சனி, 29 செப்டம்பர், 2018

சிங்கப்பூர் - PART II : ஓர் அழகிய பெரிய பிக் பாஸ் நகரம் ...

முதலில் இந்த சுட்டியை படிக்கவும் 
https://www.thenewsminute.com/article/stalked-trapped-hotel-us-travel-blogger-recounts-sexual-harassment-india-88186

முதல் முறையாக ஒரு இந்தியன் என்று சொல்ல வெட்கப்படுகிறேன்
இது என்ன ஒரு கொடுமை இப்படி சிங்கப்பூரில் நடந்துவிடுமா
நடந்தால் என்ன எதிர் விளைவுகள் உண்டு என்பதை சொல்லித்
தெரியவேண்டியதில்லை நாம் இன்னமும் பயணிக்க வேண்டியதூரம் அதிகம்..

 சரி .இது ஒரு புறம் தற்போது சில விடுபட்ட சிங்கப்பூர் செய்திகள் 

-நான் இருந்த நாட்கள் வரை ஒரு தெரு நாயையோ சுற்றி திரியும் மாடுகளையோ பார்க்கவில்லை

* Signalக்கு   பாதசாரிகளும் வண்டிகளும் அத்தனை மரியாதை தருகிறார்கள் 

*பேருந்துக்கு நடத்துனர் கிடையாது ஓட்டுநர் மட்டுமே 

* பேருந்தில் ஏதாவது மாற்றுத்திறனாளி ஏறினால் அவர்களுக்கு பெரிய கதவை திறந்து அவர் ஏறுவதற்க்காக தன் இருக்கையை விட்டு வந்து உதவுகிறார் ஓட்டுநர்

* அனைத்தும் பேருந்து சரியாக பேருந்து நிறுத்தத்தில் வந்து நிற்க முன்பக்க கதவுகள் வழியாக அனைவரும் ஏறவேண்டும் நடுவில் உள்ள பெரிய கதவு மாற்று திறனாளி ஏறுவதற்கும் அனைத்து பயணிகள் இறங்க மட்டுமே .. யாரும் அதை மீறுவதில்லை ..

* அங்கங்கு மிதிவண்டிகள் கிடக்கின்றன .. அவற்றை தேவைப்பட்டவர்கள் எடுத்து உபயோகம் செய்துகொள்ளலாம் (நம் ஊரில் அவ்வாறு இருந்தால் என்ன நடக்கும் என்பது நம் அனைவருக்கும் தெரியும் )

* அனைவரும் உடல் ஆரோக்கியத்திற்கு  முக்கியத்துவம் தருகிறார்கள்  .. CYCLING SWIMMING, JOGGING WALKING போன்றவை ...

சென்ற பதிவில் ஒரு நண்பர் சிங்கப்பூரில் காவல் நிலையத்தை நீங்கள் பார்க்கவில்லை ஆனால் எங்கும் இருக்கிறது என்றார்..  இருக்கலாம் ... நான் லிட்டில் இந்தியாவில் மட்டுமே பார்த்தேன் மேலும் 15 வருடங்களுக்கு மேல் சிங்கப்பூர் வாழ் நிரந்தர குடிமகன் என் நண்பர் அவ்வாறு சொன்னதால் அதை பதிவிட்டேன் ..

சரி.. சரி... இவையெல்லாம் நம் நாட்டில் இல்லையா இருக்கிறதுதான்.... சட்டம் இருக்கிறது ...ஆனால் நாம் மதிப்பதில்லை அவ்வளவே ....எனவேதான் சிங்கப்பூர் ஓர் அழகிய பெரிய பிக் பாஸ் நகரம் 



2 கருத்துகள் :

sharfudeen சொன்னது…

one of my friend always told for every good thing or bad things ( like singapore kind of wealth and health ), its all created by USA., tamil is superior society in this world, americans ruins us....( i plan to make distance with these kind of people ( of course
i agree that america always try to be a superior country than others )

வேகநரி சொன்னது…

உங்க சிங்கப்பூர் பயண கட்டுரைகள் சுவாரஸ்யம்.
இங்கே உள்ளவங்களை சிந்திக்க வைக்கும் கட்டுரைகள்.
//பெண்கள் இரவில் எத்தனை நேரத்திலும் பாதுகாப்பாக அலைகிறார்கள் ஒரு சின்ன EVE TEASING புகார் கிடையாது (காந்தி கண்ட கனவை நினைவாக்கும் சிங்கப்பூர்)//
இங்கே நாம் பெண்களை தாயாக நினைத்து கௌரவிப்போம் என்று சும்மா அடிச்சு விடுவோ.