சனி, 21 டிசம்பர், 2013

ஜெயமோகன் சொல்வது சரிதானோ?

தூதரக அதிகாரி தேவ்யானி விவகாரம் பற்றிய பரபரப்பு காட்சி ஊடகங்கள் வலையுலகம் என்று பெரும் சுற்று சுற்றிக் கொண்டிருக்கிறது. அதைப் பற்றி நான் என்ன சொல்கிறேன் என்று சிலர் (சிலராவது) கேட்கிறார்கள். 

அய்யா... எனக்கு கருத்து சொல்லும் அளவிற்கு தகுதி இல்லாவிட்டாலும் சில நேரங்களில் சில கருத்துக்கள் தோன்றத்தான் செய்கின்றன.

நான் படித்தவை கேட்டவை ஆகியவற்றின் அடிப்படையில் இதுதான் நடந்துள்ளது.

தேவ்யானி ஒருவரை (இந்தியர்) தன் அமெரிக்க வீட்டு வேலைக்கு அழைத்து வருகிறான். அவர் பெயர் சங்கீதா ரிச்சர்ட். அவரது பாஸ்போர்ட்டில் தவறான தகவல் கொடுக்கப்பட்டதாக புகார் இருக்கிறது.  ஆக இதில் இருவரும் உடந்தைதான் என்று தோன்றுகிறது. (தேவ்யானி & சங்கீதா)  வேலைப் பளு கடுமை என்று சங்கீதா கூற அதனால் அதிக சம்பளம் கேட்கிறார். அது மறுக்கப் படுகிறது. இந்தியாவில் டெல்லி நீதிமன்றத்தில் இது பற்றிய வழக்கு நிலுவையில் உள்ளது. அந்நீதிமன்றம் சங்கீதாவை  தாயகம் திரும்ப உத்தரவிட்டிகிறது.  இது ஒரு புறம். மறுபுறம் அமெரிக்க தொழிலாளர் சட்டப்படி அவருக்கு குறை ஊதியம் மற்றும் விடுப்பு அளிக்கப்படாதது  தவறு. அமெரிக்காவில் நம்மைக் காட்டிலும் தொழிலாளர் உரிமை மனித உரிமை நுகர்வோர் உரிமை அதிகம் என்பதை திறந்த மனத்துடன் நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.. ஆக 
1)அமெரிக்க நடைமுறை சட்டத்தின் படி தேவ்யானி தவறிழைத்தவராகிறார்.
2)மறுபுறம் அவர் ஒரு நாட்டின் தூதரக அதிகாரி.. 
3)வியன்னா கன்வென்ஷன் படி அவருக்கு சிறப்புச் சலுகை உள்ளது..
4)தேவ்யானி பாஸ்போர்ட் விவகாரத்தில் தவறிழைத்தால் அதற்கு சங்கீதாவும் உடந்தை என்பதுதானே மறைபொருள்
5)இந்தியாவில் அமெரிக்காவின் தற்போதைய வழக்குக்கு முன்னரே ஒரு வழக்கு நிலுவையில் உள்ளதே அதற்கு என்ன பதில்?

இப்படியாக ஒரே இடியாப்பச் சிக்கல்தான்....

இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் ஒரு முறை ஒரு வாசகர் ஜெயமோகனிடம் இலங்கை தமிழக மீனவர்களைத் தாக்குவதைப் பற்றி கேள்வி எழுப்பினார்.. அதற்கு ஜெயமோகன்,  இந்தியாவை பொருத்த வரை தடலடியாக ஒரு வெளிநாட்டின் விவகாரத்தில் நேரிடையாக தலையிட இயலாது.. அதன் பலவீனமே அப்படித்தான் என்று படித்ததாக ஞாபகம்..  ஈழம் முதல் இன்ன பிற உலகம் வரை அதே நிலைதான் நீடித்து வருகிறது.....

கருத்துகள் இல்லை :