ஞாயிறு, 20 ஜூலை, 2014

மும்பை மழை

கடந்த வாரம் மும்பை மாநகருக்குச் செல்ல வேண்டியிருந்தது...  அந்த ஊரின் சீதோஷ்ண நிலை பற்றி எனக்குத் தெரியாது... ..



மழை சீசனாம்... என் நண்பர், .”என்ன சார்..இப்ப போய்  அங்க போறிங்க... மழ கொட்டும்... எதுக்கும் குடையை எடுத்துங்க...” என்றார்..

அவர் சொன்னதைப் போல நான் போய்ச் சேர்ந்த போது, காலை 4 மணி... பேய் மழை... அப்பப்பா என்னமாய் சீற்றத்துடன் பெய்து கொண்டிருந்தது... கிட்டத்தட்ட 5 மணிக்கு மேல் சற்று குறைந்தது...

என் மும்பை நண்பரிடம் கேட்டேன்.. மும்பை மாநகரில் ஜீன் முதல் ஆகஸ்ட் (விநாயகர் சதுர்த்தி) வரை மழை விட்டுவிட்டுதான் வந்து கொண்டிருக்குமாம்.. பல கோடி மக்களின் ஒரு வருட தண்ணீர் தேவைக்கு அந்த மூன்று மாத மழைதான் மூலதனமாம்... 

இந்த வருடம்தான் குறைவாக பெய்திருக்கிறதாம்...(நான் வந்த நேரமோ)...அதுவும் லேட்டாக ஜீலை மாதம்தான் ஆரம்பித்ததாம்... சற்று குறைந்து மீண்டும் சற்று சூடாகி கொட்ட ஆரம்பித்தால், மாநகரின் சாலைகள் ரயில் பாதைகள் என்று அனைத்தையும் முடக்கிப் போட்டு விடுமாம்....வேலைக்கே செல்ல இயலாத படி ஆகிவிடுமாம்... 

அதனால் என்ன...? இத்தனை கோடி மக்களின் தாகத்தை தீர்க்கும் அந்த பேய் மழை உண்மையில் இயற்கையின் கொடைதான் ,,,



கருத்துகள் இல்லை :