திங்கள், 26 ஆகஸ்ட், 2019

கலகலத்து போகும் காங்கிரஸ் ..


சமீபத்தில் சில காங்கிரஸ் அறிவுஜீவிகள் IITஇல் படித்த ஜெயராம் ரமேஷ், தலைசிறந்த சட்ட மேதை அபிஷேக் மனு சிங்கவி, UN பதவிக்கு போட்டியிட்ட சசி தரூர் ஆகியோர்  "பிஜேபியை மடத்தனமாக காங்கிரஸ்காரர்கள் demonize செய்யக்கூடாது.." என்று கருத்து சொல்லுகிறார்கள்.. 

 அதை எதிர்த்து தமிழ் நாட்டு கே எஸ் அழகிரி 4 பக்க அறிக்கை விட்டுஇருக்கிறார் .. அதில் மேற்கண்ட அறிவுஜீவிகள் காங்கிரஸ் விட்டு ஓடுங்கள் என்று வேறு சொல்லி இருக்கிறார்..  நேற்று ஒரு tv  டிபேட்டில் கலந்துகொண்ட விஜயதரணி MLA                        ''காங்கிரஸில் யார் என்ன சொல்கிறார்கள் என்று தெரியல.... நாங்கள் யார் பக்கம் பேசணும்ன்னு தெரியாம இந்த டிபெட்டுல கலந்துகொள்ள வேண்டியிருக்கு ..'' என்று  புலம்புபிய போது, அழுவதா சிரிப்பதா என்றே தெரியவில்லை ... 

இப்படி ஒவ்வொரு பக்கமும் ஒருவர் இழுப்பதால் கட்சியே கலகலத்து போயிருக்கிறது .. 

 இதை இப்படி சொல்லலாம் பிஜேபி இந்துக்கள் ஒருங்கிணைப்பு என்று மக்களை  POLARIZE செய்கிறது திமுக திராவிடம் என்றும் கம்ம்யூனிஸ்ட் தோழர் என்றும் மக்களை POLARIZE செய்கிறார்கள்..

 ஆனால் காங்கிரஸுக்கு எதை வைத்து மக்களை தன்பக்கம் இழுப்பது என்ற ஒரு சித்தாந்த போண்டித்தனம் உள்ளது ..

இதுவே காங்கிரஸ் நம் முன் சீட்டுக்கட்டுபோல சரிந்து விழுகிறது என்பதே என் கருத்து

சிதம்பர ரகசியம் -




சிதம்பரம் கைது செய்யப்பட்ட விதம் சற்று உறுத்தலாக இருந்தது என்பது உண்மை ...

அதேசமயம் எனக்கு உள்ள ஒரு சந்தேகம் , அவர் money லாண்டரிங் செய்திருப்பாரா என்பது ..

ஆனால் கார்த்தியை பற்றி தெரியாது ..

1996 -97 என்று நினைக்கிறேன் அப்போது சிதம்பரம் கேபினட் அமைச்சர் . பெரும் கம்யூனிஸ்ட் தலைவர் தலைவர் இந்திரஜித் குப்தா ஹோம் மினிஸ்டர்... அப்போது அந்த மந்திரிசபையில் ராம்விலாஸ் பாஸ்வானும் ஒரு மந்திரி என்று நினைக்கிறேன் ...

மத்திய அரசு ஊழியர்களுக்கு 40% சதம் உயர்வளிக்கச் சொல்லி நீதியரசர் ரத்தினவேல் பாண்டியன் ஊதியக் குழு பரிந்துரை இருந்தது ..

அப்போது அந்த கேபினட் குழுவில் இது விவாதத்திற்கு வந்த போது சிதம்பரம் அவர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததாக ஒரு தகவல் வந்தது.. அது என்ன 40% ஐந்துக்கு மேல் தரமுடியாது என்று சொன்னதாக ஒரு தகவல்..

இது எங்கள் தொழிற்சங்கக் கூட்டத்தில் சொல்லப்பட்டபோது பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது . ஆனால் இந்திரஜித் குப்தா என்ற மாபெரும் தலைவன் 40% உயர்வு கொடுத்தே ஆக வேண்டும் என்று பிடிவாதமாக அந்த 40 சதவீதத்தை உயர்த்தி கொடுத்தார் ...

அதனாலோ என்னவோ என் போன்ற மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த கைது அனுதாபம் அவர் மேல் ஏற்படவில்லை ...

