புதன், 23 ஜூலை, 2014

உறுத்தல்கள்....

நீதியரசர் கட்ஜு அவர்கள் சமீபத்தில் தன் முகநூலில் சில தமிழர்கள் கேட்டுக் கொண்டதால் தன்னுடைய சென்னை உயர் நீதிமன்ற  அனுபவங்களை எழுதினேன் என்கிறார்....


அவர் எழுதியது மிகப் பெரிய சர்ச்சயாக வெடித்துள்ளது..

சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி நியமனத்தில் குறிப்பிடட நீதிபதிக்கு சலுகை காட்டுமாறு திமுக,  பிரதமர் மன்மோகன் சிங்கை நிர்பந்தப்படுத்தியதாகவும் அந்த நீதிபதி மேல் குற்றச்சாட்டுக்காக ரகசிய விசாரணை இருந்ததாகவும் தலைமை நீதிபதிக்கு இதைப் பற்றி தாம் கூறியதாகவும் நீதியரசர் கட்ஜு சொல்கிறார்.

நேற்றய   TIMES NOW  டிவியில் பிரதமர் அலுவலகம் ”ஏன் அந்த குறிப்பிட்ட நீதிபதிக்கு பணி நீட்டிப்பு வழங்கவில்லை..” என்ற விளக்கம் கேட்டுள்ள குறிப்பை போட்டுப் போட்டுக் காட்டிய்து...  அர்னாப் அலறிக் கொண்டேயிருந்தார்... ”அப்படியானால் நீதியரசர் கட்ஜு  வின் கூற்று சரிதான்.. சரிதான்..” என்று

2005 நடந்த விவகாரத்தை தற்போது 2014 நீதியரசர் கட்ஜு எடுக்க என்ன காரணம் என்பதுதான் பலர் கேட்கிறார்கள்.. அப்படி கேட்பவர்களில் ஃபாலி நாரிமன் (சற்று காட்டமாக) சோலி சோரப்ஜி மற்றும் ராம்ஜெத்மலானி போன்ற பிரபல வழக்கறிஞர்கள்... நீதியரசர் கட்ஜுவோ ”உங்களுக்கு என்ன தெரியும் நான் நீதிபதியாக பணியாற்றியவன்.. வெளியுலகில் போய் எல்லாவற்றையும் சொல்லிக் கொண்டிருகக முடியாது.. சொல்ல வேண்டிய இடத்தில் சொல்லி விட்டேன்..” என்கிறார்..

இத்தனை கால தாமதம் என்பது சற்று உறுத்தல்தான்.. 

இது ஒரு புறம்...

கலைஞரோ,,” நீதியரசர் கட்ஜு முரண்பாட்டுன் பேசுகிறார் .. நேர்மைற்ற செயல்.. இத்தனை நாட்கள் பதவி அனுபவத்தீர்களே.. தற்போது ஆட்சி மாறியவுடன்...” என்று அறிக்கை மேல் அறிக்கை தருகிறார்...

சரிதான் கலைஞரே... ஒரு இடத்திலாவது நீதியரசர் கட்ஜுவின் கூற்று தவறு என்றுகிறீர்களா என்றால்.. அதை விட்டுவிட்டு நேர்மற்ற செயல்  முரண்பாடு பதவி அது இது என்று மட்டும் கூறுகிறீர்களே.. 

அது எல்லாவற்றை விட உறுத்தலாக இருக்கிறது..

கருத்துகள் இல்லை :