வெள்ளி, 30 செப்டம்பர், 2016

சரியான பதிலடிதான்..

காஷ்மீர் மாநிலம், யூரியில் சமீபத்தில், அதிகாலை வேளையில் தூங்கிக்கொண்டிருந்த  நமது ராணுவ வீரர்கள் மீது பாகிஸ்தான்  ஆதரவுத் தீவிரவாதிகள்     தாக்குதல் நடத்தியது படு கேவலமானது.

இந்தத் தீவிரவாதிகள் அழித்தொழிக்கப்பட வேண்டியவர்கள் என்பதில் மாற்றுக்  கருத்தில்லை..   அநியாயமாக  நமது 18 ராணுவ வீரர்களை பலி கொடுக்க  நேர்ந்துவிட்டது,,

அதற்கு பதிலடியாக நேற்று நமது ராணுவ வீரர்கள் POKயில் தீவிரவாத முகாம்களை அழித்தொழித்திருக்கிறார்கள்.. அதில் பாக் ராணுவ வீரர்களும் உண்டு..

ஏற்கனவே சார்க் மாநாட்டில் இந்தியா பங்கேற்காததால் சார்க் மாநாடே காலியானது.. இத்தனை பட்டும் பாக் திருந்தாமல் காஷ்மீரத்தில் தீவிரவாதிகளுக்கு ஆதரவு தந்து கொண்டிருக்கிறது..

நேற்று நமது வீரர்கள் நடத்திய பதில் தாக்குதல் போன்ற மொழிகள்தான் அவர்களுக்குப் புரியும் என்றால் அதை தொடர்வதைத் தவிர வேறு மார்க்கமில்லை என்றே தோன்றுகிறது..
                                   

2 கருத்துகள் :

KABEER ANBAN சொன்னது…

இறப்பதற்கு அஞ்சோம் உலகிலே
பிறந்த எவரும் சாவது உறுதி
கதறிப் பணியோம் வன்முறைக்கே
கலங்க அடிப்போம் இது உறுதி

மகன் போனால் மகன்கள் உண்டு
தமயன் போனால் தமயனா ருண்டு
எமக்கு உண்டு அன்பின் மொழி
உமக்கு சொல்வோம் தெண்டின் மொழி

மேலே படித்தது 'பாதை தவறிய கால்கள்'என்று வன்முறையை கண்டித்து நான் எழுதியதில் சில வரிகள். எட்டு வருடங்களுக்கு பின் கையில் தடியை எடுக்க முடிவு செய்துள்ளது. இப்பொழுதாவது துணிச்சல் வந்திருக்கே. ஒருவேளை சர்வதேச ரீதியாகவும் ஒசாமாவிற்கு இடம் கொடுத்ததாலும் அனுதாபத்தை இழந்து பலவீனப்பட்டிருப்பதால் சீனாவின் குறுக்கீடு அதிகமாக இருக்காது என்பது போன்ற கணக்குகள் பின்னணியில் இருக்கலாம். முழு பதிவையும் படிக்க

http://nirmal-kabir.blogspot.in/2008/11/blog-post_27.html

Badri Nath சொன்னது…

நன்றி கபீர் அன்பன்...உங்கள் பதிவை படித்தேன்.. சிறப்பாக இருந்தது...