வியாழன், 23 நவம்பர், 2017

கடவுள் உண்டா அல்லது இல்லையா…?

எனது 30 வயதில் நாத்திகனாகத்தான் இருந்தேன்..  இறை என்பதே ஒரு ஏமாற்று வேலை என்றுதான் நினைத்திருந்தேன்..  20 வருடங்களுக்குப் பின்னர் அப்படி ஒரேயடியாக சொல்ல முடியுமா என்று  தோன்றுகிறது.. சில விஷயங்களுக்கு பதில் இல்லை என்பதுதான் அதற்கு காரணம் 

எங்கோ படித்த ஞாபகம்.. கடவுள் உண்டு என்பதற்கும் ஆதாரம் இல்லை - இல்லை என்பதற்கும் ஆதாரம் இல்லை என்று…

அது ஒரு புறம் இருக்கட்டும்…. ஆனால் இத்தனை பெரிய விஷயத்தை சாதாரணமாக ஒரு சீன படைப்பாளி ஆங்கில திரைப்படத்தில் - நமது ஆன்மாவை தொடும் அதிசயத்தை  ஒரு காட்சியில் காட்டுகிறார் 

… உங்கள் அனைவருக்கும் தெரிந்த திரைப்படம்தான்…  பலர் இதற்கு விமர்சனம் எழுதி அலுத்திருக்கலாம் 

 .....“THE LIFE OF PI” என்கிற ஆங்கிலப் படம்…   MOVIES NOW, HBO, STAR MOVIES போன்ற சாட்டிலைட் டிவியில் எத்தனை முறைகள் போட்டாலும் பார்க்கத் தோன்றுகிறது......மக்களால் மீண்டும் மீண்டும் விரும்பப்படுகிறது ... ஒரு சீனர் இயக்கிய  ஆங்கிலப் படம்..    .நடித்தவர்கள் பெரும்பான்மை இந்திய நடிகர்கள் என்பது அதன் தனிச் சிறப்பில் ஒன்று .. தொடங்குவதும் நமது தமிழ்க்  கலாச்சாரத்திலிருந்து என்பது எத்தனை அழகு.... அந்த படமும் அதன் கதையும் அனைவர்க்கும் தெரிந்தது தான் ..    விபத்து நடந்த கப்பலிருந்து தப்பி ஒரு படகில் , பயங்கரமான வங்கப்புலியுடன் 227 நாட்கள் பசிபிக் கடலில் பயணித்து கரையடைவதுதான் கதை .. மருத்துவ மனையில் படுத்திருக்கும் PISCINE PATEL என்கிற பையை (கதாநாயகன்) வந்து பார்க்கும் அந்த ஜப்பானிய இன்சூரன்ஸ்காரர்களை போல் அந்த கதையை நம்மாலும் நம்ப முடியவில்லை ..  "நம்பும்படியாக சொல்லுங்கள்..."' என்று அந்த ஜப்பானிய இன்சூரன்ஸ்காரர்கள் கேட்கிறார்கள் .. அவர்களுக்காக மிருகங்களுக்கு பதிலாக மனிதர்கள் என்று அதே கதையை மாற்றி  சொல்கிறான் பை .. 

இறுதி காட்சியில் அவனுடைய   கதையை கேட்க வந்த அந்த நாத்திகரான வெள்ளைக்கார எழுத்தாளரிடம் பை சொல்கிறான் "நான் உங்களிடம் இரண்டு கதை சொன்னேன் அதில் எதை தேர்வு செய்கிறீர்கள்...'" என்கிறான் ..அவர் அந்த வங்கப்புலியுடன் படகில் 227 நாட்கள் பயணித்த இந்த "பை'" யின் கதை என்கிறார்... அதற்கு "பை'" அப்போது "அந்த கதை கடவுளுக்கு நெருக்கமானது..." என்கிறான்..