மேலும் அவர் மக்கள் தலைவராக அறியப்பட்டவர் அல்லர் . மக்கள் இருந்து விலகியே இருப்பார் .. ஆனால் நிச்சயமாக பொருளாதார அறிஞர் சட்ட நிபுணர்தான் ..

ஆனால் மக்களிடமிருந்து விலகியிருந்தால், நிச்சயமாக அனுதாபமும் வருவதில்லை... 

தமிழகம் அமைதியாக இருப்பது அப்படித்தான்.

செவ்வாய், 13 ஆகஸ்ட், 2019

காஷ்மீரம் -இரு வேறு கருத்துக்களும் - சில உண்மைகளும்

காஷ்மீரத்திற்கான 370 பிரிவு நீக்கம் பற்றி இரு வேறு கருத்துகள். ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

எதிர்ப்பவர்கள் தரப்பு :
1)இது சுயநிர்ணய உரிமைக்கு எதிரானது
2)காஷ்மீரம் மற்ற மாநிலம் போல இல்லை . . அது 1949 சுதந்திரத்திற்கு பிறகு இணைக்கப் பட்டது. நேருவால் தற்காலிமாக இணைக்கப் பட்டு தேவையானால் மக்கள் வாக்கெடுப்புடன் இந்தியாவுடன் சேருவதா வேண்டாமா என பின்புதான் முடிவு செய்ய வேண்டும்
3) இது ஜனநாயக விரோதமான தீர்மானம். உண்மையில் இணைக்க வேண்டும் என்றால் அந்த மாநில சட்டசபை தீர்மானம் போட வேண்டும். சட்டசபை கலைக்கப் பட்டு அரசாங்கம் இல்லாமல் வெறும் கவர்னரிடம் பெற்ற (அல்லது பெறப்பட்ட) ஒரு தீர்மானத்தை ஏற்று இவ்வாறு செய்வது சட்டவிரோதம்
4) அம்பேத்கார் 370 பிரிவை எதிர்த்தார் என்பதற்காக நாமும் எதிர்க்கக் கூடாது, அம்பேத்கார் சொன்ன அனைவற்றையும் இந்த அரசு ஏற்குமா? மேலும் அம்பேத்கர் அப்படி சொல்லவில்லை. அதை சங்கிகள் திரிக்கிறார்கள் .
5) கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு காஷ்மீரத்தை திறந்து விட வே இதை பாஜக செய்கிறது

பெரும்பாலும் இந்த மாதிரி வாதத்தை தான் வைக்கிறார்கள். 
சரி. .

இப்போது 370 ஆதரிக்கும் BJP கூறுவது:-
1) தீவிரவாதிகள் 370 சட்டம் துணை கொண்டுதான் பல்கி பெருகிவிட்டார்கள். இனி இப்படி நடக்காது
2 ) 370 என்ற தனி ஆவர்த்தனத்தால் மத்திய அரசு எத்தனை கோடி கொட்டி அழுதாலும் விழலுக்கு இரைத்த நீராகிவிட்டது
3 ) இந்த 370 இருப்பதால் காஷ்மிரத்தில் எந்த ஒரு டெவலப்மென்ட் நடவடிக்கைகள் எடுக்க இயலவில்லை
4) பல இடங்களில் சாலைகள் மருத்துவமனைகள் பள்ளிகள் இல்லை - இதற்கு மத்திய அரசின் நிதிகள் எங்கு சென்றது என்று தெரியவில்லை
5) எந்த நிறுவனமும் காஷ்மீரத்தில் முதலீடுகள் செய்ய இயலவில்லை, காரணம் இரு வேறு சட்டப் பிரிவுகள் காரணம்

