வெள்ளி, 27 டிசம்பர், 2013

ஆங்கில அறிவு

நாம், நமது வாழ்க்கையில் ஆங்கிலத்தை ஏற்கிறோமோ இல்லையோ அது இன்றியமையாத தேவையாக இருக்கின்றதை நாம் திறந்த மனத்துடன் ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்.. இந்தி வேண்டாம் என்றோம்.  ஆனால் ஆங்கிலத்தை நம்மால் தவிர்க்க முடியவில்லை..
உலகத்தின் ஒட்டு மொத்த அறிவுப் பெட்டகத்தை தொகுத்து தன்னகத்தே வைத்துள்ளது ஆங்கிலம்.. 
சரி நேரிடையாக பிரச்சனைக்கு வருகிறேன்...

காட்சி ஊடகங்களின் வளர்ச்சியில் அதிலும் குறிப்பாக ஆங்கில செய்தி ஊடகங்களான TIMESNOW, NDTV,  CNNIBN, HEADLINES TODAY, NEWSx போன்றவை மிக முக்கியமானவை.  (அதற்காக தமிழில் ஒரேயடியாக இல்லை என்பதில்லை ஆனால் குறைவு.) மேற்படி ஆங்கில ஊடகங்கள்  பெரும் ஆங்கில அறிவும் அனாயச உச்சரிப்பும் கொண்டவர்களால் நடத்தப் படுகிறது. உண்மையில் மிக அழகானவையாகவும்  நேர்த்தியாகவும் இருக்கின்றன. அதில் பங்கேற்கும் அரசியல் கட்சியினரிடம் கேட்கப் படும் கேள்விகள்   அதற்கு அவர்கள் பதிலளிக்கும் விதம் சில சமயங்களில் சமாளிக்கும் விதம் என்று மேலும் காட்சிக்கு  மெருகூட்டுகிறது.. பெரும்பாலும் வட இந்திய அரசியல்வாதிகள்தான் அவற்றில் கலந்து கொள்கிறார். ஒரு சில தென்னிந்திய முகங்கள் அவ்வப்போது தென்படுகிறது. இங்குதான் பிரச்சனை...

தென்னிந்திய முகங்கள் குறைவாகக் காணப்படுவதற்கு காரணம், அவ்வூடகங்கள் தென்னிந்தியப்  பிரச்சனைகளை அதிகமாக அலசுவதில்லை.. இந்தியாவின் தலைவிதியை நிர்ணயிப்பதில் மத்திய அரசு பெரும் பங்கு (ஏன் முழுப் பங்கும்) வகிப்பதால் தில்லியில் வானளவு அதிகாரம் கொண்ட அரசியல்/அதிகாரிகள்  வர்க்கம் அங்கே உட்கார்ந்திருப்பதால் வட இந்தியாவைச் சுற்றியே சக்கரம் சுழல்கின்றது.. 

இந்தச் சூழலில் வட இந்தியாவின் கட்சிகளான RJD, SP, BSP, சிவ்சேனா, ஆம் ஆத்மி முதல் காங்கிரஸ் பிஜேபி வரையுள்ள கட்சியின் உயர் மட்டத் தலைவர்கள் மட்டுமல்லாது மாநில மாவட்ட நிர்வாகிகள் கூட சரளமாக ஆங்கிலத்தில் நேர்த்தியாக தன்னுடைய வாதங்களை எடுத்து வைக்கிறார்கள்.. பல முகங்களைப் பார்த்ததேயில்லை பெயர்களைக்  கேள்விப் பட்டதேயில்லை.. அந்தவூர் லோக்கல் ஆட்கள் . அவரிகளின் ஆங்கில அறிவும் உச்சரிப்பும் பிரம்மிக்க வைக்கிறது..... இந்தளவுக்கு நமது தமிழக கட்சிகளான திமுக அதிமுக தேமுதிக மதிமுக பாமக  வலது இடது கம்யூ வின் மாநில மாவட்ட நிர்வாகிகள் ஆங்கில அறிவு கொண்டிருக்கிறார்களா என்பது கேள்விக் குறிதான்.. நான் மேல் மட்ட தலைவர்களைச் சொல்லவில்லை அதற்கடுத்த மாவட்ட நிர்வாகிகளைச் (தமிழக காங் பிஜேபி உட்பட) சொல்கிறேன்..
இந்தியை மறுத்தோம்.. ஆனால் ஆங்கிலத்தையும் விட்டுவிட்டோமா...?
தெரிந்தவர்கள் கூறுங்கள்...

