ஞாயிறு, 8 அக்டோபர், 2017

சாருவின் வழியில்…

கமல ஹாசனை விட சாருஹாசன் தமிழகத்தை மிக நன்றாக கணித்து வைத்திருக்கிறார்கள் என்றே கூற வேண்டும்.  அவரின் பேட்டி தந்தி டிவியில் ஒளிபரப்பினார்கள். அவர் கூறிய ஒவ்வொன்றும் முத்தான வார்த்தைகள் என்றால் மிகையில்லை.

 சாதி ரீதியாக பிரிந்து கிடக்கும்  ஒரு நாட்டில், அரசியல் வேட்பாளர்களும் அவ்வாறே தேர்வு செய்யப்படும் சூழலில், கமல் போன்ற சிறுபான்மை சாதியில் பிறந்தவர்கள் என்னதான் முற்போக்கு பேசியினாலும் ஓட்டுக்கள் விழ வாய்ப்பில்லை என்பது உண்மைதான்.

சாரு அவர்களின் பேட்டியில் பல விஷயங்கள் சுவாரிஸ்யமாகவும் சிந்தனைக்குரியதாகவும் இருந்தது. பெரியார்  திராவிட இயக்கம் கடந்த பல வருடங்களாக பிராமண எதிர்ப்பு பிரச்சாரம் வலுவாக செய்ததின் விளைவாக பிராமண எதிர்ப்பும் மறுபுறத்தில் சாதி ரீதியாக திரட்டல் வளர்ந்து கட்டித்தட்டி போய்விட்டது.  பெரியாரின் பகுத்தறிவைவிட பிராமண எதிர்ப்புக்கு அழுத்தம் அவர் காலத்திலேயே தரப்பட்டது. அவருக்கு பின் பகுத்தறிவு பின்னுக்கு தள்ளப்பட்டு முழுவதும் பிராமண எதிர்ப்பே பெரியாரின் வாரிசுகள் எடுத்துக்கொண்டார்கள். அது ஒரு வகையில் அரசியலுக்கு பயன் பட்டது.. இத்தனையாண்டு தமிழகம் அப்படிதான் மாறிப்போய் உள்ளது. அதில் பிராமண எதிர்ப்பு முற்போக்காகவும் சாதி ரீதியில் திரள்வது பிற்போக்காகவும் சொல்லப்பட்டாலும் இரண்டும் பிழையானது என்றே நான் கருதுகிறேன்.  

சாரு சொல்வது போல அதெப்படி எல்லா துறைகளிலும் பிராமணர்கள் மட்டுமே நிறைத்திருந்தார்கள் என்பதில் உண்மை இருக்க முடியும்? அவர்கள் மக்கள் தொகையில் வெறும் 3 சதம் இருக்கும் போது… எல்லா துறையும் அவர்கள் நிறைத்திருந்தார்கள் என்பது லாஜிக் இல்லாத வாதம். உண்மையில் ஜஸ்டிஸ் கட்சியினருக்கும் பிராமணர்களுக்கும் இடையே இருந்த போட்டி மனப்பான்மையே இந்த வாதம் வளர வழி வகுத்தது. இறுதியில் ஒரு பாதி உண்மையான இந்த வாதம் முழு உண்மையாக தோற்றம் அளித்தது. அதுவே மக்களிடம் எடுத்து செல்லப்பட்டு ஜஸ்டிஸ் கட்சியினரின் அரசியல் வாழ்வுக்கு அடித்தளமிட்டது.

ஏன் கேரளாவில் கர்நாடகத்தில் ஆந்திரத்தில் மகாராஷ்டிரத்தில் தலித்துகளோ பிற்படுத்தப்பட்ட மக்களோ இல்லையா…? அவர்களிடம் இந்த வாதம் ஏன் எடுபடவில்லை என்பது மிக முக்கிய கேள்வி. சாரு சொல்வதை போல தமிழகம் என்பது பெரும்பாலும் 60 சதம் பிற மொழிக்காரர்களும் 40 சதம் மட்டுமே  தமிழர்களாகவும் இருப்பதும் ஒரு காரணம். அவர்களை ஒன்றிணைக்க பிராமண எதிர்ப்பு பயன்பட்டது.

என்னதான் பகுத்தறிவு பிரச்சாரம் செய்தாலும், தமிழகத்தில் கடவுள் பக்தியோ சடங்கு சம்பிரதாயங்களோ குறையவே இல்லை. மாறாக அதிகமாகியே உள்ளது. மேலும் பல திராவிட பிரமுகர்களும் இவைகளை கடை பிடிப்பது இணைய தளத்தில் வந்து சிரிப்பாய் சிரிக்கிறது. இந்த சூழலில் பிராமணர்கள்தான் அனைத்துக்கும் காரணம் என்று அவர்கள் மீது அனைத்து பாவங்களை ஏற்றுவது சமூகத்தில் அவர்கள் சிறுபான்மையினர் என்பதுதான் இன்னும் தெளிவாய் சொன்னால் அவர்கள் ஓட்டு தீர்மானிக்கும் ஓட்டல்ல என்பதே.

சாரு சொல்வதை போல, ஒரு வகையில் இந்த தலைமுறை வரை இந்த வாதம் நீடிக்கும் என்பதே நடக்கும்ஆனால் யோசித்துப்பார்த்தால் இந்த விஷயங்களை பற்றி பேசுவது விவாதிப்பது எழுதுவது எல்லோரும் சிறுபான்மையினர்தான்.

 பெரும்பான்மை இதற்கு வெளியே நிற்கிறது. அந்தப் பெரும்பான்மை அவ்வப்போது பிரச்சனைக்கு தகுந்தவாறு எந்தப்பக்கம் சாய்கிறதோ அந்தப்பக்கம் காற்று வீசுகிறது..





2 கருத்துகள் :

வேகநரி சொன்னது…

பதிவில் நீங்க தெரிவித்தவை அத்தனையும் உண்மை.
பெரியாரின் ஜாதி வெறுப்பு கருத்துக்களை தொண்டர்கள் இறுக்கமாக பிடித்து கொண்டார்கள். மூடநம்பிக்கைகளோ பெருக்கெடுத்து ஓடுகின்றன.
//அவர்கள் மக்கள் தொகையில் வெறும் 3 சதம் இருக்கும் போது… எல்லா துறையும் அவர்கள் நிறைத்திருந்தார்கள் என்பது லாஜிக் இல்லாத வாதம்.//
பெரியாரின் ஜாதி துவேஷ கருத்துக்கள் தான் அவர்களிடம் நிறைந்திருப்பதால் அங்கே லாஜிக்கிற்கோ, பகுத்தறிவுக்கோ இடம் கிடையாது.

silanerangalil sila karuththukkal சொன்னது…

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வேகநரி