ஞாயிறு, 12 மே, 2013

மகாநதியும் அங்காடித்தெருவும் போலவா அனைத்தும் நடக்கின்றன


தமிழ் திரைப்பட உலகில் முக்கியமான படைப்புகள் வருவது குறைவுதான்,  அவ்வப்பொழுது சில படங்கள் நிச்சயமாக முக்கிய படைப்புகள்தான் திகழ்கின்றன.  அதே சமயம் மக்கள் ஆதரவும் பெறும் படங்களாக ஆவது சில படைப்புகள்தான்.  இந்த இரண்டு குணாதிசயங்களுடன் வந்த படங்கள் வரிசையில் முக்கியமானவை
1)   மகாநதி
2)   அங்காடித் தெரு
இரண்டையும் சற்று காலதாமதமாக பரிசீலிக்கலாம்,  பட விமர்சனமா என்று சிலர் சிரிக்க வேண்டாம்.....
மகாநதி


1)முதலில் கிருஷ்ணசாமியின் மனைவி மண்டையைப் போடுகிறாள் (தாய் தந்தை மாமனார் முன்பு டிக்கெட் வாங்கியிருப்பார்கள்,, பரவாயில்லை)
2)   பிசினஸ் டெவலப்மெண்ட்க்காக (நியாயமான ஆசைதான்) .ஊரிலிருக்கும் வீடு நிலம் நீச்சுக்களை விற்றுவிடுகிறான்
3)   அவன் ஒரு ப்ராடிடம் (fraud)  மாட்டிக் கொள்கிறான்
4)   பிசினஸ் புட்டுக் கொள்கிறது
5)   மக்களால் அடித்து துவைக்கப் படுகிறான்
6)   சிறைக்கு சென்று விடுகிறான்
7)   வீடு பறிபோய்விடுகிறது
8)   பெண் கெடுக்கப்பட்டு விபசார விடுதியில் மாட்டிக் கொள்கிறாள்
9)   பையன் காணாமல் போகிறான்
10) மாமியார் வியாதிக்கு பணமில்லாமல் மவுத் ஆகிவிடுகிறாள்
11) சிறையில் தாக்கப் படுகிறான்
12) சிறைவாசம் நீட்டிக்கப் படுகிறது
13) மீண்டு வந்தால் ஏக பிரச்சனையில் மகள் மகனை மீட்கிறான்
14) மீண்டும் செய்யாத குற்றத்துக்காக தண்டனை
15) அதனால் கொலை செய்கிறான்
16) மீண்டும் சிறை
தொடர்ந்து ஒருவனுக்கு நிஜமாகவே இப்படி நடந்தால் அவன் எப்படி இருப்பான் என்றே நினைக்கவே பயமாக இருக்கிறது.. கமலுக்கு ஒரே படத்தில் அனைத்து அக்கிரமங்களையும் சொல்ல ஆசைப் பட்டு செய்திருக்கலாம்,

சரி…. அடுத்த படம்

அங்காடித் தெரு

அந்த தென்பாண்டி சீமையில் பிறந்த லிங்கத்துக்கு நடந்தது என்ன
1)   நன்றாகப் படிப்பான் ஆனால் வறுமை
2)   பிளஸ் டூ வில் அதிக  மதிப்பெண் வாங்கிய சமயம், அப்பா அவுட்… ஆக்சிடெண்ட்
3)   அந்த சமயம் வந்த அண்ணாச்சி கடை ஊழியர்களிடம் மாட்டிக் கொள்கிறான்
4)   அங்கே கடையில் அண்ணாச்சியால் கசக்கிப் பிழியப் படுகிறான்
5)   அவனின் காதலியின் கதை சுருக்கம் இதைவிட மோசம்
6)   சூபர்வைசரால் வதைக்கப்படுகிறான். அதே சூபர்வசைர் பலரை அப்படி வதைக்கிறான்
7)   காதலியின் தங்கை நாயைப் போல நடத்தப் படுவது
8)   காதலிப்பதால் வேலையை விட்டு விரட்டப்படுகிறான்
9)   போலிசில் வேறு பொய் கேஸ்
10) அதிலிருந்து வெளிவந்து இருவரும் தங்குவதற்கு வீடில்லாமல் ரோட்டில் படுத்து லாரியால் விபத்து
11) காதலியின் கால் அவுட்.
இந்த இரண்டு படங்கள் சொல்ல வந்த கதைகள் நிஜத்தின் பக்கமாக இருக்கிறதா… sweeping tragedy யாக சொல்லிக் கொண்டே சென்றால் அது நிஜமாகி விடும் என்று நினைத்திருக்கலாமா.....


அப்படி என்றால்......... நான் ஒரு கதை சொல்கிறேன்..
ஒரு மனிதன் நடந்து போகிறான்
1)   அவனுக்கு கால் சுளுக்கிக் கொள்கிறது
2)   தடுக்கி விழ்கிறான்
3)   அவனை நாய் பிறாண்டி விடுகிறது
4)   பக்கத்தில் ஒரு தேள் கடித்துவிடுகிறது
5)   அதே பக்கம் சென்ற பாம்பு……………………………….

இது சரியாக இருக்குமா…………………

கருத்துகள் இல்லை :