புதன், 30 ஜூலை, 2014

பக்தி மார்க்கம்...

இந்த அனுபவத்தை எழுதலாமா என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஜெயமோகன் தளத்தில் வந்திருந்த இமயச் சாரல் -1  என்கிற கட்டுரையைப் படித்தவுடன் உடனே எழுதுகிறேன்.

கடந்த சனிக் கிழமை (26.7.14)  அன்று நானும் என் மனைவியும் தஞ்சை சென்றிருந்தோம்.  ரயிலில் கடைசி நேர டிக்கெட் கிடைக்காததால் பேருந்துப் பயணம்.. கோயம்பேட்டில் பஸ் ஏறும் போது மணி 1050  இரவு .  செங்கல்பட்டு டோல் வரை சரியாக வந்தது அப்போது மணி 12 மேல் இருக்கும்... இரவு 1 மணி வாக்கில் சற்று பிரச்சனை போலத் தெரிந்தது.. இரவு 1.30 க்கு வண்டியை டிரைவர் ”ஆஃப்” செய்து விட்டார்.. இறங்கிப் பார்த்தால் 2 கிமீ தூரம் பல வண்டிகள் டிராபிக் ஜாம்மில் மாட்டிக் கொண்டது தெரிந்தது... நம்ம மவுண்ட் ரோட்டில்கூட இப்படியொரு டிராபிக் ஜாம் பார்த்ததில்லை...

ஒரு வழியாக மேல் மருவத்தூரைக் கடந்த போது மணி காலை 5த் தொட்டது.. கிட்டத்தட்ட 4-1/2 மணி நேரம் வீண் விரயம்.. தஞ்சை வந்த போது காலை 1145 இருக்கும் அதாவது கிட்டத்ட்ட 13 மணி நேரம்...   அடுத்த நாள் பார்க்கும் போது எங்கள் இருவர் கால்களும் வீங்கியிருந்தது...

இதற்குக் காரணம் .. பக்தி மார்க்கம்... மேல் மருவத்தூரில் பொட்டு வைக்கும் விழாவாம்..

எல்லாம் சரிதான் அய்யா...

எத்தனை நோயாளிகள் இருதய நோய் சர்க்கரை நோய் 
எத்தனை ஆம்புலன்ஸ்கள் ...
எத்தனை நபர்கள் அவசர வேலையாக சென்றிருப்பார்கள்

சற்று பக்திமான்கள் யோசிக்க வேண்டும்..

இதோ.. ஜெயமோகன் தளத்திலிருந்து
” ராஜகோபாலன் ஏறிய பஸ் மேல்மருவத்தூர் அம்மாவின் பக்தர்களால் நான்கரை மணிநேரம் தடுத்து நிறுத்தப்பட்டது. அவர் பத்தரை மணிக்குத்தான் கோவை வந்தார். பன்னிரண்டுக்கு விமானம். இறங்கிய இடத்தில் இருந்து டாக்ஸியை எடுத்து அடித்துப்புரண்டு கடைசிக்கணத்தில் வந்து சேர்ந்தார்.....”
சுட்டி http://www.jeyamohan.in/?p=58517

கருத்துகள் இல்லை :