வியாழன், 30 மே, 2013

ஒரு மைக்ரோ கதை

நான் என்னுடைய இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தேன். அலுவலக நேரம். சாலைகளில் அதிக எண்ணிக்கை வாகனங்கள்.  பிரதான சாலையில் திரும்பும் போது என்னுடைய வண்டியை இன்னொருவன் உரசிவிட்டான். இருவருக்கும் அடிபடவில்லை. வண்டியிலும் கூட சேதம் இல்லைதான்.. சிறிய உரசல் தவிர. 

இதுதான் மேட்டர்..

அதை இரண்டுவிதமாக ’டீல்’ செய்வோம்...

முதல் வகை

”யேய்... பார்த்து வர மாட்ட...பெரிய ஏரோபிளேன்ல வர்றதா நினைப்பா...” நான்
”நீ பாத்து வா முதல்ல.. ராங்கல கட் பண்ணது யாரு.. நீயா நானா...” அவன்
”யேய்.. மரியாதயா பேசு... அப்பறம்....”நான்
”யேய்.. என்ன பெரிய இவனா நீ....”அவன்
”டேய்..பெரிய தாதாவா நீ...” வண்டிய விட்டு அவனை நெருங்க....
”என்னடா பெரிசா பேசற...”, அவனும் கித்தாய்ப்பாக முன்னேற...
நான் முன்னேற அவன் முன்னேற...
கிட்டத்தட்ட வடிவேல் கதை போல ”சண்டையில கிளியாத சட்ட உண்டா...”ரேஞ்சுக்கு செல்ல
களேபரம்.. பிறகு வேடிக்கை பார்த்த கூட்டம் கொஞ்ச நேரம்  எங்கள் சண்டையை enjoy செய்துவிட்டு போலீஸ் வந்ததும் பஞ்சாயத்து.. மறுபடியும் இரண்டு பேர் வண்டியையும்  காவல் நிலையம் எடுத்துச் சென்று.. அபராதம்... அறிவுறுத்தல்.. மிரட்டல் இத்யாதி. இத்யாதி...

இரண்டாம் வகை.

” சாரி.. சார்.. சட்டுனு வந்துட்டேன்..” நான்
”பரவாயில்ல..” அவர்
”எக்ஸ்ட்ரீம்லி சாரி எகெய்ன்...” புன்னகையுடன்
” இட்ஸ் ஓக்கே சார்..” அவரும் புன்னகையுடன் சென்றார்.

===
இதுதான் கதை..
நான் இப்போதெல்லாம் இரண்டாம் வகையைத்தான் விரும்புகிறேன்...
”எங்கும் சாந்தி நிலவவேண்டும்...”
===
பிகு
இந்த சம்பவம் என் நண்பர் ஒருவர் சொன்னார்... ஆனால் 1975 லில்   Abbas Kiarostami என்கிற ஈரானிய இயக்குனர் Two Solutions For One Problem என்கிற குறும் படத்தை இயக்கியுள்ளார்.. யூடியூப்பில் இருக்கிறது.. முடிந்தால் பாருங்கள் எத்தனை அழுத்தமான விசயத்தை நான்கு நிமிடத்தில் சொல்லியுள்ளார்..

1 கருத்து :

S.Raman,Vellore சொன்னது…

உங்கள் விருப்பம் நன்றாக உள்ளது. பெரும்பாலும் அவ்வாறு நிகழ்வதில்லை என்பது சோகமான யதார்த்தம்