புதன், 5 செப்டம்பர், 2018

அறிவுள்ள பெண்...

  விமான நிலயத்தில்  இப்படி நடந்து கொள்ள வேண்டும் என்கிற முறைமை அதாவது புரோட்டோகால் இருக்கிறது . அதை மீறுவது சரியில்லை என்பது என்னைப் பொறுத்த வரை சரியானதே.

 ஆனால் அதற்கான எதிர்வினை அந்தப் பெண் செய்த செயலைக் காட்டிலும் மோசமானதாகவே படுகிறது.  தமிழக முதல்வரை  சில மாதம் முன்பு ஆடிட்டர் குருமூர்த்தி சொல்லத் தகாத வார்த்தை சொன்னார்.

 எஸ் வி.சேகர் பெண் பத்திரிகையாளர்களை அவமதித்தார் என்று வழக்கும் பதியப் பட்டது.

 ஆனால் காவல்துறை என்ன செய்தது என்பது அனைவரும் அறிந்தததே.   இவ்வாறு நடப்பதுதான் உண்மையில் நாட்டுக்கு ஜனநாயகத்திற்கு அச்சறுத்தல் என கருதுகிறேன்.

தன்னை நோக்கி சிறு முனகல் கூட தேச விரோதம் என்பேன் அதே சமயம் நான் என்ன அத்துமீறல் செய்தாலும் அது நாட்டுக்கு நல்லது என்கிற மனோபாவம்  பெரும் ஆபத்தானது.  இதுதான் பெரும் கவலையளிக்கின்ற அச்சுறுத்தல்.

3 கருத்துகள் :

வேகநரி சொன்னது…

//தமிழக முதல்வரை சில மாதம் முன்பு ஆடிட்டர் குருமூர்த்தி சொல்லத் தகாத வார்த்தை சொன்னார்.//
இப்போது தான் அறிகிறேன் அப்படி ஒன்று நடந்ததாக.
எஸ் வி.சேகர் செய்தது போலவே, சோபியா செயலும் தவறானது. எஸ் வி.சேகர், சோபியாவிடம் அவசியம் நடவடிக்கை எடுக்கபட வேண்டும்.

BADRINATH சொன்னது…

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வேகநரி

BADRINATH சொன்னது…

https://timesofindia.indiatimes.com/city/chennai/gurumurthy-and-tn-minister-jayakumar-spar-over-impotence/articleshow/62262699.cms