செவ்வாய், 1 ஜூலை, 2014

சரிந்த நம்பிக்கை..

போரூர் மவுலிவாக்கத்தில் நடந்த கொடுமையை என்ன வென்று சொல்வது... CMDA approved என்கிறார்கள்... எப்படி 11 மாடிக்கு எதையும் பரிசோதிக்காமல் அங்கீகாரம் கொடுத்தார்கள்..  எல்லாம் தெரிந்த சங்கதிதான்... இந்தியாவில்தானே வாழ்கிறோம்...

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தடலடியாக CMDA மீது குற்றம் சாட்டிய செய்தி இன்றய நாளேட்டில் வந்துள்ளது.. மிகப் பெரிய பொறுப்பில் உள்ள ஒரு மனிதருக்கு தெரிந்த விஷயம் தமிழ்நாட்டில் எவருக்கும் தெரியாதா...? 

இந்தக் கட்டிட  நிறுவனத்தினரை நம்பி 50 லட்சம் 60 லட்சம் கொடுத்த நடுத்தர வர்க்கதினரின் கதி...? ஆறுதலாய் ஞான தேசிகன் (காங்) அறிக்கை கொடுத்துள்ளார்.. அவர்கள் EMI கட்டிக் கொண்டிருந்தால் அதை அரசு ரத்து செய்ய வேண்டும் என்று... (ஆளுங்கட்சியானாலும் இதைத்தான் சொல்வரா என்பது வேறு விஷயம்)

நடிகர் அரசியல்வாதியான சிரஞ்ஜீவி ”ஆந்திராவில் குறைவாக கூலி தருகிறார்கள்.. அதனால்தான் மனவாடுகள் இங்க வருகிறார்கள் ” என்கிறார்..

அப்படியென்றால்
1) தமிழ்நாட்டில் கூலி அதிகம் தர வேண்டும்
2) தமிழ்நாட்டில் இப்படிப்பட்ட வேலைக்கு ஆட்கள் தட்டுப்பாடு இருக்கவேண்டும்.

உண்மையில் இரண்டும் சரியான கருத்தா என்பது தெரியவில்லை.. தமிழ்நாட்டில் இப்படிப்பட்ட வேலைகளுக்கு தமிழ்க்காரர்கள் அதிகமாக சம்பளம் கேட்கலாம்.. ஆக குறைவான கூலிக்காக வெளி மாநிலங்களான ஆந்திரா மற்றும் பீகார் ஒரிசா ஆகியவ்ற்றில் உழைக்கும் மக்கள் திரள்கிறார்கள்... 

அதைவிட தங்கள் மாநிலங்களிலேயே அவர்களுக்கு வேலைவாய்ப்பை இவர்கள் ஏற்படுத்தித் தரலாம்...

எல்லாவற்றையும் விட பேரிடர் மேலாண்மையில் நாம் மிகவும் துடிப்பாகவும்   சிற்பபாகவும் திகழ வேண்டிய தருணம் இது.. 

அப்பப்பா எத்தனை உயிர்கள்...



2 கருத்துகள் :

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

சரிந்த நம்பிக்கையை தூக்கி நிறுத்த வேண்டியது அரசின் பொறுப்பு.

silanerangalil sila karuththukkal சொன்னது…

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி முரளிதரன் சார்... உண்மைதான்.. அரசு முன் முனைப்புடன் செயல் படும் என்றே நம்ப வேண்டியதுதான்...வேறு என்ன செய்ய முடியும்.. மேலும் இதை நம்பி முதலீடு செய்ய நடுத்தர மக்கள் வயிற்றில் அடிக்கும் இதைப் போன்ற நபர்கள் பிடியிலிருந்தும் காப்பது அரசின் கடமையும் கூட....