போன்ற காரணங்களை அடுக்குகிறது -

எனக்குள்ள கேள்விகள் :-
1) 370 நீக்காமல் இருந்திருந்தால் காஷ்மீரத்தில் தேனாறு பாலாறு ஓடிக்கொண்டிருந்ததா? 
2) காஷ்மீரத்தில் பல இடங்களுக்கு சென்று பார்த்த பல சமூக ஆர்வலர்கள் மேத்யூ உட்பட பலர் கூறுவது அந்த மாநிலத்தின் பல பகுதிகளில் சாலை வசதிகளோ மருத்துவமனைகளோ இல்லை என்கிறார்கள் .
3) இப்போது 370 நீக்கம் மூலம் மற்ற மாநிலங்கள் போல் காஷ்மீரம் திகழட்டுமே.. CAG யின் ஆதிக்கத்தின் கீழ் அதன் வரவு செலவு வரட்டுமே
4) காஷ்மீரத்து சுயநிர்ணய Stuff போன்றவை ரஷ்யா போன்ற நாடுகளில் சின்னாபின்னாமானதைப் பார்த்தோம். மேலும் இவர்கள் சுய நிர்ணயம் மதரீதியாக இன்னொரு தாலிபான் நாடாக மாறும் . இதையா எதிர்ப்பாளர்கள் விரும்புகிறார்கள்?
5) காங்கிரசில் கூட இதைப் பற்றிய ஒத்த கருத்தில்லை
6) காங்கிரசின் முக்கிய தலைவர் கரன்சிங் இந்த சட்டப் பிரிவு நீக்கத்தை ஆதரிக்கிறார். இவர்தான் முன்னார் காஷ்மீர் அரசர் ஹரிசிங்கின் புதல்வர் ஆவார்.
7) BJP உறுப்பினர்களைத் தாண்டி இந்த சட்ட திருத்தம் ஆதரவு பெற்றதே எதிர்கட்சிகளிடத்தில் Vision இல்லை என தெரிகிறது
8 ) கார்ப்பரேட் கொள்ளையடிக்கிறான் என்று Sterotype குற்றச்சாட்டிலும் சாரமில்லை. கார்ப்பரேட்கள் தர்ம சத்திரம் நடத்த வருவதில்லை. அவர்கள் கொள்ளை லாபம் அடிக்கிறார்கள் எனலாம். ஆனால் அதனால்தான் வேலை வாய்ப்புகள் வருகின்றன. அம்மாநில இளைஞர்கள் தாலிபான்களாக மாறுவதைக் காட்டிலும் வேலை வாய்ப்பு கார்ப்பரேட்டுகளால் உருவானால் அது தவிர்க்கப்படுமல்லவா? காஷ்மீரம் முதலில் முதலாளித்துத்தைப் பார்க்கட்டும். இந்த Phaseல் காஷ்மீரம் மாற வாய்ப்புள்ளதல்லவா?
9) காஷ்மீர் காஷ்மீர் எனச் சொல்வது இருக்கட்டும். லடாக் முற்றிலுமாக இந்தப் பிரிவு நீக்கத்தை ஆதரிக்கிறதே. அவர்கள் மக்களில்லையா?
10) அந்த இளம் லடாக் எம்பி இந்த அரைவேக்காட்டு எதிர்ப்பாளர்களை பாராளுமன்றத்தில் கிழித்து தோரணம் கட்டினாேனே . நாடாளுமன்றத்தில் பழம் தின்று கொட்டை போட்ட வைகோ TR பாலு போன்றவர்கள் உரைகள் கேட்கவே சகிக்கவில்லை. காரணம் சாரமற்ற உரையாக இருந்தது. காஷ்மீர் பற்றி அம்பேத்கர் பேசும் போதும் பிஸ்மார்க் கூறுவதைத்தான் சொல்கிறார் . அதாவது "politics is not a game of realizing the ideal.  Politics is the game of the possible." இங்கே எது சாத்தியமோ அதைத்தானே பாஜக செய்துள்ளது.
11) இதுவரை காஷ்மீரத்துக்காக நாம் ராணுவத்திற்கு கொட்டியழுதது பல கோடிகள் இருக்கும்.
12) எல்லாவற்றையும் விட இது வரை காஷ்மிரத்துக்கு செலவிட்டது 2 லட்சம் கோடியாம் - யாருடைய வரிப் பணம் இது. என்ன மாறிப் போய் உள்ளது காஷ்மீரத்தில் - தினம் கல்வீச்சு போராட்டம் - நமது வீரர்கள் இழப்பு
- இனியாவது ஏதேனும் மாற்றம் வரட்டுமே. .
அப்படி வராமல் போன் பிறகு இந்த எதிர்ப்பாளர்கள் கம்பு சுற்றட்டும்,

வெள்ளி, 26 ஜூலை, 2019

ஒரு மாதிரி இருப்பதெல்லாம் ஒரே மாதிரி இருப்பதில்லை...


கீழ்க்கண்ட படங்கள் அத்தனை ஊடகங்களில் கிடைக்கிறது.





