திங்கள், 12 அக்டோபர், 2015

எழுத்தாளர்களின் அறச் சீற்றம்....

(இந்திய) வரலாறு காணாத வகையில் எழுத்தாளர்களின் எழுச்சியைப் பார்க்க நேர்கிறது... நயன்தாராசேகல் கவிஞர் அசோக் வாஜ்பேயியை தொடர்ந்து, உருது நாவலாசிரியர் ரகுமான் அப்பாஸ் தனக்கு வழங்கப்பட்ட சாகித்ய அகாடமி விருதை திருப்பி அளிக்க முடிவு செய்திருப்பதாக தெரிவித்துள்ளார்.     பரிசுகளை திருப்பிக் கொடுப்போர் பட்டியல் தொடரும் போலத் தெரிகிறது.. 


தமிழ்நாட்டில் பாரதிராஜா இலங்கைப் பிரச்சனையை ஒட்டி தனது பட்டத்தை துறந்த நிகழ்வு நடந்தது...

படைப்பாளிகளின் அறச்சீற்றம் என்பது மிக முக்கியமானது.. ஆளும் வர்க்கம் கணக்கில் கொள்ள வேண்டியது... எழுத்தாளர்கள் தன்னியல்பாக சனநாயக வாதிகள்... அப்படி இருந்தால்தான் எழுதவும் முடியும்....பொதுவாக எழுத்தாளர்கள்  மென்மையானவர்கள்.... ஆனால் பெரும் சமூகக் கோபம் கொண்டவர்கள் என்ற கூற்றை நான் கேட்டிருக்கிறேன்... தனது கையறு நிலையில் கோபத்தை எழுத்தால் காட்டுபவர்கள் என்றும் சொல்வார்கள்...  

தற்போது அரவிந்த் மலகட்டி என்பவர் கன்னட எழுத்தாளர்  சாகித்ய அகதெமி பதவியிலிருந்து விலகிவிட்டார் என்ற செய்தி வந்திருக்கிறது...

முற்போக்கு  கன்னட எழுத்தாளர் கல்புர்கி படுகொலை கோவிந்த் பன்சாரோ படுகொலை மற்றும் தாத்ரி சம்பவம் ஆகியவைதான் மேற்கண்ட எழுத்தாளர்களை அறச் சீற்றம் கொள்ள வைத்திருக்கிறது...(தாத்ரி சம்பவம்: கடந்த செப்டம்பர் 28 ஆம் தேதி வீட்டில் மாட்டிறைச்சி வைத்திருந்தாக முதியவர் இக்லாக், 200 பேர் கொண்ட கும்பலால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். அவரது மகனும் படுகாயமடைந்தார்.)..

குஜராத் கலவரத்தின் போதுகூட இப்படி எழுத்தாளர்கள் நடந்து கொண்டதாகத்  தெரியவில்லை... 

ஒரு  வேளை இந்துத்வ சக்திகள்  மத்திய அரசின் தலைமையில் வந்து விட்டதால் இந்தப் பதற்றம் இருக்கலாம்..

ஓருவர் என்ன சாப்பிட வேண்டும் என்பதை எந்த அரசிலும் மதமும் கட்டுப் படுத்த முடியாது... அப்படி செய்தால் அதை சற்றும் சகித்துக்  கொள்வே முடியாது...

இவ்வித எதிர்ப்புகள் ஜனநாயக நாட்டில் எழுவது அவசியம்.. அரசும் தன் போக்கை மாற்றிக் கொள்ள உதவும்.. மோடியும் இதன் பின்னணியில்தான் பீகார் தேர்தலில் இந்து முஸ்லிம ஒற்றுமையை பேசியிருக்கிறார் என்பது புரிகிறது.. 

சம்பந்தப் பட்டவர்கள் மனசாட்சியை இவை உலுக்கும் என்று நம்பலாம்... 

அதே சமயம் நரேந்திர தபோல்கர் படு கொலையின் (அப்போதைய காங்கிரஸ் ஆட்சி) போதும் கமலின் விஸ்வரூபம் படத்திற்கு தேவையற்ற எதிர்ப்பு வந்த போதும் எழுத்தாளர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்  என்று எதிர் தரப்பு கேட்பதையும் புறந்தள்ளிவிட முடியாது என்பதையும் பார்க்க வேண்டும்.. சமீபத்தில் உ.பியில் தலித்துகளுக்கு எதிராக போலீஸ் நடந்து கொண்டதை ஜெயமோகன் தனது வலை தளத்தில் எழுதியிருக்கிறார்...( அதன் சுட்டி http://www.jeyamohan.in/79511#.VhsrZOyqqko) அதையும் கணக்கில் கொள்ள வேண்டும்.. வங்க தேச எழுத்தாளர் தஸ்லிமா அவர்கள் இந்தியா வந்திருந்த போது மதவாதிகள் எப்படி நடந்து கொண்டார்கள் என்பதும் அனைவரும் அறிந்ததே என்பது எதிர்தரப்பினர் வாதம்..

ஒரு வேளை மதவாதிகள் என்பவர்களே ஒரே மாதிரித்தான் நடந்து கொள்கிறார்களோ.....?.

அரசும் அனைவரும் அமைதியாக வாழ்வதை உறுதிப் படுத்த வேண்டியது அவசியம் அதற்காக சமூக அறிஞர்கள் எழுத்தாளர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டும்.....

சமூக அறிஞர்கள்.  அறிவு ஜீவிகள் ஜனநாயகவாதிகள்  ஆகியோதை நாம் மன்றாடிக் கேட்டுக் கொள்வது காய்தல் உவத்தல் அன்றி  சமன் செய்து சீர் தூக்கிப் பாருங்கள் என்பதே.... 

கருத்துகள் இல்லை :