புதன், 20 ஜூலை, 2016

நிஜக் கபாலி....

Image result for piyush manush images


சமீபத்தில் சூழலியலாளர் ப்யூஷ் மனுஷ் கைதைப் பற்றி தொலைக் காட்சியில் காட்டினார்கள்.  நீதியரசரே ப்யூஷ் அவர்களின் சேவையைப் பற்றி பாராட்டி வேறு தனது    கருத்தாகக்        கூறினார்.... 

அவரைப் பற்றிய செய்திகளை முழுவதும் படித்தேன்...  ARM CHAIR CRITICS நமது நாட்டில் அதிகம்... உண்மையில் இவர் ஒரு ஹீரோதான்... 

நம் நாட்டின் இயற்கை வளங்களைப் பற்றி அக்கரை இருப்பவர்கள் இவரின் சேவையை பாராட்டமல் ஆதரவளிக்காமல் இருக்க முடியாது...

இவரைப் பற்றி பாராட்டு தெரிவிப்பவர்களில் முக்கியமானவர்களாக நான் கருதுவது திரு ஜெயமோகன் மற்றும் நண்பர் திரு முத்து நிலவன்... அவர்கள் எழுதிய சுட்டியை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.
திரு ஜெயமோகன் சுட்டி http://www.jeyamohan.in/89042#.V470ZNK7iko
திரு முத்துநிலவன் சுட்டி http://valarumkavithai.blogspot.com/2016/07/blog-post_20.html

தொண்டுகென்றே அலைவான்.....
கேலிக்கு ஆளாவான்...
கண்டு கொள்வாய் அவனை
ஞான தங்கமே...
அவன் கடவுளில் பாதியடி ஞான தங்கமே...

என்கிற பாடல் வரிகள்தான் நினைவுக்கு வருகிறது...

2 கருத்துகள் :

வேகநரி சொன்னது…

உண்மையான ஹீரோவை அறிமுகபடுத்த கபாலி பெயரை சொல்ல வேண்டிய துயரநிலை தான்.

Badri Nath சொன்னது…

வருகைக்கு கருத்துக்கு நன்றி வேகநரி....இளைஞர்கள் கபாலி என்றால்தான் ஹீரோ என்கிறார்கள்...அவர்கள் வழீ சென்றுதான் உண்மையான ஹீரோ இவர்தான் என்போமே....