 அந்த நாத்திக எழுத்தாளர் சற்று கண்ணை மூடி யோசிக்கிறார் .  அந்தக் காட்சி ...  அந்தக் காட்சி ....LOVELY  என்று கத்த தோன்றுகிறது ....அந்த சில நிமிடம் என்  உடலில் பல வோல்ட் மின்சாரம் பாய்வதாக உணர்தேன்... கடவுள் உண்டோ இல்லையோ ஆனால் நம்மால் நம்ம முடியாத விஷயங்கள் நடக்கும் பொது தெய்வாதீனம் என்றுதான் கடக்க நேரிடுகிறது  ..

அந்த உணர்வை ஒரு படத்தில் ஒரு காட்சியில் உணர்த்திய  அந்த ஆங் லீ என்கிற சீன  இயக்குனரை வணங்கதோன்றுகிறது..

7 கருத்துகள் :

baker block சொன்னது…

நானும் ஒரு கம்யூனிஸ்ட் நான் சிறிய வயதில்அப்படி தான்சொல்வார்கள் கடவுள் எங்கே இருக்கிறார்? இந்துகிரிஸ் முஸ்லிம் மத தளைவர்களை கண்டால் ஒரு எழானாம் கல்யாணம் முதிந்தது மாதம் அஆகியதுசொந்தங்கள் நண்பர்கள் எல்லோரும் டை என்ன????? ஒண்ணுமை காண வில்லை? வழாக்கம்போல்ஞ்ayirruயிற்ரூ கிசமை கோவில்போய் பூசை பார்த்தது கொன்டுஇருந்துதொம பாதிரிsolkineaar நம்மை படைத்தவன்இறைவன் நமது தந்தைஅவனிடம்கேட்பாத்து எல்லாம்கிடைக்கும்என்றார் சரி கடவுளை ஒரு செக் செய்து பாப்போம் கடவுளே எனக்கு குழைந்தய் குடு உன்னை சரண் அடைகிரண் என்றுவேண்டிக் கொண்டேன் ,அடுத்த வாரம் கொவிலுக் போகும்போதுமனைவிசொல்கிறாள் எண்நங்க டேட் தள்ளி போய்விட்டதுஉடம்பில்ஏர்பட்டமாறுதல்கலை சொல்கிறார் அன்று துடங்கியகடவுள்செவகம்தெடர்கிறது போன வாரம் என மகள்ஜெர்மணியில்அம்மாவும்apஅப்பவும் எனக்காக கடவுளிடம் பிராத்திக்கவும் விஜய் அவர் பணிபுரிகின்றார்

PV சொன்னது…

நாத்திகர்கள் வகை: 1. வாலிபத்தில் ஆகி (தன்னிச்சையாக சிந்திக்கும் காலம் வந்தபோது) பின்னர் கடவுள் நம்பிக்கையாளராகுபவர். 2. நாத்திகராகவே தொடர்ந்து நாத்திகனாகவே மறைவது (பெரியார்; ரிச்சர்ஸ் டாக்கின்ஸ் போன்றோர்) 3. கடவுள் நம்பிக்கையாளராகவே வாழ்ந்து கொண்டிருக்கும்போது ஒரு பேரிடி வந்து குடும்பத்தையே அழித்து இவர் மட்டும் தனிமரமாக நிற்கும்போது கடவுள் நம்பிக்கையை இழப்பவர் 4. கடவுள் நம்பிக்கையுடையோர்; இல்லாதவர் என்று பிரிவுகள் கிடையா. இருவருமே இறைவன் படைப்புக்கள் என்று கடவுள் நம்பிக்கையை ரேஷனலாக எடுத்து வாழ்வோர் (நான்).

இவர்களில் 4 பிரிவினருக்கு சர்ச்சையே எழாது. ரிச்சர்ட் டாக்கின்ஸ் பேட்டிகளையும் பெரியார் நாத்திக வாதத்தையும் கடவுட்கொளகையுடையோரின் தர்க்கத்தையும் இரசிப்பர். இங்கே எங்கே வந்தது கடவுள் உண்டா இல்லையா என்ற கேள்வி ?

