புதன், 22 ஏப்ரல், 2015

’சில நேரங்களில்.....’

’யானை இறந்தாலும் ....’ என்கிற கதையாக தொடர்கிறது  ஜெயகாந்தன் மறைவு.....சர்ச்சையும் அவரும் எப்போதும் ஒட்டிப் பிறந்தவர் போலும்...  ஜெயமோகன் தளத்தில் நிறைவான  அஞ்சலியை படிக்க நேர்ந்தது சற்று நெகிழ்வாக இருந்தது..  அதற்குள் வைரமுத்து சர்ச்சை.... ’கள்ளிக் காட்டு இதிகாசம்’ ’எல்லா நதியிலும் எனது ஓடம்’  ஆகியவற்றை எழுதியவரா அப்படி செய்வார் என்பதை நம்ப முடியவில்லை... ஜெயமோகன்  சொன்னாலும்.... வேறு ஏதோ நடந்திருக்கலாம்... வைரமுத்துவை இதில் இழுப்பது சரியாகப் படவில்லை....
========

கேரளா அரசு, தமிழக அதிகாரிகள் முல்லைப் பெரியாரைப் பார்வையிட அனுமதி மறுக்கும் மனுவை உச்ச நீதி மன்றத்தில் தொடுக்கிறது...மேக்கேதாண்டுவில் அணை கட்டுவோம் என்று கர்நாடகம் மறுபக்கம்...தமிழக மீனவர்கள் பிரச்சனை எப்போதும் இன்னொரு பக்கம்
போதாத குறைக்கு செம்மரக் கடத்தல் என்கிற பெயரில் அப்பாவி தமிழர்களை சுட்டுத் தள்ளியிருக்கும் ஆந்திர காவல்துறை (இது ஒரு படுகொலை என்று தமிழக போலீசே சொல்லியிருக்கிறதாக இந்துவில் செய்தி வந்திருக்கிறது)

என்ன நடக்கிறது... இந்திய ஒருமைப்பாட்டிற்கு வேட்டு வைக்கும் நிகழ்ச்சிகளை மத்திய அரசு வேடிக்கை பார்க்கக் கூடாது .. உடனடி தலையீடு வேண்டும் நிலைமைகள் கட்டுக் கடங்காமல் போகும் முன்... மத்திய அரசே...’இளைதாக  முள் மரம் கொல்க...’ என்றே கேட்கத் தோன்றுகிறது

கருத்துகள் இல்லை :