செவ்வாய், 3 ஜூன், 2014

இனி ஒரு விதி செய்ய வேண்டும்.....

சற்றே காலதாமதத்திற்குப் பிறகு கனத்த இதயத்துடன் இந்தப்  பதிவை எழுத வேண்டிய சூழல்...  என் நண்பருக்கு நிகழ்ந்த விபத்து பற்றி....


சில தினங்கள் வேறு மாநிலப் பயணம் இருந்ததால் பதிவுகள் எழுத இயலவில்லை... நேற்றுதான் ஊர் திரும்பினேன்.. உடனே பேரிடியாக அந்தச் செய்தி... பொதுவாக நாளேடுகளில் விபத்து பற்றி அடிக்கடி செய்திகள் பார்க்க நேரும் .. அதைப் படிக்கும் போதே அன்று முழுவதும் சஞ்சலமாக இருக்கும்.. தற்போது ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்த கதையாய் என் நண்பருக்கே அந்தக் கதி... 

ஒரு விசேஷத்திற்காக வெளியூர் சென்றிருக்கிறார்கள்.. NH45 ல்தான் இருக்கும்... காரில் குடும்பத்துடன்.. புதிய வண்டி என்கிறார்.. மெதுவாகச் சென்றேன் என்கிறார்..  ஆனால் ஆக்சில் உடைந்தது என்கிறார்... வண்டி குட்டிக்கரணம் அடித்து மீடியனைத் தாண்டி அந்தப் பக்கம் விழுந்ததில் உள்ளே இருந்த நண்பர் மற்றும் குடும்பதினருக்கு எலும்பு முறிவுதான்.. ஆனால் அவர் மனைவி அதே இடத்தில் பிணமாகிவிட்டார்...

தம்பதியினர் நடுத்தர வயதுக்காரர்கள்.. எப்படி இந்தச் சோகத்தைக் கடக்கப் போகிறார்.. தாயை இழந்து நிற்கும் மகன் மகள்கள் பற்றி நினைக்கும் போது துக்கம் அடைக்கிறது...

அய்யா ஆட்சியாளர்களே... விஞ்ஞானிகளே... பெரிய மனிதர்களே... விபத்து இல்லாத தேசத்தை உருவாக்கவே முடியாதா....? என்று நெஞ்சு விம்முகிறது....

என்ன வென்று சொல்வது...

6 கருத்துகள் :

Ramani S சொன்னது…

எதிர்பாரா இதுபோன்ற இழப்புகள்
நம்மை நிலைகுலையச் செய்துவிடுவது நிச்சயம்
என் நண்பனின் இதுபோன்ற இழப்பை நினைவுறுத்திப்போனது
தங்கள் பதிவு

Ramani S சொன்னது…

tha.ma 1

Badri Nath சொன்னது…

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு ரமணி அவர்களே... நான் அவரிடம் தொலைபேசியில் கூட பேச விரும்பவில்லை... தகவல் மட்டுமே தெரிந்து கொண்டேன்.. சில தினங்களுக்குப் பின்னர்தான் அவர் வீட்டுக்குச் சென்று ஆறுதல் தர வேண்டும்.. ம்ம்.... என்ன செய்வது...

http://nftekanchipuram.blogspot.in/ சொன்னது…

இது போன்றசில நிகழ்வுகள் நம் மனதில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதே உண்மே. இந்த தருணத்தில் அவர் மனதை திடமாக வைத்திருந்தால் மட்டுமே அவர் குடும்பத்திற்கு நலம்.

http://nftekanchipuram.blogspot.in/ சொன்னது…

யார் பத்ரி அது? எப்படி இருந்தாலும் இந்த சமயத்தில் உன்நண்பர் மனதிடத்துடன் இருக்க வேண்டுகிறேன். இழப்பு அதுவும் மனைவியின் மரணம் ஈடு செய்ய இயலாத்துதான்.அவருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்

Badri Nath சொன்னது…

ராம்கி.. நமது அலுவலக நண்பர்தான்.. நேரில் சொல்கிறேன்.. அவரிடம் பேசவே முடியவில்லை.. அதனால் பின்னர் பேசலாம் என்று முடிவு செய்து விட்டேன்.. பிள்ளைகள் தற்போதுதான் கல்லூரி பள்ளி என்று படித்துக் கொண்டிருக்கிறார்கள்...