செவ்வாய், 31 டிசம்பர், 2013

பொருளாதார மந்த நிலை என்கிற RECESSION

இது ஒரு பொருளாதார அலசல் கட்டுரை அல்ல.. ஆய்வுக் கட்டுரையுமல்ல.. ஆனால் இவற்றைச் சொல்லாமல் இருக்க முடியவில்லை.. சில நாட்களாக இதைப் பற்றி எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.. சில தரவுகளுக்காக காத்திருந்தேன்.. முழுமையான தரவுகள் இல்லை என்றாலும் அங்கிங்கு அலைந்தும்  சில முக்கியமான மனிதர்களிடம் பேசித் திரட்டிய தகவல்தான்
 இது அதாங்க நம்மை வாட்டி வதைக்கும்  recession என்று அழைக்கப்படும் பொருளாதார மந்த நிலை... ..அதன் தாக்கங்கள் சில...(பிரபலம் என்கிற சொற்றொடர்களை மட்டும் உபயோகித்திருக்கிறேன்.. காரணம் சம்பந்தப்பட்ட பெயர்கள் தேவையில்லை என்பதற்காக..)

(1) ஒரு பிரபல கம்பெனி தன்னுடைய சென்னை தொழிற்கூடத்தை மூடிவிட்டது
(2) இன்னொரு பிரபல கம்பெனி தன்னுடைய கம்பெனியில் விருப்ப ஓய்வை அறிவித்திருக்கிறது
(3) இன்னொரு பிரபல நிறுவனம் (பெங்களுரு) ஆர்டர்களை காரணம் காட்டி மூடிவிட்டது
(4) மார்க்கெட்டிங் துறையில் இருக்கும் நண்பர் ஒருவர்,   பல நிறுவனங்கள் அவர் கம்பெனிக்குத்      தரும் ஆர்டர்களை குறைத்துக் கொடுக்கிறார்களாம் - காரணம் RECESSION
(5) டிசம்பர் முதல் வாரத்தில் சன் செய்திகளில் IT துறையின் வீழ்ச்சி பற்றி இரண்டு தினங்கள்     அலசப்பட்டது.. அதில் ஒரு மனநல மருத்துவர் கூறியதுதான் பிரச்சனையின் தீவிரத்தைக்      காட்டியது.. ஒரு நபர்  I.T. துறையில் பெரும் சம்பளக்காரர். தீடிரென்று சம்பளத்தைக் குறைத்து    ரூ40 ஆயிரம்தான் என்று சொல்லிவிட்டார்களாம்.. அவர் கட்டும் EMI தொகை மட்டுமே    ஐம்பதாயிரத்தைத் தாண்டுமாம்.. பிறகுதான் குடும்பச் செலவு.. தற்போது அவர் தற்கொலை    எண்ணத்துடன் தன்னை அணுகியதாக அந்த மருத்துவர் கூறினார்.
(6) நகரைச் சுற்றிலுமுள்ள அடுக்குமாடி கட்டிடங்கள் கட்டப் பட்டு தேங்கிக் கிடப்பதாக தகவல்.. சில     நிறுவனங்கள் தங்கள் விலையை அதிரடியாக குறைத்து வருகின்றன.. காரணம்     கேட்டால்... ”சேல்ஸ் ஆகல சார்.. என்ன பண்றது ” என்ற பதில் வருகிறது

இந்த recession ஏன் வருகிறது..எதனால் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.. முதலாளித்துவ பொருளாதாரத்தில் இவை தவர்க்க முடியாது என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.. ஒரே பதில்தான் ”அது அப்படித்தான்”.. மேலும் கடும் போட்டி கொண்ட சந்தை பொருளாதாரம் காரணமாக மட்டுமல்ல இன்னொரு பக்கம் கள்ளச் சந்தை பதுக்கல் கருப்புப் பணம் யூக வர்த்தகம் வரி ஏய்ப்பு அதிக லாப நோக்கு போன்றவைகளும் இவ்வகை பொருளதாரத்தின் உடன் பிறந்தவைகளாக இருப்பதால் ஒரு வைரஸாக நாட்டை பீடித்து வாட்டுகிறது...

மேற்கண்டவை மேலும் மேலும் இருக அது தவிர்க்க முடியாத recessionல் போய் முடிகிறது. இதனால் உழைக்கும் மககள் மேன்மேலும் நெருக்கடிக்கு உள்ளாகிறார்கள்.. 

சரி.. இது எப்படி எப்போது தீரும்...

அதற்கும் சில பண்டிதர்கள் சொல்லி நான் தெரிந்து கொண்டது..
1) இன்னமும் சில வருடங்கள் அப்படி ஒரு சுழற்சி இருக்கும்.. பிறகு மீளும்
2) மத்தியில் புதிய அரசு ஏற்பட்டவுடன் ஸ்திரமாகும்

நான் தெரிந்து கொண்ட வரை இவ்வகை பதில்களைத்தான்  (வலதுசாரி) அறிவு ஜீவிகள் தருகிறார்கள்..

ஆனால் எனக்குத் தெரிந்தவரை, மக்கள் தங்கள் அதிருப்தியை ஓட்டுச் சீட்டுகள் மூலம் காட்டுகிறார்கள்.. .. உதாரணம் சமீபத்தில் டெல்லியில் ஆட்சியைப் பிடித்த ஆம் ஆத்மி கட்சியினர்.. கட்சி தொடங்கி  ஒரு வருடத்திலேயே டெல்லி வாசிகளால் ஆதரிக்கப் பட்டு   பாரம்பரியமாக ஆட்சிக்கு வரும் பெரும் அரசியல் வாதிகளை ஓரங்கட்டி ஆம் ஆத்மிக்களை ”நீ வாப்பா” என்று அழைத்த விநோதத்தைப் பார்க்க நேர்ந்தது..

பல்வேறு மொழிகள் இனங்கள் இணைந்து வாழும் டெல்லிவாசிகள் இந்தியாவின் ஒரு வகைமாதிரி...

5 கருத்துகள் :

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

வணக்கம்...

வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… Followers ஆகி விட்டேன்… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

வணக்கம்...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/01/blog-post_4.html) சென்று பார்க்கவும்... நன்றி...

Badri Nath சொன்னது…

நன்றி நண்பர் திண்டுக்கல் தனபாலன்...

Pandu Kavingar சொன்னது…

நல்ல கட்டுரை

Pandu Kavingar சொன்னது…

நல்ல கட்டுரை...

Badri Nath சொன்னது…

வருகைக்கு நன்றி Pandu Kavingar..