்திருக்கிறேன்.. தினந்தோறம் அவர் வலைத்தளத்தை படிப்பதையே ஒரு கடமையாக செய்து வருகின்றேன்.. ஆனால் அந்த அற்புதப் படைப்பை ஏன் விட்டிருக்கிறேன்..
ஒரு நாவல் என் மனதைப் போட்டு பாடாய்ப் படுத்தும் என்பது ரொம்ப நாட்களுக்குப் பின் தற்போதுதான் பார்க்கிறேன்.. காரணம் எனது முப்பது வயதுகளில் கல்கத்தா நகர் வீதிகளில் UP UP SOCIALISM DOWN DOWN CAPITALISM என்று கத்திக் கொண்டு சென்றவன்தான்... சோவியத் வீழ்ச்சி பற்றி உலகில் சிறப்பான படைப்புகள் வந்திருக்கலாம்.. ஆனால் இந்தப் படைப்பு அதற்கு சற்றும் குறைவில்லாத படைப்பு... என் தொழிற்சங்கப் பணியில் அருணாச்சலம் அளவிற்கு அனுபவம் இல்லைதான்.. ஆனால் ஒரு 5 சதவிகிதம் அனுபவம் இருப்பதால் இது ஒரு ஆன்மாவைத் தொடும் படைப்பு.,, எனது கேள்விகளுக்கு இந்தப் படைப்பு பதில் கூறிகொண்டே செல்வதைக் கண்டு பிரம்மிப்பாக படித்து முடித்தேன்.. மீண்டும் சுவைக்கப் போகிறேன்...
(ஆனால் மார்க்சீய அறிமுகமில்லாதவல்கள், தொழிற்சங்க அனுபவம் இல்லாதவர்கள், சோவியத் பற்றி அறிமுகமில்லாதவர்கள், படுபிற்போக்கு மதவாத முதலாளித்துவ மனம் கொண்டவர்களால் புரிந்து கொள்ளவே முடியாத படைப்பு இது)
                                                     •••••••••••••
க சீ சிவகுமார்... 20 ஆண்டுகளுக்கு முன்னாள் மதுரையில் பார்த்தேன்.. முற்போக்கு கலை இலக்கிய அமைப்பில் இருந்தவர்.. அவருடன் பேசிக்       கொண்டிருக்கும் போது அவரின் விஷயஞானத்தைப் பார்த்து வியந்திருக்கிறேன்.. பல நாட்கள் சென்னையில் பார்க்கும் போது அவர் படைப்புகளைப் பற்றி பேசியிருக்கிறேன்.. வசீகரிக்கும் அவர் எழுத்து நடை எப்போதும் படிக்காமல் விடாது.. அன்னாரின் அகால மரணம் பேரதிர்ச்சிதான்...எனது ஆழ்ந்த அனுதாபங்கள்..

2 கருத்துகள் :

Nagendra Bharathi சொன்னது…

அருமை

Badri Nath சொன்னது…

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி Mr Nagendra Bharathi