திங்கள், 9 ஜூன், 2014

மாணவர்கள் எதிர்காலத்திற்காக சில டிப்ஸ்....

பள்ளி இறுதிப் படிப்பைப் முடித்ததும் கல்லூரிகளில் இடம் பிடிக்க இளைஞிகளும் இளைஞர்களும் கடும் போட்டியைச் சந்திக்கிறார்கள்.. வருடா வருடம் இதன் தீவிரம் அதிகமாகிக் கொண்டே வருகிறது...


நண்பர் ராமகிருஷ்ணன் தனது தொழிற்சங்கத் தள்த்தில் சில முக்கியமான டிப்ஸ்கள் கொடுத்திருக்கிறார்கள்.. நான் படித்ததில் தற்போது மிகவும் பிடித்தமாக இருந்த படியால்... நமது வருங்கால சந்ததியினருக்காக உபயோகமான இந்தப் பட்டியல்...

இதோ அவர் தளத்திலிருந்து....
---------
”மாணவர்களே, உங்களுக்கு நான் சொல்லிக் கொள்வது என்னவென்றால், நீங்கள் எத்தனை மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும்,  வீட்டிற்கு அருகே இருக்கிறது என்பதற்காகவோ, உங்கள் கூடப் படித்த நண்பன் சேர்ந்திருக்கிறான் எனும் காரணத்திற்காகவோ, அந்தக் கல்லூரியில் சேரவேண்டாம்.

ஒரு கல்லூரியில் சேரும் முன் கீழ் கண்டவற்றைப் பற்றி நன்றாக தெரிந்து கொள்ளுங்கள்

1. அந்தக் கல்லூரியின் வருடாந்திரத் தேர்ச்சி விகிதம் எவ்வளவு
2. வளாக வேலைக்கு தனியாக துறை இருக்கிறதா? வளாக வேலைக்கென்று கடைசி வருடம் தனியாகப் பணம்  பெறுகிறார்களா?
3. வளாக வேலை எத்தனை பேருக்கு கிடைத்துள்ள்ளது
4. கல்லூரியில் ஆசிரியர்கள் முழுவதுமாக இருக்கிறார்களா?
5. சென்ற வருடம் முதல் ஆண்டு, இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு மற்றும் நான்காம் ஆண்டின் தேர்ச்சி விகிதம் எவ்வளவு? எத்தனை பேர் அர்ரியர்ஸ் வைத்திருக்கிறார்கள் என்றெல்லாம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்
6. மிக முக்கியமாக ஒரு கல்லூரியை அதன் இன்டர்நெட் வலைத் தளத்தை வைத்து மட்டும் முடிவு செய்யவே செய்யாதீர்கள். அந்தக் கல்லூரி க்கு நேரடியாக விசிட் செய்யுங்கள்.
7. மாணவர்களின் படிப்பு மட்டுமல்லாத மற்ற திறமைகளை (Soft Skills Set ) வளர்க்க என்னென்ன ட்ரைனிங் தருகிறார்கள். அவற்றிற்கெல்லாம் தனியாக பணம் வாங்குகிறார்களா?
8. அந்தக் கல்லூரியின் பழைய மாணவர் யாரையாவது சந்தித்து கல்லூரி பற்றிய அவரின் கணிப்பை கண்டிப்பாக அறிவுரையாகக் கேட்கவேண்டும்.
9., பாடத் திட்டங்களை நன்றாக சொல்லிக் கொடுக்கிறார்களா?

இதையெல்லாம் அறியாமல் நீங்கள் ஒரு கல்லூரியை தேர்ந்தெடுக்கக் கூடாது. 575 பொறியியல் கல்லூரிகளும் 48 தனியார் நிகர் நிலை பல்கலைக் கழகங்களும் பல்கிப் பெருகியுள்ள கல்வி நிறுவனங்களுக்கு சேவை பெரிதல்ல. பணமே பெரிது. பணம்தான் பெரிதென நினைக்கும் கல்வித் தாளாளர்களே, வள்ளல் பச்சையப்பர், வள்ளல்கள் ராமசாமி, இலக்ஷ்மண சாமி, பெண்ணாத்தூர் சுப்ரமணியம், ஆகிய பெரும் கல்வி வள்ளல்கள் இடையே, உங்கள் பெயரையும் நீங்கள் பதிக்க முயலும்போது, விஷயமறிந்த என் போன்ற ஆட்கள் ஏளன நகைப்பு செய்வது தவிர வேறு என்ன செய்வது?”
---------
நன்றி ராமககிருஷ்ணன் நடத்தும் NFTE தளம் (அவர் அனுமதியுடன் எடுத்தாளப்பட்டிருக்கிறது)

கருத்துகள் இல்லை :