புதன், 26 செப்டம்பர், 2018

சிங்கப்பூர் ::: பெரிய பிக் பாஸ் நகரம் ..



சிங்கப்பூரைப் பற்றி பல கட்டுரைகள் தமிழில் இருக்கிறது. ஒவ்வொன்றும் ஒரு பார்வையில். இது எனது குறிப்பு.  நான் பார்த்த குர்கான் (GURGAON),  மும்பை. பெங்களூர் ஆகியவற்றை கலந்து சுத்தமாக வைத்தால் அதுதான் சிங்கப்பூர்.  சுத்தமென்றால் உங்கவீட்டு சுத்தம் எங்க வீட்டு சுத்தமில்லை..அத்தனை சுத்தம்.  அவர்கள் சுத்தத்திற்கு தரும் முக்கியத்துவதிற்கு ஒரு உதாரணம். ஒரு சீனர் தன்னுடைய 
நாயை அழைத்துவந்தார் ஒரு கையில் 
நாயை பிடித்துக்கொண்டு இன்னொரு கையில் ஒரு பேப்பரை                         வைத்திருந்தார் ..  ` 

ஒரு வேளை அந்த நாய் ''காக்கா''   போய்விட்டால்,  இவர் தான் அதை 
அப்புறப்படுத்த சுத்தப்படுத்த வேண்டும்..  

அத்தனை பயம்..   சட்ம்.... சட்டம் .... அதை மூர்க்கத்தனமாக     அமல்படுத்துவதில் சிங்கப்பூர் நிர்வாகம் காட்டும்முனைப்பு உண்மையில் வியக்கவைக்கிறது.   சுத்ததிற்கு இன்னொரு உதாரணம்  ஒரு மெட்ரோ ரயில் பிளாட்பாரத்தில் லேசாக தண்ணீர் கொட்டி விட்டது . நான் அதன் அருகே சென்று விட்டேன் உடனே ஒரு சீன பெண் அதிகாரி அலறினாள்.  தன் வாக்கி டாக்கி மூலம் தகவல் தெரிவித்து பணியாளரை அழைத்து அதை துடைக்கவிட்டாள் . இந்த களேபரத்தில் அங்கங்கு மைக்கில் அறிவுப்பு அலறல் .. ஒரு சின்ன விஷயத்திற்கு எதோ வெடிகுண்டு வைத்திருப்பதைப்போல 

 சுத்தம் என்றாலும் ஒழுங்கு என்றாலும் சட்டத்தை நீட்டுகிறது சிங்கப்பூர் நிர்வாகம். அதை போல ஒரு இடத்தில் பிரதான ரோட்டிலிருந்து பாத சாரிகள் நடக்கும் ஒரு சிறு பாதை .. அங்கு ஒரு அறிவிப்பு..  இந்த இடத்தில் பெட்ரோல் வாகனமோ பைக்கோ வந்தால் சிங்கப்பூர் டாலர் 55000 அபராதம் அதாவது ரூ 29 லட்சம் ...சொத்தையே எழுதி வைக்க வேண்டும் .. இருந்தாலும் சீனர்களிடம் எனக்கு பிடித்தது .. அவர்கள் சட்டத்தை மதிக்கும் பண்பு மற்றும் பணிவு .  

.இந்த ஊருக்கு வந்தால் பொதுவாக விடுதி எடுத்து தங்குவது சிறப்பு..  பிறர் வீட்டில்  தங்குவது என்றால்...   ஒருவர் OK.. பலர் என்றால் சிங்கப்பூரின் டிஜிட்டல் கண்பார்வையில் தண்ணீர்  மின்சாரம் போன்றவை  எவ்வளவு செலவாகிறது என்கிற அளவீடுகள் காட்டிக்கொடுத்துவிடும். இங்கு காண்டோ டைப் அல்லது ஹவுசிங் போர்டு வீடுகள்..  ஒன்றை போலவே உள்ளது . தற்போது சென்னையிலும் காண்டோ டைப் பிளாட்டுகள் வந்துவிட்டது .. வீட்டு உரிமையாளர்கள் அனுமதி இன்றி யாரும் உள்ளே வரமுடியாது...  வெளியேயும் செல்ல முடியாது .   இங்கு தொலைந்து போய்விட்டார் என்கிற பேச்சே கிடையாது .. காரணம் ஊர் முழுவதும் பிக் பாஸ் வீட்டை போல காமிரா இருப்பதால் காட்டிக்கொடுத்துவிடும் `.

