புதன், 5 நவம்பர், 2014

இன்னமும் தீட்டப் பட வேண்டிய ‘கத்தி‘

கமர்சியல் இயக்குனர்களில் முருகதாசின் உலகம் சற்று வித்தியாசமானதுதான்... தனக்கென சில சிந்தனைகளை கொண்டிருப்பவர் முருகதாஸ்... 


ஆனால் அதே சமயம்  அவரால் சினிமா வணிகத்தை விட முடியாது என்பதை அவர் படங்கள் காட்டுகின்றன... சினிமா வணிகம் என்பது ஒரு காட்டாறு.. எப்படிப்பட்ட ஆட்களையும் இழுத்துக் கொண்டும் அடித்துக் கொண்டும் போய்விடும்....அதன் போக்கில்தான் எத்தனை பெரிய ஆளாக
இருந்தாலும் சிந்திக்கச் சொல்லும்...

சரி கத்திக்கு வருவோம்...

உண்மையில் படம் என்பதே  திரைப்படத்தில வரும் சில நிமிடக்காட்சிகள்தான்... அதாவது லயன்ஸ் கிளப் சார்பாக விஜய்க்கு (கதிரேசன் என்கிற ஜீவா) காசோலை தரும்போது  5 நிமிடம் ஓடக்கூடிய
ஒரு  ஏ வி காட்டுவார்கள்.. அது மட்டும்தான்...  அதன் மேல் முருகதாஸ் ’செல்பி’ எடுத்து ஜிகினா வேலை காட்டியிருக்கிறார்... சற்று சுவாரஸ்யமாக பல லாஜிக் ஓட்டைகளுடன்...

முதலில் இரட்டை வேடம் என்பதே அபத்தம்தான்.. கம்ர்சியலுக்காக தமிழ் (அல்லது இந்திய) சினிமாகாரர்கள் கண்டுபிடித்ததுதான்... அதுவே சற்று உறுத்தல்தான்...காரணம் படம் ஒரு காமெடிப் படமன்று.. சீரியஸ் விஷயத்தை கையாளும் படம்... அங்கே இரட்டை வேடம் ஒட்டவில்லை...

சரி.. கெட்டப்பாவது விஜய் மாற்றுவாறா என்றால் ...ம்ம்.... அதே கெட்டப் தான்....கிட்டத்தட்ட அதே பாடி லாங்க்வேஜ்தான்...பேச்சைத் தவிர.. விஜய் அதை சேஷ்டைகள் மூலம் சரிகட்டப் பார்க்கிறார்...

கார்ப்பரேட் கம்பெனிக்காரர்கள் இத்தனை லோக்கலாக இறங்குவார்களா என்று நினைக்கும் போது சிரிப்புதான்... கிட்டத்தட்ட அனைத்து MNCகாரர்களையும் பழைய அசோகன் பாணி ’மொட்டை பாஸ்’ ரேஞ்சுக்கு 
காட்டியிருக்கிறார்கள்...தேவையே இல்லை... எந்த கட்சி அரசாண்டாலும் அவர்களுக்குச் சார்ப்பாக  இயங்கும் உலகத்தில் வேறு பாஷையில் சொல்லவேண்டும் என்றால் ’’சர்காரு எங்க பக்கம் இருக்கும் போது நாங்க சட்டத்திட்டம் மீறி இங்க நடப்பதில்ல...” கதைதான்....

படத்தின் தயாரிப்பாளரே (லைக்கா) ஒரு எம்என்சிதானே...விஜய் வேறு கோக்
 கம்பெனிக்காக விளம்பரபடத்தில் ஆடியிருக்கிறார்... நோக்கியா செல் நமக்கு வேண்டுமே... ஆனால் அந்தக் கம்பெனி கதவடைத்தால் பல ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழப்பு ஏற்படுகிறது.. ஆகவே சற்று தடுமாறித்தான் போயிருக்கிறார்  முருகதாஸ் அதனால்தான் ‘‘எம்என்சியே வேண்டாம்னு
சொல்லல...‘‘ டயலாக்... ஆனால் தண்ணி எடுக்கும் கம்பெனி மட்டும் வேண்டாம் என்று எப்படிச் சொல்லமுடியும்...? கனிம வளங்கள் சுரண்டும் கம்பெனிகள் பரவாயில்லையா...? சரி எம்என்சி வேண்டாம் என்றால் இதே வேலையை  நம்மவூர் மாஃபியாக்கள் படு மோசமாக செய்வார்களே.. சிக்கல்தான்....

இப்படி எத்தனை கேள்விக்குறிகள் இருந்தாலும் கத்தியை சற்று பட்டைத் தீட்டிக் காட்டியிருந்தால் பரவாயில்லையோ என்று தோன்றியது,,

4 கருத்துகள் :

பெயரில்லா சொன்னது…

KATTHI PADAM OR MOKKA BLADU.
STORY ALSO STOLEN BY THE
DIRECTOR WHO IS FAMOUS FOR
COPYING.

silanerangalil sila karuththukkal சொன்னது…

வருகைக்கு நன்றி அனானி.. படத்தின் மையக்கருத்தான MNCயின் இயற்கை வளக் கொள்ளை என்பது
இந்தியாவின் ஒரு முக்கிய பிரச்சனை.. அதை பேசுவதால்தான் அதற்கு விமர்சனம்.. அந்த மையக் கரு இல்லாவிட்டால் அதற்கு விமர்சனம் எழுதவே மாட்டேன்...

prasanth சொன்னது…

very worst politics....future is going to be dangerous

silanerangalil sila karuththukkal சொன்னது…

வருகைக்கு நன்றி பிரசாந்த்...எதை சொல்கிறாய் என்று புரியவில்லை..pl spell out correctly....