இவ்வனைத்து வகையிலும் என்னைக்கவர்ந்தவர்கள் 2ம் வகை நாத்திகரே. இவர் கொளகை ரீதியாகவும் தர்க்க ரீதியாகவும் நாத்திகம் பேணும் காட்சி மலைக்கவைக்கும். இவ்வகை நாத்திகராக இருப்பதற்கு ரொம்ப திடமனது வேண்டும். இவரோடு ஆத்திக வெறியரோடு இணையும் நாத்திக வெறியர்களை சேர்க்கக்கூடாது.

Whatever you are, be rational. It is possible to have belief in God rationally. Indeed only such a belief is being honest to yourself. All other kinds are show. You want to show off your belief to others. Just imagine this scenario: A person says "I was an atheist. My daughter was w/o an issue for many years. We prayed to such and such God and then, she became a mother. Thenceforward, my belief in God started."

The same person would never be a believer if her daughter didn't conceive even after praying to the God. Further, the same man will again be an atheist if one tragic day the entire family of his daughter with the child and her husband was wiped out in a road or train accident. இப்படிப்பட்ட ஆசாமிகளுக்கு நல்லது நடந்தால் கடவுள் உண்டு; கெட்டது நடந்தால் கடவுள் இல்லை. இதையும் கடந்ததுவே கடவுள் நம்பிக்கை; அல்லது நாத்திகம்.

இப்போது சொல்லுங்கள்: உங்களுக்கு கடவுள் நம்பிக்கை உண்டா? இல்லையா?

silanerangalil sila karuththukkal சொன்னது…

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி baker block நான் சொல்ல வந்தது அதுவல்ல

silanerangalil sila karuththukkal சொன்னது…

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி P Vinayagam... நீங்கள் சொல்வதைப் பார்த்தால் 5 6 7 8 என்று கூட சொல்லிக்கொண்டு போகலாம் போலிருக்கிறது.. இந்தக் கடவுள் சமாச்சாரத்தில் நான் சொல்ல வருவது கடவுள் இருப்பை உறுதி செய்யும் தொனியாக படலாம்.. எனக்கு அப்படி தோன்றவில்லை.. பாருங்கள் நான் எழுதியதையே என் நண்பர்களிடம் பேசும் போது வியாக்கயானம் செய்ய வேண்டியுள்ளது.. அத்தனை சிக்கலானது இது.... தெய்வாதீனம் என்பதை மட்டுமே நான் தற்போது கூறுகிறேன்.. கடவுள் பற்றிய எந்த முடிவுக்கும் வர என்னால் இயலவில்லை.

வேகநரி சொன்னது…

only இந்துமத கடவுள்களின் மறுப்பாளர்களாக உள்ள திராவிட கடவுள் மறுப்பாளர்கள் பின்பு கடவுளின் முழுமையான நம்பிக்கையாளராக மாறுவர்கள் என்பதை அறிந்து இருக்கிறேன்.
30 வயதில் சுதந்திரமான சிந்தனைகளுடன் இருந்த உங்க மனதை சாத்தான் (கடவுளின் பாட்னர்) கெடுத்தது எனக்கு வருத்தமே.

silanerangalil sila karuththukkal சொன்னது…

வருகைக்கு நன்றி வேகநரி அவர்களே... உங்கள் பகடியை ரசித்தேன்... நான் மீண்டும் சொல்கிறேன்... நான் கடவுள் சமாச்சாரத்திதல் எந்த முடிவுக்கும் வரவில்லை என்பதே... நான் சொல்வது சற்று குழப்பமாக இருந்தால், இருந்துவிட்டுப் போகட்டுமே...

வேகநரி சொன்னது…

//நான் சொல்வது சற்று குழப்பமாக இருந்தால் இருந்துவிட்டுப் போகட்டுமே... //
மூத்த சகோதரரே தாராளமாக.