சில தகவல்கள் 
*இங்கு சீதோஷணம் நம் ஊரை போலத்தான் ஆனால் வியர்க்காது ....
*பெரும்பாலான சாலைகள் நான்கு மற்றும் அதற்க்கு மேல்  lane..சாலைகளில் நெருக்கடிகள் இல்லை.....
* அனைத்து வாகனங்களும் 100 கி மி மேல் செல்கிறது .....
நகரம் முழுவதும் இரவில் ஒளிர்கிறது மின் விளக்கால் வண்ண மயம்தான் ....
பெண்கள்  இரவில் எத்தனை  நேரத்திலும் பாதுகாப்பாக அலைகிறார்கள் ஒரு சின்ன EVE TEASING புகார் கிடையாது (காந்தி கண்ட கனவை நினைவாக்கும்  சிங்கப்பூர்
* LITTLE இந்தியா தவிர வேறு எங்கும் காவல் நிலையத்தை பார்க்கவில்லை ஆனால் எங்கும் போலீஸ் உஷார் நிலையில் இருக்கிறார்கள் ..
க்ரைம் ரேட் வெகு குறைவு 

 பிடித்த விஷயம் :: சீனர்கள் சுறுசுறுப்பு பணிவு உழைப்பு 
பிடிக்காத விஷயம்::: காஸ்டலி நகரம் 
வருத்தப்பட்ட விஷயம்::: பெரும்பாலும் உடல் உழைப்பு ஈடுபடுத்தப்படுபவர்கள்  இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் (சாலை பணி,  கட்டுமான பணி )
நண்பர் செந்தில் சொன்னார் தமிழ்நாட்டில் குறிப்பாக தஞ்சை மாவட்டத்தில் விவசாயம் பொய்த்த பின் இங்கு பெரும்மையினர் வேலைக்கு வந்ததாக சொன்னார் 
(நண்பர்கள் சூரி செந்தில் மற்றும் லக்ஷ்மணன் அவர்களுக்கு நன்றி )

3 கருத்துகள் :

பெயரில்லா சொன்னது…

சில தகவல்கள்
.
" LITTLE இந்தியா தவிர வேறு எங்கும் காவல் நிலையத்தை பார்க்கவில்லை.
தவறு
சகல இடங்களிலும் உண்டு .. குறிப்பாக மக்கள் வாழும் இடங்களில் அமைத்து இருப்பார்கள் . நீங்கள் செல்லாதபடியால் அதை பார்க்கவில்லை
http://afd.org.sg/list-of-neighbourhood-police-centres/

பெயரில்லா சொன்னது…

மீண்டும் ஒரு திருத்தம்
சிங்கப்பூர் சீனர்கள் சீனர்கள் நாடு அல்ல
சிங்கப்பூரர்களின் நாடு
சிங்கப்பூரர் என்றால் சீனர் . மலாயர் , இந்தியர்கள் அனைவரையும் உள்ளாக்கியது
.
"அவர்கள் சட்டத்தை மதிக்கும் பண்பு மற்றும் பணிவு"

சடடத்தை மதிக்கும் பண்பு அனைத்து சிங்கப்பூரர்களுக்கும் உண்டு . அனைத்து சிங்கப்பூரர்களும் சட்டத்தை மதிப்பர்
சீனாவில் வரும் சீனர்கள் சட்டங்களை மதிப்பதேயில்லை
( எந்த நாட்டிலும் ). எனவே மதிப்பது இனம் சார்ந்தது அல்ல . நாடு தேசியம் சார்ந்தது
.

BADRINATH சொன்னது…

நண்பர் பெயரில்லா.. நீங்கள் சொல்வதை அடியேன் அறிவேன்.. நமது ரஜினியின் பழைய பாடல் சீனர் தமிழர் மலேய மக்கள் ஒற்றுமையாக அன்புடன் நட்புடன் வாழும் சிங்கப்பூர் என்று... நான் ஒரு ஆந்தரப்பாலஜிஸ்ட் கிடையாது.. சீனர் என்கிற பொதுவான பெயராக குறிப்பிட்டேன்.. சிங்கப்பூரில் தாய்லாந்தவர்கள் கொரியர்கள் போன்ற மங்கோலிய இனத்தவர்கள் என்று போனால் கட்டுரையின் நோக்கம் வேறு திசையில் பயணிக்கும் என்பதால் பொதுவான பதத்தை குறிப்பிட்டேன்.. வேறு தனிப்பட்ட காரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.. நம்மவர்களின் உழைப்பு சிங்கையில் தெரிகிறது.. அவர்கள்தானே நாம்.. ஆனால் நம் நாட்டில் அப்படி அதை செய்ய முயலவில்லை என்கிற பொதுவான ஆதங்கத்தில் எழுதியிருக்கிறேன்..nothing more and nothing less