சனி, 7 ஜூன், 2014

தேவையற்ற செயல்....

நேற்று நடந்த சீக்கியர்  கலவரம் மிகக் கொடூரமானது.. நாம் ஏதோ பழைய மன்னர் காலத்திற்குச் சென்றதைப் போல பயங்கரமாக இருந்தது..


இந்தக் கலவரத்தில் பெண்களும் பாதிக்கப் பட்டதாக படங்கள் பார்க்க நேர்ந்தது.. மதத்தின் பெயரால் நடப்பது எல்லாம் வெறித்தனமாகவும் பயங்கரமாகவும் ஈவு  இரக்க மற்ற முறையில் நடப்பது மிக வேதனை...

இதையா குரு நானக் விரும்புவார் என்பதை சம்பந்தப் பட்டவர்கள் உணரவேண்டும்....புனிதமான ஒரு கோவிலில் இப்படியா நடந்து கொள்வது ...?என்ன காரணமாம்... 1984 ல் நடந்த சீக்கிய கலவரம் மற்றும் OPERATION BLUE STAR  ஒட்டிய நிகழ்வுகளை,  ஐக்கிய நாட்டுச் சபை  (UN) விசாரிக்க வேண்டும் என்று ஒரு தரப்பினரும் வேண்டாம் என மறு தரப்பினரும் சண்டையிட்டுக் கொண்டார்களாம்....

நமது நாட்டில் உள்ள நீதித் துறை மீது நம்பிக்கை வைக்காமல் வெளியே நீதியைத் தேடுவதை நினைத்தால் சிரிப்பாகத்தான் இருக்கிறது.. இந்திரா காந்தி வலிமையாக இருக்கும் போதே (அலகாபாத் நீதி மன்றம்) அவர் தேர்தலில் போட்டியிட்டதை செல்லாது என்று அறிவித்த,  ராஜீவ் கொலை குற்றச்சாட்டப்பட்டவர்களின்  மரண தண்டனை தள்ளுபடி செய்த மாபெரும் நீதிமான்களை கொண்ட நீதி மன்றம்தான் நம்முடையது.. 

சில விமர்சனங்கள் இருக்கிறதுதான் செய்கிறது.. ஆனால் உலகத்தில் அப்பழுக்கற்ற நிறுவனமோ ஸ்தாபனங்களோ  தத்துவங்களோ கிடையாது என்பதைதான் காலம் நமக்கு எடுத்துச்  சொல்லி வருகிறது. 

அந்த வகையில் இவர்கள் கலவரம் தேவையற்ற ஒன்றுதான்...

கருத்துகள் இல்லை :