இவர்கள் நாளைய மாணவச் செல்வங்கள்


என்ன . . ? பேனாவுக்கு பதில் பட்டாக்கத்தி வைத்திருப்பதால் போலீஸ் கவனித்திருக்கிறது.    அட. . அதிசயம் பாருங்கள் அனைத்து மாணவர்களும் ஒரே மாதிரியாக பாத்ரூமில் "வழுக்கி " விழுந்துள்ளதால், ஒரே மாதிரி இடத்தில் ஒரே மாதிரி கட்டு போட வேண்டிருப்பதாக போலீஸ் தரப்பு கூறுகிறது.



சமூக ஆர்வலர்கள் தரப்பும் அதன் எதிர்த்தரப்பும் நிறைய விவாதங்கள் செய்கிறார்கள்.



இதை சமூக விஞ்ஞான பார்வையில் அணுக வேண்டும் என்று வாதிடுகிறார்கள் சில சமூக ஆர்வலர்கள்...



இந்த ஜல்லியடியெல்லாம் வேண்டாம் இவர்களையெல்லாம் கழுவில் ஏற்றுங்கள் என்கிறார்கள் சுஜாதா பாணியில் எதிர்த்தரப்பு .



சரி அடியேனும் சுஜாதா பாணியில் இதைப் பார்க்கிறேன்.



சுஜாதாவின் பிரபல சிறுகதை  நினைவுக்கு வருகிறது.( மூன்று கடிதங்கள்)



ஒர் இளம் தம்பதி.   வேலைக்குச் செல்லும் பெண் .  அவள் அலுவலகத்தில்  ஒரு முறை ''காசுவல்'' பணியாளர்களால்

(இளைஞர்கள்) பலாத்காரம் செய்யப்படுகிறார். போலீஸ் அந்த
 இளைஞர்களை கைது செய்து அந்த யுவதியை அடையாளம்
காட்டச் சொல்கிறார்கள்

அந்தச் சிறுகதையின் ஒரு பகுதி::

அந்தப் பையன்களைக் கண்டு பிடிச்சுட்டாஙக.என் மனைவியை அடையாளம் காட்டச்
சொன்னாங்க. நீங்க 'இருள் வரும்  நேரம்' எழுதின மாதிரி எந்த வக்கீலும் எங்களை வந்து தொந்தரவு செய்யலைபோலிஸ் ஸ்டேஷன் போய் அவங்களை     

தெளிவா அடையாளம் காட்ட முடிஞ்சுது.திருதிருன்னு முழிச்சுக்கிட்டு ஒருத்தனுக்கு பத்தொம்பது வயசிருக்கும்.மத்தவனுக்கு  இருபத்தஞ்சு . இன்னொருத்தனுக்கு மீசை கூட முளைக்கலை.

அவங்களுடைய அப்பா அம்மா வந்து 'நல்லாத்தானேங்க வளர்ததோம் '
என்று அங்கலாயத்தது எல்லாம் எனக்கு தற்காலிகமான ஆரவாரங்கள்தான்

நடந்ததுக்கு யாரைக் குற்றம் சொல்றது


விதியையா? சமூகத்தையா?

சிக்கலான சமூக அமைப்பில் நகர வாழ்க்கைக்கும் நெருக்கடிக்கும் ஏழைமைக்கும் கொடுக்கும் விலை 


இது. சம்பவம் திரும்ப நிகழாமல் பாதுகாக்க வேண்டும் அவ்வளவுதான்.




என முடித்ததிருப்பார்


இந்த ரீதியிலும் பார்த்தால் எதிர்த்தரப்பினர் (சமூக ஆர்வலர்) கூற்று விளங்கும்


புதன், 24 ஜூலை, 2019

இது உலக மகா விசித்திரம்..

என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு சட்டம் பாராளுமன்றத்தில் ஓட்டுக்கு விடப்பட்டது.. இது ஓட்டுக்கு விடப்பட்டதற்கு காரணம் ஓவெசி AIMIN கட்சியின் தலைவர்.. 

 இது மாநில சுயாட்சிக்கு எதிரானது என்று சண்டமாருதம் செய்கிறது திமுக மற்றும் விடுதலை சிறுத்தை கட்சிகள்..

