வெள்ளி, 15 செப்டம்பர், 2017

உச்ச கட்ட குழப்பம் ...

அதிமுக ஜெக்கு பிறகு மூன்றாக உடைவதற்கு முன்பாக  சசியை பொது செயலாளராக நியமனம் செய்தார்கள் . உடைந்த மூன்றில் இரண்டு சேர்ந்து கொண்டு சசியை பொது செயலாளர் இல்லை என்கிறார்கள் அவரை கட்சியை விட்டு நீக்கினார்களா என்றால் அதுவும் இல்லை  .. 

அதிமுக சட்டப்படி பொதுக்குழுதான் முழு அதிகாரம் படைத்தது .. அதனால் இதில் உள்ள குழப்படியால் என்ன செய்வது என்று முடிவு செய்யாமல் இனி ஜெக்கு பின் பொது செயலர் பதவிக்கு யாரும் இல்லை என்ற  தீர்மானத்தை போட்டுள்ளார்கள்.. 

 தினகரன் அணியோ GOVERNORரிடம் முதலமைச்சரை மாற்றுங்கள் என்று கோருவார்களாம்..  அதை கவர்னர் எப்படி செய்ய முடியும்..? அந்த கட்சியின் உள் கட்சி விவகாரம் இல்லையா போன்ற பல இடியாப்ப சிக்கலுடன் தமிழக அரசியல் இந்தியாவுக்கே வழி காட்டுகிறது.. 

அதிமுக வின் உச்ச கட்ட குழப்ப நிலைக்கு என்ன காரணம் என்று அலசவே தேவையில்லை காரணம் அது M.G.R- ன் வழி வந்த இயக்கம் முழுக்க முழுக்க தனி நபர் கவர்ச்சி தனி நபர் துதியால் ஆன ஒரு கட்சி எந்த தத்துவோமோ கொள்கையோ இல்லாத ஒரு கட்சி ...

திமுக வும் ஏறத்தாழ அப்படி வந்து விட்டாலும் சமூக நீதி மாநில உரிமை என்று சொல்லும்படியாக உள்ளது ...

ஆனால் MGRக்கு   அடுத்து வந்த ஜெ முழுக்க முழுக்க அதை தனி நபர் செல்வாக்குடன் ஆட்டோகிராடிக் -தனமாக வளர்த்து வந்தார்... அது எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது ...

தமிழக அரசியல் என்றுதான் சரியான கொள்கை உடைய கட்சிகளால் வழிநடத்தப்படுமோ என்று ஏக்கமாக இருக்கிறது 

3 கருத்துகள் :

ராஜி சொன்னது…

கவலைப்படாதீங்க. சீக்கிரத்துலயே கமல் கட்சிய ஆரம்பிக்கபோறாராம். உங்க கவலை பறந்து போயிடும்

silanerangalil sila karuththukkal சொன்னது…

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராஜி அவர்களே என் கவலை அதிகமாயிடும் போல

வேகநரி சொன்னது…

சரியாகவே சொல்லியுள்ளீர்கள்.
//தமிழக அரசியல் என்றுதான் சரியான கொள்கை உடைய கட்சிகளால் வழிநடத்தப்படுமோ என்று ஏக்கமாக இருக்கிறது//
தற்போதுள்ள மானில கட்சிகளின் கட்டுபாட்டில் தமிழகம் இருக்கும் வரை நீங்க ஏங்க வேண்டியது தான். எனக்கும் வருத்தம் தான்.