வெள்ளி, 10 ஜூலை, 2015

ஆபத்தான பாதை...

பீஹார் மாநிலத்தின் மேலவைக்குப் போட்டியிடும் வேட்பாளர்கள் பாதிக்கு மேல் கிரிமினல் வழக்கு உள்ளவர்களாம் என்கிற செய்தியைப் படிக்க நேரிட்டது.....

இந்தப் பக்கம் மத்திய பிரதேசத்தில்  நடப்பது எல்லாமே விபரீதம்தானோ  என்று எண்ணத் தோன்றுகிறது...  முதலில் யூனியன் கார்பைட் படுகொலைகள் தற்போது “வியாபம்“ என்கிற  SERVICE COMMISSION ... பொதுவாக எல்லா மாநிலத்திலும் அந்தந்த மாநில சர்வீஸ் கமிஷன் பரிட்சையில் ஊழல்கள் இருக்கும்... தமிழகத்திலும் நாம் கேள்விப் படுகிறோம்,....  ஆனால் ம.பி யில் நடப்பது வெறும் ஊழல்கள் மட்டுமல்ல கிட்டத்தட்ட 48 படுகொலைகள்... அனைவரும் இந்த ஊழல்கள் வெளிவர காரணமானவர்கள்... “அட அது அதிகம் பேசறாங்க சார்.. ஒரு ஏழு அல்லது எட்டு (?) பேர்தான் இருக்கும்...“ என்கிறார்கள் ஆளும் கட்சி ஆதரவாளர்கள்...

சற்றும் ஏற்க முடியாத கொடுமைகள் இவைகள்... ஊழல்களைக் கூட சகித்துக் கொண்டு வாழ்ந்துவிடலாம்... படுகொலைகளை சற்றும் ஏற்க முடியாது....

மக்களின் சுதந்திரத்திற்கும் ஜனநாயகத்திற்கும் பெரும் ஆபத்திற்கான அறிகுறிகள் இவைகள்...

முளையிலேயே கிள்ளி எறிய வேண்டியவை....

கருத்துகள் இல்லை :