 திமுக சொல்லும் காரணம் இதுதான்…

 ‘’ சிறுபான்மை மக்களின் மீது இச்சட்டம் தவறாக  பயன்படுத்தப்படக்கூடாது. சிறுபான்மை மக்களின் மீது நடத்தப்படும் தாக்குதல்களை நிறுத்தவும் இச்சட்டத்தில் வழிவகை காணவேண்டும் 10 ஆண்டுகளுக்குப் பிறகு அச்சட்டத்தில் கொண்டுவரப்பட்ட மேலே குறிப்பிடப்பட்டுள்ள நான்கு  திருத்தங்கள் அரசியல் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை பறிக்கும் விதத்தில் எந்த புது அதிகாரத்தையும் காவல்துறைக்கு வழங்கிடவில்லை யென்பதோடு, வலைதளங்களில் பரப்பப்படுவதுபோல புதிய எந்த பிரிவுகளையும் கூடுதலாக சேர்க்கவும் இல்லை.’’

கம்யூனிஸ்டுக்கட்சிகள் இந்த சட்டத்தை எதிர்த்தார்கள்…  அதைப்போல ஓட்டுக்கு வந்தபோது அதை எதிர்த்தும் வாக்களித்தார்கள் ..

ஆனால் இத்தனை காரணங்கள் சொல்லி இதனால் நாங்கள் ஆதரிக்கிறோம் என்று ஆதரித்து ஓட்டளிக்கிறார்கள்  திமுக மற்றும் விடுதலை சிறுத்தை கட்சிகள்..


இது உலக மகா விசித்திரம்..

திங்கள், 15 ஜூலை, 2019

உலகக் கோப்பையும் ஞானப்பழமும் ..

கிரிக்கெட் பார்த்து பல காலமாயிற்று. எப்போது இந்த            "பெட்டிங்" வந்ததோ அப்போதே அடியேன் பார்ப்பதை கைவிட்டு விட்டேன்.

உலகக் கோப்பை - அதுவும் இறுதிப் போட்டி என்பதால் இறுதிக் கட்டத்தைப் பார்க்க நேர்ந்தது.

50 ஓவரும் Tie.. அதன் பின்னர் வந்த கூடுதல் (super over) ஓவர் வைத்தாலும் அதிலும் Tie.

ஆனால் இங்கிலாந்து தன் கூடுதல் ஓவரில் இரண்டு Four அடித்து விட்டார்களாம் -

அதனால் கோப்பை இங்கிலாந்துக்காம்.

ஆமாம். இந்தப் போட்டிகளின் ஏற்பாட்டாளர்கள் என்ன தான் செய்வார்கள். கோப்பையை எடைக்கா போட முடியும்? ஏதேனும் ஒரு வழி கண்டு பிடிக்க வேண்டுமே !

நம் பழைய திருவிளையாடல் புராணத்தில் பிள்ளையார் பெற்ற ஞானப் பழம் நினைவுக்கு வந்தது...

புதன், 12 ஜூன், 2019

ராஜராஜசோழன் .....

ராஜ ராஜ சோழன் இப்படி செய்யவில்லை அப்படி செய்யவில்லை என்று இன்றும் பட்டியல் செய்யலாம் தான் ..

ஆனால் பயன் என்ன...?

 ராஜ ராஜ சோழன் காலகட்டம் என்பது 10 நூற்றாண்டாகும் ... அப்போது உள்ள நிலை என்ன..? அப்போதுள்ள விஞ்ஞான வளர்ச்சி என்ன ..? என்ற கேள்விகளுக்கெல்லாம் எந்த விடை இல்லாமல் எடுத்தோம் கவிழ்த்தோம் என்ற பாணியில் பேசுவது என்பது ஏற்புடையது அன்று...

காலத்தை கடந்து வந்த அந்த பெரும் படைப்பு... பெருவுடையார் கோயில் ....அதன் கம்பீரம்....  அந்த ஒன்று நமது கட்டிடக்கலையை பறைசாற்றவில்லையா ....?

குறைதானே  கண்டுபிடிக்கவேண்டும் .....

  ராஜராஜசோழன் சோசலிசம் கொண்டுவர முயற்சி செய்யவில்லை என்று கூட சொல்லலாம்...

 கால தேச வர்த்தமானம் என்று ஒன்று தேவை இல்லை போலும்....


 அது சரி புத்தர் புலால் உண்பதை எதிர்த்தார் அல்லவா..?  பழைய சனாதன கொள்கையில் எருதை கொள்வது பாவம் என்று தானே பௌத்தம் சொன்னது ...

ஒரே குழப்பம் போங்கள்