புதன், 29 நவம்பர், 2017

அன்பு நடமாடும் கலைக்கூடம்...

கந்து வட்டிக்கொடுமை சாதாரண மக்கள் முதல் பெரிய மனிதர்களையும் விட்டுவைக்கவில்லை..

 சாதாரண மனிதர்களுக்கு அவசர தேவைகளுக்கு வங்கிகள் கடன் கொடுக்காது ஆயிரம் நிபந்தனைகள் போடுவார்கள்.  அதனால் அவர்களால் வங்கிகளை அணுக முடிவதில்லை. சினிமா போன்ற கானல் நீர் துறைக்கும் வங்கிகள் கடன் கொடுப்பதில்லை ..

 அதே சமயம் சினிமா பிரபலங்கள் கமல்கள்  முதல் கண்களில் ஆயிரம் கனவுகளுடன் வரும் கடைக்கோடி படைப்பாளியும் தம்மை  நிலை நாட்டிக்கொள்ள இப்படித்தான் கந்தில் மாட்டி தவிக்கிறார்கள்..  கமல் போன்றோர் தன் மார்க்கெட மதிப்பால்  தப்பிவிடுகிறார்... ஆனால் சாதாரணமாக எங்கோ தமிழகத்தின் மூலையிலிருந்து எந்த பின்புலமின்றி கனவுகளுடன் வரும் இளைஞனின் நிலை அவன் கடன் வாங்காமல் எதையும் செய்ய முடியாது.... புதியவனான அவனை நம்பி பெரிய தயாரிப்பாளரும் முதலீடு செய்ய மாட்டார்... பிறகு அவன் கடன் வலையில் சிக்கிக் கொள்கிறான்...

  இந்த இடத்தில் நாம் மெகா கதாநாயகர்கள் வாங்கும் சம்பளத்தை பற்றி பேசாமல் இருக்க முடியாது ஒரு படம் தயாரிக்க 2 கோடி என்றால் இவர்கள் சம்பளம் 50 கோடி என்றாகும் போது ஒரு படம் எடுப்பதே கேலிக்கூத்தாகி விடுகிறது (இதில் 50 கோடியை தாண்டி சம்பளம் வாங்குபவரை பற்றி கேட்கவே வேண்டாம்  ) இறுதியில் இவர்கள் நாயகர்களாக மக்கள் மனதில் வலம் வர இவரை வைத்து சூதாடிய அல்லது தயாரித்தவர்கள் கதி அதோ கதியாகிறது ...

 ஆக  இது ஒரு விஷச் சக்கரம் போல ...

இப்போது நாம் யாரை மட்டும் குறை சொல்வது அன்பை மட்டுமா  ..

2 கருத்துகள் :

வேகநரி சொன்னது…

//இப்போது நாம் யாரை மட்டும் குறை சொல்வது அன்பை மட்டுமா ..//
கந்துவட்டி கொடுமைகாரர் அன்புச்செழியனை அன்பு என்றாக்கிவிட்டீர்களே :(
கந்துவட்டி கொடுமை பற்றிய ஒரு பதிவு நீங்களும் எழுதியுள்ளீர்கள். ஏழைகள் தொடங்கி பணம் கொண்டவர்கள் வரை பாதிக்கபடுகிறார்கள்.
மெகா கதாநாயகர்கள் கோடி கோடியாக சம்பளம் பெற்று கொண்டு ஏழைகளுக்காக வசனங்கள் பேசுவது மாதிரி தமிழ் படங்களில் நடிப்பதுவும், அதை பார்த்து ரசித்து மகிழும் பெரும் கூட்டமும் நாட்டில் இருப்பது கேலிக்கூத்தே தான்.
கந்துவட்டிக்காரர்கள், அன்புச்செழியனும் அவரை போன்றவர்களும் அவசியம் தண்டிக்கபடவேண்டும்.

silanerangalil sila karuththukkal சொன்னது…

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி வேகநரி