6 கருத்துகள் :

OLAIYUR சொன்னது…

"இந்தியை மறுத்தோம்.. ஆனால் ஆங்கிலத்தையும் விட்டுவிட்டோமா...?"

நச் சார். தமிழ்நாடு தவிர்த்து வேறு எங்கு சென்றாலும் சமாளிக்க முடியல குற்ற உணர்வு வருவதை தடுகக முடியல.அடுத்த தலைமுறையில் இது நடக்கும்னு தோனுது.வாரிசுகள் அனைவரும் படித்துவிட்டே அரசியலுக்கு வருகிறார்கள்

Badri Nath சொன்னது…

நன்றி olaiyur

Jayadev Das சொன்னது…

\\இந்தளவுக்கு நமது தமிழக கட்சிகளான திமுக அதிமுக தேமுதிக மதிமுக பாமக வலது இடது கம்யூ வின் மாநில மாவட்ட நிர்வாகிகள் ஆங்கில அறிவு கொண்டிருக்கிறார்களா என்பது கேள்விக் குறிதான்.\\ விசய காந்து Company என்பதை "கம்பேனி" என்பார்........ அப்புறம் ஆங்கில அறிவைப் பத்தி பேசவா முடியும்!!

Badri Nath சொன்னது…

வருகைக்கு நன்றி ஜெயதேவ் தாஸ்... நானும் அவர்கூற அப்படிக் கேட்டிருக்கிறேன்.. தனிப்பட்ட கட்சிகளை விடுத்து யோசித்துப் பார்த்தால், நம்முடைய inhibition க்கு காரணத்தைத் தேடுவதுதான் இந்தப் பதிவின் நோக்கம்....தமிழ் நம் வீட்டின் குலவிளக்குதான்... ஆனால் அதே வீட்டின் ஜன்னல் ஆங்கிலம்தானே.. அதை வைத்துக் கொண்டுதான் நாம் உலகைப் பார்க்க முடிகிறது என்ற ஆதங்கத்தில்தான் இந்தப் பதிவை எழுதினேன். உங்கள் கருத்துககு நன்றி...

M.Mani சொன்னது…

கழக ஆட்சி என்று ஆரம்பித்ததோ அன்றே தமிழகத்தின் கல்வி வளம் குன்றத்தொடங்;கிவிட்டது.
இன்றையத் தலைமுறையினரின் ஆங்கில அறிவுமட்டுமல்ல தமிழறிவும் மெச்சிக்கொள்கிறாற்போல் இல்லை. இதனை சென்னையைச்சுற்றியுள்ள தொழிற்கூடங்கள் மற்றும் அலுவலகங்களில் பணிபுரியும் தெலுங்கு, கன்னட, மலையாள, வங்காள மற்றும் இந்தி மொழிபேசும் இளைஞர்ளின் எண்ணிக்கையைக் கொண்டு அறியலாம்.

Badri Nath சொன்னது…

வருகைக்கு நன்றி மணி அவர்களே... தமிழகத்தில் கல்வி வளம் பற்றிய சில முக்கியமான விவாதங்கள் ஊடகங்களில் நடந்திருக்கின்றன.. அவை பெருமளவு கவனிக்கப் படாமல் போயிருப்பது காலத்தின் சோகம்.. நீங்கள் கூறியதைப் போல ஆங்கில அறிவு மட்டுமல்ல தமிழ் மொழிஅறிவும் குறைந்துதான் காணப்படுகிறது..