வியாழன், 19 ஜூன், 2014

வௌங்கிடும்....

மருத்துவம்  படிப்பு சம்பந்தமாக எனக்குத் தெரிந்ததை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்..  அதன் காரணமாகத்தான் சில வாரங்கள் பதிவுகள் எழுத இயவில்லை..


கடந்த வருடம் எனது நண்பர் சொன்னார். ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படிக்க  ரூ 35 லட்சம் கேட்பதாகச்  சொன்னார்.. வருடத்திற்கு ஃபீஸ் ரூ 6 லட்சமாம்..  இந்த வருடம் நிலைமையே தலைகீழ்.. ரூ 50 பிறகு 55 என்று லட்சக் கணக்கில் ஏலமே நடக்கிறது.. TIMES OF INDIA பத்திரிகையில் போட்டிருந்தார்கள்.. இந்தியாவில் ஒரு மாணவன் தனியார் கல்லூரியில் படிக்க விரும்பினால் ரூ 1 கோடி வரை செலவு செய்ய வேண்டியிருக்கும் என்று.. அப்படி செலவு செய்யவும் ஆட்கள் இருக்கிறார்கள் என்பது வேறு சங்கதி.. இந்த அழகில் பொறியியல் படிப்பு என்பது கேலிக்கூத்தாக ஆகிக் கொண்டிருக்கிறது... பல கல்லூரிகளில் சரியான உட்கட்டமைப்பு (கட்டமைப்பே கிடையாது) இல்லையாம்...  

எல்லாம் சரிதான்.. விலைவாசி ஏறிக்கொண்டே செல்கிறதுதான்.. அதனால் அவர்களால் சமாளிக்க முடியாது என்று அரற்றுகிறார்கள்.. ஆனால் எனக்கு ஒரு சந்தேகம்தான்...

ஒரு மாணவன் இத்தனை கொடுத்து மருத்துவம் பயின்று கன்சல்டேஷன் என்று எத்தனை கேட்பான்..

கன்சல்டேஷனுக்கு ரூ 5000./ ரூபாய்... 
ஊசி போட்டு மருந்து கொடுத்தால் ரூ 10,000./   என்றா........???????

வௌங்கிடும்....

2 கருத்துகள் :

'நெல்லைத் தமிழன் சொன்னது…

மருத்துவரின் சம்பளம் (சாதாரணமாக) வருடத்துக்கு 12 லட்சம். கமிஷன் 12 லட்சம். கிளினிக்கில் 20 பேஷண்டுகளுக்கு 20X100 2000 ரூபாய் ஒரு நாளைக்கு. வருடத்துக்கு 6 லட்ச ரூபாய். Return on Investment 4 வருடம்தான். ஆனால் இவர்கள் சாகும்வரை வேலை பார்க்கலாம். வருமானம் வருடா வருடம் (experience) கூடத்தான் செய்யும்.

Badri Nath சொன்னது…

வருகைக்கு நன்றி நெல்லைத் தமிழன்.. நீங்கள் சொல்வது நல்ல அனுபவம் வாய்ந்த மருத்துவர் பற்றிக் கூறுகிறீர்கள்.. ஆனால் வெறும் MBBS படித்து விட்டு வேலைக்கு வந்தால் 20 ஆயிரம் 30 ஆயிரம் தான் சம்பளம் வருதாக சில செய்திகள் படித்தேன்.. ஆனால் அவர்கள் படிப்புக்காக கொட்டிக் கொடுப்பதோ 1 கோடியைத் தாண்டுவதாகவும் அந்தச் செய்தி கூறுகிறது (ஆதாரம் TIMES OF INDIA ) அதை வைத்துத்தான் இந்தக் கட்டுரை.. நன்றி