ஞாயிறு, 5 ஜூலை, 2015

பாபநாசம்.....

த்ருஷ்யம் படத்தின் அனுபவத்திலிருந்து வெளிவருவதற்குள் பாபநாசம் படம் எத்தனை சுகானுபவமாக இருக்கிறது...
Image result for papanasam movie stills

கமலுக்கென்ன கேட்கவேண்டுமா...? மோகன்லாலா கமலா என்கிற பேச்சுக்கே இடமில்லை... இருவரும் அவரவரர்க்ள் வாழும் இடத்திற்கேற்றவாறு (மலையாளி, தமிழன்)   வாழ்ந்திருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும்... 

ஆக கமலைப் பற்றிப் பேசவிரும்பவில்லை... ஆனால் கமல் நடிக்கும் படித்தில் யாராவது ஒரு கேரக்டர் அசத்துவார்கள்... உதாரணம் உத்தமவில்லனில் பாஸ்கர்..  

இந்தப் படத்தில் கமலுக்கு அடுத்த படியாக அல்லது அவருக்கு ஈடாக அசத்தியவர் ஆனந்த மகாதேவன்... அவர் வரும் காட்சிகளும் வெகு குறைவு.... பேசும் வசனங்களும் ஒரே ஒரு பக்கத்தில் கூட வந்துவிடும்... இறுதிக் காட்சியில் சில நிமிடங்கள் பேசும் போது உண்மையில் கமலைத் தூக்கிச் சாப்பிட்டுவிடுகிறார்... எத்தனை நேர்த்தி என்ன மிடுக்கு... அபாரம். என்று கைதட்டத் தோன்றுகிறது...

நான் கல்லூரியில் படிக்கும் போது மும்பை வாழ் தமிழராக பல இந்தி சீரியல்களில் அவரை இளமையாக பார்த்திருக்கிறேன்...

இத்தனை நாட்கள் எங்கிருந்தீர்கள் ஆனந்த்.....

கருத்துகள் இல்லை :